September 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 27

0

Today Special Historical Events In Tamil | 27-09 | September 27

September 27 Today Special | September 27 What Happened Today In History. September 27 Today Whose Birthday (born) | September-27th Important Famous Deaths In History On This Day 27/09 | Today Events In History September-27th | Today Important Incident In History | புரட்டாதி 27 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 27-09 | புரட்டாதி மாதம் 27ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 27.09 Varalatril Indru Nadanthathu Enna| September 27 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 27/09 | Famous People Born Today September 27 | Famous People died Today 27-09.

 • Today Special in Tamil 27-09
 • Today Events in Tamil 27-09
 • Famous People Born Today 27-09
 • Famous People died Today 27-09
 • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 27-09 | September 27

  உலக சுற்றுலா நாளாக கொண்டாடப்படுகிறது.
  விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 27-09 | September 27

  1066ல் நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர்.
  1529ல் உதுமானியப் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டார்.
  1540ல் இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார்.
  1590ல் திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்.
  1605ல் கிர்க்கோல்ம் நகரில் இடம்பெற்ற போரில் சுவீடன் இராணுவத்தை போலந்து-லித்துவேனிய இராணுவம் தோற்கடித்தது.
  1777ல் அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகளின் முற்றுகையைத் தவிர்க்கும் பொருட்டு, பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் நகரம் இந்த ஒரு நாள் மட்டும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக இருந்தது.
  1791ல் யூதர்களுக்கு முழுமையான குடியுரிமை வழங்குவதற்கு பிரான்சின் நாடாளுமன்றம் வாக்களித்தது.
  1822ல் ரொசெட்டாக் கல் சான்-பிரான்சுவா காம்போலியன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.
  1825ல் உலகின் முதலாவது பயணிகள் நீராவித் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.
  1854ல் “ஆர்க்டிக்” நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
  1893ல் சிகாகோவில் இடம்பெற்ற உலகச் சமயங்களின் நாடாளுமன்ற மாநாடு முடிவடைந்தது.
  1916ல் எதியோப்பியாவில் இடம்பெற்ற அரண்மனைப் புரட்சியை அடுத்து ஐந்தாம் இயாசு மன்னர் பதவியை இழந்தார்.
  1922ல் முதலாம் கான்ஸ்டன்டைன் கிரேக்க மன்னர் பதவியில் இருந்து முடி துறந்தார். அவரது மூத்தமகன் இரண்டாம் ஜார்ஜ் மன்னராக முடி சூடினான்.
  1928ல் ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.
  1938ல் குயீன் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் இருந்து தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
  1940ல் இரண்டாம் உலகப் போர்: செருமனி, சப்பான், இத்தாலி ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில் பெர்லின் நகரில் கையெழுத்திட்டன.
  1944ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியின் கெசெல் நகர் மீது கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய தாக்குதல் ஆகும்.
  1947ல் தென்னிந்தியத் திருச்சபை சென்னையில் நிறுவப்பட்டது.
  1949ல் சேங் லியோன்சாங் சீனாவின் கொடியை வடிவமைத்தார்.
  1956ல் அமெரிக்க வான்படைக் கப்டன் மில்பேர்ன் ஆப்ட் மக் 3 ஐத் தாண்டிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார். சிறிது நேரத்தின் பின்னர் விமானம் கட்டுக்கடங்காமல் வீழ்ந்து நொறுங்கியதில் அவர் கொல்லப்பட்டார்.
  1959ல் சப்பான், ஒன்சூ தீவில் இடம்பெற்ற சூறாவளியில் 5,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
  1962ல் யெமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.
  1964ல் ஜான் எஃப். கென்னடியை லீ ஹாவி ஒசுவால்ட் என்பவன் வேறு எவரினதும் தூண்டுதல் இன்றிக் கொலை செய்ததாக வாரன் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
  1975ல் எசுப்பானியாவில் கடைசி மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. போராளிக் குழுவைச் சேர்ந்த ஐவர் தூக்கிலிடப்பட்டனர். உலகெங்கும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
  1977ல் சப்பான் ஏர்லைன்சு வானூர்தி மலேசியா, சுபாங் நகரில் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 79 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.[1]
  1983ல் ரிச்சர்ட் ஸ்டால்மன் குனூ செயற்றிட்டத்தை அறிவித்தார்.
  1993ல் அப்காசியாவில் சுகுமியில் ஜார்ஜியப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
  1994ல் மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஆங் சான் சூச்சி உருவாக்கினார்.
  1996ல் ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அரசுத்தலைவர் புரானுதீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அரசுத்தலைவர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
  1998ல் கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.
  1998ல் கூகுள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.
  2001ல் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  2002ல் கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.
  2007ல் நாசா டோன் விண்கலத்தை சிறுகோள் பட்டையை நோக்கி ஏவியது.
  2008ல் இந்தியாவின் தலைநகர் தில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்தனர்.
  2008ல் சீன விண்வெளி வீரர் சாய் சிகாங்க் விண்வெளியில் நடந்த முதலாவது சீனர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
  2014ல் சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.

  வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 27-09 | September 27

  1696ல் இத்தாலிய ஆயரும் புனிதருமான‌ அல்போன்ஸ் மரிய லிகோரி பிறந்த நாள். (இறப்பு-1787)
  1722ல் அமெரிக்க அரசியல் அறிஞரான‌ சாமுவேல் ஆடம்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1803)
  1814ல் அமெரிக்க வானியலாளரான‌ டானியல் கிர்க்வுட் பிறந்த நாள். (இறப்பு-1895)
  1824ல் அமெரிக்க வானியலாளரான‌ பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு பிறந்த நாள். (இறப்பு-1896)
  1905ல் தினத்தந்தி தமிழ் நாளிதழ் நிறுவனரான‌ சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள். (இறப்பு-1981)
  1918ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வானியலாளரான‌ மார்ட்டின் இரைல் பிறந்த நாள். (இறப்பு-1984)
  1924ல் ஈழத்து எழுத்தாளரான‌ தேவன் யாழ்ப்பாணம் பிறந்த நாள். (இறப்பு-1982)
  1925ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவரான‌ ராபர்ட் எட்வர்ட்சு பிறந்த நாள். (இறப்பு-2013)
  1926ல் தென்னிந்திய நடிகையும் பாடகியுமான‌ ஜி. வரலட்சுமி பிறந்த நாள். (இறப்பு-2006)
  1929ல் தென்னிந்தியத் திரைப்பட இசை அமைப்பாளரான‌ புகழேந்தி பிறந்த நாள். (இறப்பு-2005)
  1932ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ ஒலிவர் வில்லியம்சன் பிறந்த நாள்.
  1932ல் பாக்கித்தானி-இந்திய இயக்குநரான‌ யஷ் சோப்ரா பிறந்த நாள். (இறப்பு-2012)
  1933ல் நகைச்சுவை நடிகரான‌ நாகேஷ் பிறந்த நாள். (இறப்பு-2009)
  1953ல் இந்திய குருவும் ஞானியுமான‌ அம்ருதானந்தமயி பிறந்த நாள்.
  1957ல் தமிழக இடதுசாரி அரசியல்வாதியான‌ லீலாவதி பிறந்த நாள். (இறப்பு-1997)
  1965ல் இந்திய பரதநாட்டியக் கலைஞரும் நடிகையுமான‌ சுதா சந்திரன் பிறந்த நாள்.
  1972ல் அமெரிக்க நடிகையும் தொழிலதிபருமான‌ கிவ்வினெத் பேல்ட்ரோ பிறந்த நாள்.
  1981ல் இந்தியத் துடுப்பாளரான‌ லட்சுமிபதி பாலாஜி பிறந்த நாள்.
  1981ல் நியூசிலாந்து துடுப்பாளரான‌ பிரண்டன் மெக்கல்லம் பிறந்த நாள்.
  1982ல் அமெரிக்க ராப் இசைக் கலைஞரும் நடிகருமான‌ லில் வெய்ன் பிறந்த நாள்.
  1984ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ காயத்ரி ஜெயராமன் பிறந்த நாள்.
  1988ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ சந்தியா பிறந்த நாள்.

  வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 27-09 | September 27

  1590ல் திருத்தந்தையான‌ ஏழாம் அர்பன் இறப்பு நாள். (பிறப்பு-1521)
  1660ல் பிரெஞ்சு புனிதரான‌ வின்சென்ட் தே பவுல் இறப்பு நாள். (பிறப்பு-1581)
  1833ல் இந்திய சீர்திருத்தவாதியான‌ இராசாராம் மோகன் ராய் இறப்பு நாள். (பிறப்பு-1772)
  1933ல் வங்காளக் கவிஞரும் பெண்ணியவாதியுமான‌ காமினி ராய் இறப்பு நாள். (பிறப்பு-1864)
  1972ல் இந்தியக் கணிதவியலாளரான‌ சீர்காழி இரா. அரங்கநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1892)
  1975ல் தமிழக வேதியலறிஞரான‌ டி. ஆர். சேஷாத்ரி இறப்பு நாள். (பிறப்பு-1900)
  1996ல் ஆப்கானித்தானின் 7வது அரசுத்தலைவரான‌ முகமது நஜிபுல்லா இறப்பு நாள். (பிறப்பு-1947)
  2000ல் ஈழத்து ஓவியரான‌ அ. மாற்கு இறப்பு நாள். (பிறப்பு-1933)
  2008ல் இந்தியப் பாடகரான‌ மகேந்திர கபூர் இறப்பு நாள். (பிறப்பு-1934)
  2011ல் செயற்கையாக உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியாளரான‌ வில்சன் கிரேட்பாட்ச் இறப்பு நாள். (பிறப்பு-1919)
  2015ல் ஆங்கிலேய-ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ பிராங்க் டைசன் இறப்பு நாள். (பிறப்பு-1930)
  2017ல் அமெரிக்கப் பதிப்பாளரும் தொழிலதிபருமான‌ இயூ எஃப்னர் இறப்பு நாள். (பிறப்பு-1926)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

  By: Tamilpiththan

  உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

  Previous articleஇன்றைய ராசி பலன் 09.09.2022 Today Rasi Palan 09-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
  Next articleSeptember 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 26