September 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 22

0

Today Special Historical Events In Tamil | 22-09 | September 22

September 22 Today Special | September 22 What Happened Today In History. September 22 Today Whose Birthday (born) | September-22nd Important Famous Deaths In History On This Day 22/09 | Today Events In History September-22nd | Today Important Incident In History | புரட்டாதி 22 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 22-09 | புரட்டாதி மாதம் 22ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 22.09 Varalatril Indru Nadanthathu Enna| September 22 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 22/09 | Famous People Born Today September 22 | Famous People died Today 22-09.

  • Today Special in Tamil 22-09
  • Today Events in Tamil 22-09
  • Famous People Born Today 22-09
  • Famous People died Today 22-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 22-09 | September 22

    விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பல்காரியா, உதுமானியப் பேரரசிடம் இருந்து 1908)
    விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (மாலி, பிரான்சிடம் இருந்து 1960)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 22-09 | September 22

    1586ல் நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர்.
    1692ல் ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர்.
    1711ல் டஸ்கரோரா பழங்குடிகள் அமெரிக்கா, வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப்படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர்.
    1761ல் மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர்.
    1784ல் அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.
    1789ல் ரிம்னிக் சண்டையில் உதுமானியப் படைகளைத் தோற்கடித்த அலெக்சாந்தர் சுவோரொவ் உருசிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
    1857ல் உருசியாவின் லெபோர்ட் என்ற கப்பல் பின்லாந்து வளைகுடாவில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி மூழ்கியதில் 826 பேர் உயிரிழந்தனர்.
    1896ல் பிரித்தானியாவின் அரச வம்சத்தில் விக்டோரியா மகாராணி அவருடைய தாத்தா மூன்றாம் ஜார்ஜை விட அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையைப் பெற்றார்.
    1914ல் செருமனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.
    1934ல் வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: போலந்து முற்றுகையின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக செருமானிய-சோவியத் இராணுவ அணிவகுப்பு பிரெஸ்த்-லித்தோவ்சுக் என்ற இடத்தில் இடம்பெற்றது.
    1941ல் யூதர்களின் புத்தாண்டில் உக்ரைனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதல் நாட்களில் கொல்லப்பட்ட 24,000 யூதர்களில் உயிர் தப்பியோராவர்.
    1960ல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து செனிகல் விலகியதை அடுத்து சுடானியக் குடியரசு மாலி எனப் பெயர் மாற்றம் பெற்றது.
    1965ல் இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.
    1970ல் மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியில் இருந்து விலகினார்.
    1975ல் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் கொலை முயற்சியில் தப்பினார்.
    1980ல் ஈராக் ஈரானை முற்றுகையிட்டது.
    1993ல் அலபாமாவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் தடம் புரண்டதில் 47 பயணிகள் உயிரிழந்தனர்.
    1993ல் ஜோர்ஜியாவின் பயணிகள் விமானம் ஒன்று சுகுமி என்ற இடத்தில் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
    1995ல் அலாஸ்காவில் போயிங் விமானம் ஒன்று பறவைகள் தாக்கியதன் காரணமாக வீழ்ந்ததில் அதில் அபயணம் செய்த அனைத்து 24 பேரும் உயிரிழந்தனர்.
    1995ல் நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
    2013ல் பாக்கித்தான், பெசாவர் நகரில் கிறித்தவத் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டனர்.
    2014ல் நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 22-09 | September 22

    1791ல் ஆங்கிலேய இயற்பியலாளரும் வேதியியலாளருமான‌ மைக்கேல் பரடே பிறந்த நாள். (இறப்பு-1867)
    1834ல் பிரித்தானிய நிலவியலாளரும் தொல்லியலாளருமான‌ இராபர்ட் புருசு ஃபூட் பிறந்த நாள். (இறப்பு-1912)
    1863ல் சுவிட்சர்லாந்து மருத்துவரும் நுண்ணியலாளருமான‌ அலெக்சாண்டர் எர்சின் பிறந்த நாள். (இறப்பு-1943)
    1869ல் இந்திய அரசியல்வாதியும் நிர்வாகியும் கல்வியாளருமான வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி பிறந்த நாள். (இறப்பு-1946)
    1869ல் இந்திய அரசியல்வாதியான‌ திருவாங்கூர் திவான் முகமது ஹபிபுல்லா பிறந்த நாள். (இறப்பு-1948)
    1916ல் தமிழக எழுத்தாளரும் இதழாசிரியருமான‌ விந்தன் பிறந்த நாள். (இறப்பு-1975)
    1930ல் தென்னிந்தியத் திரைப்பட பின்னணி பாடகரான‌ பி. பி. ஸ்ரீநிவாஸ் பிறந்த நாள். (இறப்பு-2013)
    1930ல் சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியான‌ தி. ச. சின்னத்துரை பிறந்த நாள். (இறப்பு-2016)
    1931ல் தமிழக எழுத்தாளரான‌ அசோகமித்திரன் பிறந்த நாள். (இறப்பு-2017)
    1933ல் ஈழத்து எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான‌ அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை பிறந்த நாள்.
    1934ல் பிஜி அரசியல்வாதியுமான‌ டிமோதி இம்பவன்றா பிறந்த நாள். (இறப்பு-1989)
    1939ல் சப்பானிய மலையேறியான‌ ஜூன்கோ டபெய் பிறந்த நாள்.
    1950ல் சிக்கிம் மாநிலத்தின் 5வது முதலமைச்சரான‌ பவன் குமார் சாம்லிங் பிறந்த நாள்.
    1959ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளருமான‌ சோல் பெர்ல்மட்டர் பிறந்த நாள்.
    1962ல் நியூசிலாந்துத் துடுப்பாளரான‌ மார்ட்டின் குரோவ் பிறந்த நாள். (இறப்பு-2016)
    1970ல் ஆத்திரேலிய அரசியல்வாதியான‌ கிளாடிசு பெரெசிக்லியன் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 22-09 | September 22

    1539ல் சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவரான‌ குரு நானக் இறப்பு நாள். (பிறப்பு-1469)
    1828ல் சூலு பேரரசரான‌ சாக்கா சூலு இறப்பு நாள். (பிறப்பு-1787)
    1972ல் தமிழகத் தமிழறிஞரும் புலவருமான‌ புலவர் குழந்தை இறப்பு நாள். (பிறப்பு-1906)
    2009ல் தென்னிந்திய நடிகையும் பாடகியுமான‌ எஸ். வரலட்சுமி இறப்பு நாள். (பிறப்பு-1927)
    2009ல் தமிழகக் கல்வியாளரும் கவிஞருமான‌ ஆர். பாலச்சந்திரன் இறப்பு நாள்.
    2013ல் நோபல் பரிசு பெற்ற கனடிய-அமெரிக்க மருத்துவரான டேவிட் ஹண்டர் ஹியூபெல் இறப்பு நாள். (பிறப்பு-1926)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 21 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 21
    Next articleSeptember 23 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 23