September 21 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 21

0

Today Special Historical Events In Tamil | 21-09 | September 21

September 21 Today Special | September 21 What Happened Today In History. September 21 Today Whose Birthday (born) | September-21st Important Famous Deaths In History On This Day 21/09 | Today Events In History September-21st | Today Important Incident In History | புரட்டாதி 21 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 21-09 | புரட்டாதி மாதம் 21ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 21.09 Varalatril Indru Nadanthathu Enna| September 21 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 21/09 | Famous People Born Today September 21 | Famous People died Today 21-09.

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 21-09 | September 21

மரியாவின் பிறப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. (கிழக்கு மரபுவழி திருச்சபை, யூலியன் நாட்காட்டி)
சம இரவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (வடக்கு அரைக்கோளம்)
உலக அமைதி நாளாக கொண்டாடப்படுகிறது.
விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (ஆர்மீனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (பெலீசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1981)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (மால்ட்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1964)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 21-09 | September 21

455ல் பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் உரோம் சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார்.
1170ல் டப்லின் இராச்சியம் நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது.
1776ல் நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது.
1792ல் பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
1843ல் ஜான் வில்சப் மகெல்லன் நீரிணையை சிலி அரசுக்காக உரிமை கோரினார்.
1860ல் இரண்டாம் அபினிப் போர்: ஆங்கிலேய-பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத் தோற்கடித்தன.
1896ல் பிரித்தானியப் படைகள் சூடானின் டொங்கோலா நகரைக் கைப்பற்றினர்.
1898ல் பேரரசி டோவாகர் சிக்சி சீனாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். நூறு-நாள் சீர்திருத்த எழுச்சி முடிவுக்கு வந்தது.
1921ல் செருமனியில் தொழிற்சாலைக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற பெரும் வெடி விபத்தில் சிக்கி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.
1934ல் சப்பானில் மேற்கு ஒன்சூ பகுதியில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 3,036 பேர் உயிரிழந்தனர்.
1938ல் நியூ யோர்க்கின் லோங் தீவில் சூறாவளி காரணமாக 500 முதல் 700 வரையானோர் உயிரிழந்தனர்.
1939ல் உருமேனியா பிரதமர் ஆர்மண்ட் கலினெஸ்கு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1942ல் பெரும் இன அழிப்பு: யோம் கிப்பூர் யூத விடுமுறை நாளன்று மேற்கு உக்ரைனில் 2588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.
1942ல் உக்ரைனில் துனைவ்த்சி நகரில் 2,588 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1949ல் மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.
1964ல் மால்ட்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. ஆனால் பொதுநலவாயத்தில் தொடர்ந்தது.
1965ல் காம்பியா, மாலைத்தீவுகள், சிங்கப்பூர் ஆகியன ஐநாவில் இணைந்தன.
1971ல் பகுரைன், பூட்டான், கத்தார் ஆகியன ஐநாவில் இணைந்தன.
1972ல் பிலிப்பீன்சு அரசுத்தலைவர் பேர்டினண்ட் மார்க்கொஸ் முழு நாட்டிலும் இராணுவ ஆட்சியைப் பிறப்பித்தார்.
1976ல் சீசெல்சு ஐநாவில் இணைந்தது.
1981ல் பெலீசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தத
1984ல் புரூணை ஐநாவில் இணைந்தது.
1989ல் இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990ல் மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1991ல் ஆர்மீனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1993ல் உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் நாடாளுமன்றத்தைக் கலைத்து, அரசியலமைப்புச் சட்டத்தை ரத்துச் செய்தார்.
1999ல் தாய்வானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர்.
2001ல் நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டவாக 2,200 கிமீ தூரத்திற்குள் சென்றது.
2003ல் கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழனின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.
2013ல் இலங்கையின் வட மாகாண சபைக்கு முதல் தடவையாகத் தேர்தல் நடைபெற்றது.
2013ல் கென்யாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் அல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 21-09 | September 21

1832ல் பிரான்சிய இயற்பியலாளரும் கண்டுபிடிப்பாளருமான‌ லூயி பால் கையேட்டே பிறந்த நாள். (இறப்பு-1913)
1853ல் நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளரான‌ ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1926)
1866ல் ஆங்கிலேய எழுத்தாளரும் வரலாற்றாளருமான‌ எச். ஜி. வெல்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1946)
1909ல் கானாவின் அரசுத்தலைவரான‌ குவாமே நிக்ரூமா பிறந்த நாள். (இறப்பு-1972)
1910ல் தமிழக கருநாடக இசைக் கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான‌ எம். டி. பார்த்தசாரதி பிறந்த நாள். (இறப்பு-1963)
1921ல் தமிழக சமூக செயற்பாட்டாளரான‌ சரோஜினி வரதப்பன் பிறந்த நாள். (இறப்பு-2013)
1924ல் புதுவைக் கவிஞரான‌ தமிழ்ஒளி பிறந்த நாள். (இறப்பு-1965)
1926ல் அமெரிக்க இயற்பியலாளரும் நரம்பியல் அறிஞருமான‌ டொனால்ட் எ கிளாசர் பிறந்த நாள். (இறப்பு-2013)
1927ல் தென்னிந்திய இசையமைப்பாளரான‌ ஜி. கே. வெங்கடேஷ் பிறந்த நாள். (இறப்பு-1993)
1930ல் தமிழக அரசியல்வாதியான‌ எஸ். ஏ. கணேசன் பிறந்த நாள்.
1931ல் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரான‌ சிங்கீதம் சீனிவாசராவ் பிறந்த நாள்.
1934ல் நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளரான‌ தாவீது தூலீசு பிறந்த நாள்.
1939ல் இந்திய மெய்யியலாளரும் அரசியல்வாதியுமான‌ அக்னிவேஷ் பிறந்த நாள்.
1944ல் கல்வியாளரும் சமூக சேவகருமான‌ ஜெ. சுத்தானந்தன் பிறந்த நாள். (இறப்பு-2010)
1947ல் அமெரிக்க நூலாசிரியரான‌ ஸ்டீபன் கிங் பிறந்த நாள்.
1954ல் சப்பானின் 90வது பிரதமரான‌ சின்சோ அபே பிறந்த நாள்.
1957ல் ஆத்திரேலியாவின் 26வது பிரதமரான‌ கெவின் ரட் பிறந்த நாள்.
1963ல் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான‌ ஜீவா பிறந்த நாள். (இறப்பு-2007)
1963ல் அண்டிக்குவா துடுப்பாட்ட வீரரான‌ கேட்லி அம்ப்ரோஸ் பிறந்த நாள்.
1965ல் இந்திய-அமெரிக்க அரசியல்வாதியான‌ பிரமிளா செயபால் பிறந்த நாள்.
1979ல் யமெய்க்கத் துடுப்பாளரான‌ கிறிஸ் கெயில் பிறந்த நாள்.
1980ல் இந்திய நடிகையான‌ கரீனா கபூர் பிறந்த நாள்.
1983ல் அமெரிக்க நடிகையான‌ மேகி கிரேஸ் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 21-09 | September 21

கிமு 19ல் உரோமைக் கவிஞரான‌ வேர்ஜில் இறப்பு நாள். (பிறப்பு-கிமு 70)
1558ல் புனித உரோமைப் பேரரசரான‌ ஐந்தாம் சார்லசு இறப்பு நாள். (பிறப்பு-1500)
1576ல் இத்தாலியக் கணிதவியலாளரும் மருத்துவரும் சோதிடருமான‌ கார்டானோ இறப்பு நாள். (பிறப்பு-1501)
1743ல் ஜெய்ப்பூர் அரசரான‌ இரண்டாம் ஜெய் சிங் இறப்பு நாள். (பிறப்பு-1688)
1950ல் பிரித்தானிய வானியற்பியலாளரும் கணிதவியலாளருமான‌ ஆர்த்தர் மில்னே இறப்பு நாள். (பிறப்பு-1896)
1958ல் இந்திய எழுத்தாளரும் பதிப்பாளருமான‌ பி. எஸ். பாலிகா இறப்பு நாள். (பிறப்பு-1908)
1967ல் இலங்கை அரசியல்வாதியான‌ அல்பர்ட் பீரிசு இறப்பு நாள். (பிறப்பு-1905)
1971ல் நோபல் பரிசு பெற்ற அர்க்கெந்தீன மருத்துவரான‌ பெர்னார்டோ ஊசே இறப்பு நாள். (பிறப்பு-1887)
1976ல் பிரித்தானிய-அமெரிக்கப் பொருளியல் நிபுணரான‌ பெஞ்சமின் கிரகாம் இறப்பு நாள். (பிறப்பு-1894)
1989ல் இலங்கை மனித உரிமை மற்றும் பெண் உரிமை செயற்பாட்டாளரான‌ ராஜினி திரணகம இறப்பு நாள். (பிறப்பு-1954)
2000ல் உருசிய மருத்துவரான‌ லியோனித் இரகோசொவ் இறப்பு நாள். (பிறப்பு-1934)
2005ல் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான‌ காரை சுந்தரம்பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1938)
2007ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான‌ விஜயன் இறப்பு நாள்.
2008ல் இலங்கையின் 4வது அரசுத்தலைவரான‌ டி. பி. விஜயதுங்கா இறப்பு நாள். (பிறப்பு-1922)
2011ல் சிங்களத் திரைப்பட நடிகரான ஜோ அபேவிக்கிரம இறப்பு நாள். (பிறப்பு-1927)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 08.09.2022 Today Rasi Palan 08-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleSeptember 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 22