September 23 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 23

0

Today Special Historical Events In Tamil | 23-09 | September 23

September 23 Today Special | September 23 What Happened Today In History. September 23 Today Whose Birthday (born) | September-23rd Important Famous Deaths In History On This Day 23/09 | Today Events In History September-23rd | Today Important Incident In History | புரட்டாதி 23 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 23-09 | புரட்டாதி மாதம் 23ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 23.09 Varalatril Indru Nadanthathu Enna| September 23 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 23/09 | Famous People Born Today September 23 | Famous People died Today 23-09.

 • Today Special in Tamil 23-09
 • Today Events in Tamil 23-09
 • Famous People Born Today 23-09
 • Famous People died Today 23-09
 • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 23-09 | September 23

  பெரும் இனவழிப்பு நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (லித்துவேனியா)
  தேசிய நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சவூதி அரேபியா)
  ஆசிரியர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (புரூணை)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 23-09 | September 23

  1338ல் நூறாண்டுப் போர்: முதலாவது கடற்படைச் சமர் இடம்பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக வெடிமருந்துகளுடனான பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.
  1409ல் 1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள் பெற்றனர்.
  1459ல் ரோசாப்பூப் போர்கள்: முதலாவது முக்கிய சமர் புளோர் கீத் என்ற இடத்தில் நடைபெற்றது.
  1641ல் 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.
  1780ல் அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி ஜான் அன்ட்ரே உளவுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
  1799ல் இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
  1803ல் இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்: அசாயே என்ற இடத்தில் பிரித்தானியாவுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்றது.
  1806ல் லூயிசும் கிளார்க்கும் அமெரிக்காவின் வடமேற்குப் பசிபிக் பிராந்தியத் தேடல் முயற்சியை முடித்துக் கொண்டு செயின்ட் லூயீசுக்குத் திரும்பினர்.
  1821ல் திரிப்பொலீத்சா நகரைக் கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர்.
  1846ல் நெப்டியூன் கோள் உர்பெயின் ஜோசப், ஜோன் அடம்ஸ், யோகான் கோட்பிரீடு கல்லே ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  1868ல் எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக புவெர்ட்டோ ரிக்கோவில் கிளர்ச்சி இடம்பெற்றது.
  1868ல் புவெர்ட்டோ ரிக்கோவில் எசுப்பானிய ஆட்சியாளருக்கெதிராகக் கிளர்ச்சி ஆரம்பமானது.
  1889ல் நின்டெண்டோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
  1905ல் நோர்வேயும் சுவீடனும் அமைதியாகப் பிரிவதற்கு உடன்பட்டன.
  1913ல் பிரான்சின் ரோலண்டு காரொசு என்பவர் நடுநிலக் கடலை முதல் முதலாக வானூர்தியில் கடந்து சாதனை படைத்தார்.
  1932ல் இப்னு சவூது தலைமையில் சவூதி அரேபியா ஒன்றிணைந்தது.
  1943ல் இரண்டாம் உலகப் போர்: நாட்சி பொம்மை அரசு இத்தாலிய சோசலிசக் குடியரசு உருவானது.
  1950ல் கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் தவறுதலாக பிரித்தானியப் படைகள் மீது நேப்பாம் குண்டுகளை வீசினர். 17 பேர் கொல்லப்பட்டு 79 பேர் காயமடைந்தானர்.
  1965ல் இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.
  1966ல் நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.
  1980ல் பாடகர் பாப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியை பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் நடத்தினார்.
  1983ல் மட்டக்களப்பு சிறை உடைப்பு: இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த 41 தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.
  1983ல் செயிண்ட் கிட்சும் நெவிசும் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.
  1983ல் கல்ஃப் ஏர் விமானம் குண்டு ஒன்றினால் தகர்க்கப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 117 பேரும் கொல்லப்பட்டனர்.
  1986ல் இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
  2002ல் மொசிலா பயர் பாக்சு இணைய உலாவி வெளிவந்தது.
  2004ல் எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 3,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
  2008ல் பின்லாந்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

  வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 23-09 | September 23

  கிமு 63ல் உரோமைப் பேரரசரான‌ அகஸ்ட்டஸ் பிறந்த நாள். (இறப்பு-14)
  1215ல் மொங்கோலியப் பேரரசரான‌ குப்லாய் கான் பிறந்த நாள். (இறப்பு-1294)
  1791ல் செருமானிய வானியலாளரான‌ யோகான் பிரான்சு என்கே பிறந்த நாள். (இறப்பு-1865)
  1851ல் அமெரிக்கக் கணிதவியலாளரும் வானியலாளருமான‌ எல்லன் காயேசு பிறந்த நாள். (இறப்பு-1930)
  1869ல் அமெரிக்க சமையற்கலை நிபுணரான‌ டைஃபாய்டு மேரி பிறந்த நாள். (இறப்பு-1938)
  1871ல் செக் நாட்டு ஓவியரான‌ பிரான்டிசேக் குப்கா பிறந்த நாள். (இறப்பு-1957)
  1882ல் அமெரிக்க வானியலாளரான‌ ஆல்பிரெடு ஆரிசன் ஜாய் பிறந்த நாள். (இறப்பு-1973)
  1895ல் ஜம்மு காஷ்மீர் சுதேச சமஸ்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னரான‌ ஹரி சிங் பிறந்த நாள். (இறப்பு-1961)
  1900ல் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணத்தின் 1வது ஆயரான‌ எஸ். குலேந்திரன் பிறந்த நாள். (இறப்பு-1992)
  1908ல் இந்திக் கவிஞரும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் கல்வியாளரும் அரசியல்வாதியுமான‌ ராம்தாரி சிங் திங்கர் பிறந்த நாள். (இறப்பு-1974)
  1917ல் இந்திய வேதியியலாளரான‌ அசீமா சாட்டர்ஜி பிறந்த நாள். (இறப்பு-2006)
  1923ல் தமிழக எழுத்தாளரான‌ கு. அழகிரிசாமி பிறந்த நாள். (இறப்பு-1970)
  1930ல் அமெரிக்கப் பாடகரும் நடிகருமான‌ ரே சார்ல்ஸ் பிறந்த நாள். (இறப்பு-2004)
  1933ல் மலையாளத் திரைப்பட நடிகரான‌ மது பிறந்த நாள்.
  1941ல் தென்னாபிரிக்க நீதிபதியும் முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளருமான‌ நவநீதம் பிள்ளை பிறந்த நாள்.
  1943ல் இந்தித் திரைப்பட நடிகையான‌ தனுஜா பிறந்த நாள்.
  1957ல் இந்தியப் பாடகரும் தயாரிப்பாளருமான‌ குமார் சானு பிறந்த நாள்.
  1962ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ ஷோபா பிறந்த நாள். (இறப்பு-1980)
  1971ல் பாக்கித்தானியத் துடுப்பாளரான‌ முயீன் கான் பிறந்த நாள்.
  1982ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ ரதி பிறந்த நாள்.
  1988ல் அர்ச்செந்தீன டென்னிசு வீரரான‌ டெல் போட்ரோ பிறந்த நாள்.

  வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 23-09 | September 23

  1877ல் பிரான்சியக் கணிதவியலாளரும் வானியலாளருமான‌ உர்பைன் லெவெரியே இறப்பு நாள். (பிறப்பு-1811)
  1939ல் ஆத்திரிய மருத்துவரான‌ சிக்மண்ட் பிராய்ட் இறப்பு நாள். (பிறப்பு-1856)
  1951ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் பாடகருமான‌ பி. யு. சின்னப்பா இறப்பு நாள். (பிறப்பு-
  1968ல் இத்தாலியப் புனிதரான‌ பியட்ரல்சினாவின் பியோ இறப்பு நாள். (பிறப்பு-1887)
  1969ல் இலங்கை-சிங்கள அரசியல்வாதியான‌ சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா இறப்பு நாள். (பிறப்பு-1884)
  1973ல் நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரான‌ பாப்லோ நெருடா இறப்பு நாள். (பிறப்பு-1904)
  1974ல் மைசூர் சமத்தானத்தின் கடைசி அரசரான‌ ஜெயச்சாமராஜா உடையார் இறப்பு நாள். (பிறப்பு-1919)
  1995ல் இலங்கை அரசியல்வாதியான‌ க. துரைரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1930)
  1996ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ மஞ்சு பாசினி இறப்பு நாள். (பிறப்பு-1906)
  1996ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ சில்க் ஸ்மிதா இறப்பு நாள். (பிறப்பு-1960)
  2011ல் இந்தியத் துடுப்பாட்ட வீரரான‌ மன்சூர் அலி கான் பட்டோடி இறப்பு நாள். (பிறப்பு-1941)
  2012ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ அஸ்வினி இறப்பு நாள். (பிறப்பு-1969)
  2013ல் அமெரிக்க உயிரியலாளரான‌ ரூத் பாட்ரிக் இறப்பு நாள். (பிறப்பு-1907)
  2015ல் இந்திய ஆன்மிக குருவான தயானந்த சரசுவதி இறப்பு நாள். (பிறப்பு-1930)
  2018ல் ஆங்காங்-அமெரிக்க-பிரித்தானிய இயற்பியலாளரான‌ சார்லசு காவோ இறப்பு நாள். (பிறப்பு-1933)
  2020ல் இந்திய அரசியல்வாதியான‌ சுரேஷ் அங்காடி இறப்பு நாள். (பிறப்பு-1955)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

  By: Tamilpiththan

  உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

  Previous articleSeptember 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 22
  Next articleSeptember 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 24