September 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 17

0

Today Special Historical Events In Tamil | 17-09 | September 17

September 17 Today Special | September 17 What Happened Today In History. September 17 Today Whose Birthday (born) | September-17th Important Famous Deaths In History On This Day 17/09 | Today Events In History September-17th | Today Important Incident In History | புரட்டாதி 17 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 17-09 | புரட்டாதி மாதம் 17ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 17.09 Varalatril Indru Nadanthathu Enna| September 17 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 17/09 | Famous People Born Today September 17 | Famous People died Today 17-09.

September 17
  • Today Special in Tamil 17-09
  • Today Events in Tamil 17-09
  • Famous People Born Today 17-09
  • Famous People died Today 17-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 17-09 | September 17

    ஆத்திரேலியக் குடியுரிமை நாளாக கொண்டாடப்படுகிறது.
    ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. (ஒண்டுராசு)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 17-09 | September 17

    456ல் உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான்.
    1382ல் அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார்.
    1620ல் செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது.
    1630ல் மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.
    1631ல் முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது.
    1775ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: செயிண்ட் ஜீன் கோட்டைத் தாக்குதலுடன் கனடா மீதான முற்றுகை ஆரம்பமானது.
    1787ல் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.
    1795ல் மேஜர் பிரேசர் தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றின.
    1809ல் பின்லாந்து போரில் சுவீடனுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து உருசியாவிடம் கையளிக்கப்பட்டது.
    1811ல் சாவகம் பிரித்தானியாவிடம் வீழ்ந்தது.[1]
    1849ல் அமெரிக்க செயற்பாட்டாளர் ஹேரியட் டப்மேன் அடிமை நிலையில் இருந்து தப்பினார்.
    1858ல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழ்கடல் தொலைத்தந்திக் கம்பிகள் தணக்காய் முனைக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பதிக்கப்பட்டன.[2]
    1862ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.
    1862ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.
    1894ல் முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): யாலு ஆற்றில் மிகப் பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.
    1900ல் பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: மாபிட்டாக் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கரைத் தோற்கடித்தன.
    1908ல் ரைட் சகோதரரினால் செலுத்தப்பட்ட வானூர்தி தரையில் மோதியதில் தோமசு செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.
    1928ல் சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர்.
    1930ல் குர்தியரின் அரராத் கிளர்ச்சியை துருக்கி முறியடித்தது.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு ஆரம்பமானது.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று நாட்சி ஜெர்மனியின் நீர்மூழ்கியால் தாக்கி அழிக்கப்பட்டது.
    1941ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
    1941ல் ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு: சோவியத் படைகள் தெகுரான் நகருள் நுழைந்தன.
    1944ல் மார்க்கெட் கார்டன் நடவடிக்கை: நேசப் படைகளின் வான்படையினர் வான்குடைகள் மூலம் நெதர்லாந்தில் தரையிறங்கின.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனிப் படைகள் சான் மரீனோ போரில் நேசப் படைகளால் தாக்கப்பட்டனர்.
    1948ல் ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.
    1949ல் திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினர்.
    1949ல் டொரோண்டோ துறைமுகத்தில் நொரோனிக் என்ற கனேடியக் கப்பல் எரிந்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.
    1965ல் பாக்கித்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சவிண்டா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
    1974ல் வங்காளதேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.
    1976ல் நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.
    1978ல் இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
    1980ல் போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.
    1980ல் நிக்கராகுவாவின் முன்னாள் அரசுத்தலைவர் அனாஸ்தாசியோ டெபாயில் பரகுவையில் படுகொலை செய்யப்பட்டார்.
    1987ல் தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
    1988ல் தென் கொரியாவின் சியோல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.
    1991ல் எசுத்தோனியா, வட கொரியா, தென் கொரியா, லாத்வியா, லித்துவேனியா, மார்சல் தீவுகள் மைக்குரோனீசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.
    1991ல் லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.
    1997ல் பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
    2004ல் இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
    2011ல் வோல் வீதி ஆக்கிரமிப்பு இயக்கம் நியூயார்கில் ஆரம்பமானது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 17-09 | September 17

    1764ல் ஆங்கிலேய வானியலாளரான‌ ஜான் குட்ரிக் பிறந்த நாள். (இறப்பு-1786)
    1826ல் செருமானிய-இத்தாலியக் கணிதவியலாளரான‌ பேர்னாட் ரீமன் பிறந்த நாள். (இறப்பு-1866)
    1857ல் உருசிய அறிவியலாளரான‌ கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி பிறந்த நாள். (இறப்பு-1935)
    1864ல் இலங்கை பௌத்த அறிஞரான‌ அனகாரிக தர்மபால பிறந்த நாள். (இறப்பு-1933)
    1879ல் இந்திய அரசியல்வாதியும் திராவிடர் கழக நிறுவனரும் ஈ. வெ. இராமசாமி பிறந்த நாள். (இறப்பு-1973)
    1889ல் தமிழக எழுத்தாளரான‌ வ. ராமசாமி அய்யங்கார் பிறந்த நாள். (இறப்பு-1951)
    1895ல் தமிழறிஞரான‌ வெ. சாமிநாத சர்மா பிறந்த நாள். (இறப்பு-1978)
    1897ல் இலங்கையின் ஆளுநரும் முதலாவது சனாதிபதியுமான‌ வில்லியம் கொபல்லாவ பிறந்த நாள். (இறப்பு-1981)
    1906ல் இலங்கையின் 1-வது நிறைவேற்றதிகார அரசுத்தலைவரான‌ ஜே. ஆர். ஜெயவர்தனா பிறந்த நாள். (இறப்பு-1996)
    1913ல் அமெரிக்க உயிரியலாளரும் சூழலியலாளருமான‌ யூகின் ஓடம் பிறந்த நாள். (இறப்பு-2002)
    1915ல் இந்திய ஓவியரும் இயக்குநருமான‌ மக்புல் ஃபிதா உசைன் பிறந்த நாள். (இறப்பு-2011)
    1930ல் இந்திய வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான‌ லால்குடி ஜெயராமன் பிறந்த நாள். (இறப்பு-2013)
    1939ல் மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளியான‌ மேரி சாந்தி தைரியம் பிறந்த நாள். (இறப்பு-
    1944ல் இத்தாலிய மலையேறியான‌ ரைன்ஹோல்ட் மெஸ்னெர் பிறந்த நாள்.
    1950ல் இந்தியாவின் 15வது பிரதமரான‌ நரேந்திர மோதி பிறந்த நாள்.
    1953ல் ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான‌ கி. பி. அரவிந்தன் பிறந்த நாள். (இறப்பு-2015)
    1956ல் கிர்கித்தானின் 4வது அரசுத்தலைவரான‌ அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் பிறந்த நாள்.
    1965ல் அமெரிக்க இயக்குநரான பிறையன் சிங்கர் பிறந்த நாள்.
    1986ல் இந்தியத் துடுப்பாட்டக்காரரான‌ ரவிச்சந்திரன் அசுவின் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 17-09 | September 17

    1179ல் செருமானியப் புனிதரான‌ பிங்கெனின் ஹில்டெகார்ட் இறப்பு நாள். (பிறப்பு-1098)
    1621ல் இத்தாலியப் புனிதரான‌ ராபர்ட் பெல்லார்மின் இறப்பு நாள். (பிறப்பு-1542)
    1911ல் அமெரிக்க சிற்பியான‌ எட்மோனியா லூவிசு இறப்பு நாள். (பிறப்பு-1844)
    1933ல் பிரான்சிய பூச்சியியல் வல்லுனரான‌ ஜூல்ஸ் கூலட் இறப்பு நாள். (பிறப்பு-1861)
    1947ல் தமிழ்த் திரைப்பட இயக்குநரான‌ சி. வி. ராமன் இறப்பு நாள்.
    1959ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ கு. வன்னியசிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1911)
    1953ல் தமிழறிஞரான‌ திரு வி. கலியாணசுந்தரனார் இறப்பு நாள். (பிறப்பு-1883)
    1979ல் தமிழ்த் திரைப்பட ம்ற்றும் நாடக நடிகரான‌ எம். ஆர். ராதா இறப்பு நாள். (பிறப்பு-1907)
    1994ல் ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளரான‌ கார்ல் பொப்பர் இறப்பு நாள். (பிறப்பு-1902)
    2013ல் சப்பானியத் தொழிலதிபரான‌ இஜி டொயோடா இறப்பு நாள். (பிறப்பு-1913)
    2021ல் இந்திய இயற்பியலாளரும் பேராசிரியருமான‌ தாணு பத்மநாபன் இறப்பு நாள். (பிறப்பு-1957)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 16
    Next articleSeptember 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 18