September 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 16

0

Today Special Historical Events In Tamil | 16-09 | September 16

September 16 Today Special | September 16 What Happened Today In History. September 16 Today Whose Birthday (born) | September-16th Important Famous Deaths In History On This Day 16/09 | Today Events In History September-16th | Today Important Incident In History | புரட்டாதி 16 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 16-09 | புரட்டாதி மாதம் 19ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 16.09 Varalatril Indru Nadanthathu Enna| September 16 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 16/09 | Famous People Born Today September 16 | Famous People died Today 16-09.

September 16
  • Today Special in Tamil 16-09
  • Today Events in Tamil 16-09
  • Famous People Born Today 16-09
  • Famous People died Today 16-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 16-09 | September 16

    விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (பப்புவா நியூ கினி, ஆத்திரேலியாவிடமிருந்து, 1975)
    பன்னாட்டு ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.
    மலேசியா நாளாக கொண்டாடப்படுகிறது. (மலேசியா, சிங்கப்பூர்)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 16-09 | September 16

    307ல் மேற்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் செவரசு கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கொல்லப்பட்டார்.
    681ல் திருத்தந்தை முதலாம் ஒனோரியசு பதவி நீக்கப்பட்டார்.
    1732ல் போர்த்துகல், காம்போ மையோர் நகரில் சூறாவளி தாக்கியதில் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
    1810ல் மிகுவேல் இடால்கோ என்ற மதகுரு எசுப்பானியாவிடம் இருந்து மெக்சிக்கோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார்.
    1893ல் அமெரிக்காவின் ஓக்லகோமா மாநிலத்தில் செரோக்கீ என்ற இடத்தில் விற்பனைக்கு விடப்பட்ட நிலப்பரப்புகளை வாங்குவதற்கு குடியேறிகள் பெருமளவில் திரண்டனர்.
    1914ல் முதலாம் உலகப் போர்: போலந்து மீதான தாக்குதல் ஆரம்பமானது.
    1920ல் நியூயோர்க் நகரில் ஜே.பி.மோர்கன் கட்டிடத்தின் முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
    1940ல் இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தின் சிதி பரானி நகரைக் கைப்பற்றியது.
    1945ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானின் ஆங்காங் மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.
    1955ல் அர்கெந்தீனாவின் அரசுத்தலைவரைப் பதவியில் இருந்து அகற்ற அங்கு இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
    1956ல் ஆத்திரேலியாவின் முதலாவது தொலைக்காட்சி சேவை டிசிஎன் ஆரம்பமானது.
    1959ல் முதலாவது வெற்றிகரமான ஒளிநகலி செராக்சு 914 நியூயார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    1961ல் சப்பான், ஒசாக்காவில் சூறாவளி நான்சி தாக்கியதில் 173 பேர் உயிரிழந்தனர்.
    1961ல் பாக்கித்தான் அப்துஸ் சலாம் தலைமையில் விண்வெளி ஆய்வு ஆணையத்தை நிறுவியது.
    1963ல் மலாயா கூட்டமைப்பு, சிங்கப்பூர், வடக்கு போர்ணியோவின் சபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது. ஆனாலும் சிங்கப்பூர் விரைவில் விலகி தனி நாடாகியது.
    1970ல் யோர்தானில் நான்கு பயணிகள் விமானங்கள் பாலத்தீனப் போராளிகளால் கடத்தப்பட்டதை அடுத்து மன்னர் உசைன் இராணுவ ஆட்சியை அறிவித்தார்.
    1975ல் முதலாவது இடைமறித்துத் தாக்கும் போர் வானூர்தி மிக்-31 தனது முதல் பறப்பை மேற்கொண்டது.
    1975ல் கேப் வர்டி, மொசாம்பிக், சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
    1975ல் பப்புவா நியூ கினி, ஆத்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்றது.
    1978ல் ஈரானில் தபாசு நகரை 7.4 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 15,000 பேர் உயிரிழந்தனர்.
    1979ல் கிழக்கு செருமனியில் இருந்து எட்டுப் பேர் வெங்காற்று மிதவையில் ஏறி மேற்கு செருமனிக்குத் தப்பிச் சென்றனர்.
    1982ல் லெபனானில் சப்ரா, சட்டீலா ஆகிய பாலத்தீன அகதி முகாங்களில் லெபனானிய இராணுவத் துணைப்படையினரால் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
    1987ல் ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் அறிவிக்கப்பட்டது.
    1990ல் சீனாவுக்கும் கசக்ஸ்தானுக்கும் இடையே தொடருந்து சேவை ஆரம்பமானது.
    1992ல் பனாமாவின் முன்னாள் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவுக்கு எதிரான போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கான விசாரணைகள் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவடைந்து,. அவருக்கு 40-ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
    1994ல் சின் பெயின், மற்றும் அயர்லாந்து துணை இராணுவக் குழுக்கள் மீது 1988 இல் விதிக்கப்பட்ட ஒலிபரப்புத் தடையை பிரித்தானிய அரசு விலக்கிக் கொண்டது.
    2000ல் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.
    2002ல் விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.
    2007ல் தாய்லாந்தில் 128 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் 89 பேர் உயிரிழந்தனர்.
    2013ல் வாசிங்டன் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 16-09 | September 16

    1859ல் சீனக் குடியரசின் அரசுத்தலைவரான‌ யுவான் ஷிக்காய் பிறந்த நாள். (இறப்பு-1916)
    1884ல் வழக்கறிஞரும் திராவிட சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளருமான‌ சிவகங்கை இராமச்சந்திரன் பிறந்த நாள். (இறப்பு-1933)
    1893ல் நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-அமெரிக்க மருத்துவரான‌ ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி பிறந்த நாள். (இறப்பு-1986)
    1916ல் இந்திய கருநாடக இசைப் பாடகரும் நடிகையுமான‌ எம். எஸ். சுப்புலட்சுமி பிறந்த நாள். (இறப்பு-2004)
    1923ல் தமிழக எழுத்தாளரான‌ கி. ராஜநாராயணன் பிறந்த நாள். (இறப்பு-2021)
    1923ல் சிங்கப்பூரின் 1வது பிரதமரான‌ லீ குவான் யூ பிறந்த நாள். (இறப்பு-2015)
    1933ல் ஈழத்துத் தமிழறிஞரும் பேராசிரியருமான‌ வி. சிவசாமி பிறந்த நாள். (இறப்பு-2014)
    1933ல் தமிழக எழுத்தாளரான‌ ரா. பாலகிருஷ்ணன் பிறந்த நாள்.
    1939ல் மலேசிய எழுத்தாளரான‌ பி. எம். எ. சாகுல் ஹமீது பிறந்த நாள்.
    1945ல் இந்திய அரசியல்வாதியான ப. சிதம்பரம் பிறந்த நாள்.
    1950ல் இந்திய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான‌ மாலன் பிறந்த நாள்.
    1959ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ ரோஜா ரமணி பிறந்த நாள்.
    1966ல் இலங்கைத் துடுப்பாளரான‌ அசங்க குருசிங்க பிறந்த நாள்.
    1974ல் அமெரிக்க அரசியல்வாதியான‌ யூலியன் காசுட்ரோ பிறந்த நாள்.
    1976ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ மீனா பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 16-09 | September 16

    655ல் திருத்தந்தையான‌ முதலாம் மார்ட்டின் இறப்பு நாள். (பிறப்பு-
    1394ல் எதிர்-திருத்தந்தையான‌ ஏழாம் கிளமெண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1342)
    1701ல் இங்கிலாந்தின் மன்னனான இரண்டாம் யேம்சு இறப்பு நாள். (பிறப்பு-1633)
    1736ல் போலந்து-டச்சு இயற்பியலாளரும் வெப்பமானியைக் கண்டுபிடித்தவருமான‌ டானியல் பேரென்கைட் இறப்பு நாள். (பிறப்பு-1686)
    1925ல் உருசிய இயற்பியலாளரான‌ அலெக்சாந்தர் பிரீடுமேன் இறப்பு நாள். (பிறப்பு-1888)
    1931ல் லிபியக் கல்வியியலாளரான‌ உமர் முக்தார் இறப்பு நாள். (பிறப்பு-1862)
    1932ல் நோபல் பரிசு பெற்ற இந்திய-ஆங்கிலேய மருத்துவரான‌ ரொனால்டு ராஸ் இறப்பு நாள். (பிறப்பு-1857)
    1946ல் ஆங்கிலேய இயற்பியலாளரும் வானியலாளரும் கணிதவியலாளருமான‌ ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு இறப்பு நாள். (பிறப்பு-1877)
    1973ல் சிலியப் பாடகரான‌ விக்டர் அரா இறப்பு நாள். (பிறப்பு-1932)
    1980ல் சுவிட்சர்லாந்து மெய்யியலாளரான‌ ஜீன் பியாஜே இறப்பு நாள். (பிறப்பு-1896)
    1998ல் எழுத்தாளரும் மார்க்சிய ஆய்வாளருமான‌ கோ. கேசவன் இறப்பு நாள். (பிறப்பு-1946)
    2000ல் இலங்கை அரசியல்வாதியான‌ எம். எச். எம். அஷ்ரப் இறப்பு நாள். (பிறப்பு-1948)
    2007ல் அமெரிக்கப் பொறியியலாளரும் எழுத்தாளருமான‌ ராபர்ட் ஜோர்டான் இறப்பு நாள். (பிறப்பு-1948)
    2009ல் தமிழகப் பேச்சாளரும் எழுத்தாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் இறப்பு நாள். (பிறப்பு-
    2009ல் ஆங்கில இலக்கிய அறிஞரும் புதின ஆசிரியருமான‌ மீனாட்சி முகர்சி இறப்பு நாள். (பிறப்பு-
    2012ல் இந்திய நடிகரான‌ லூசு மோகன் இறப்பு நாள். (பிறப்பு-1928)
    2016ல் அமெரிக்கத் திரைப்பட இயக்குநரான‌ எட்வர்ட் ஆல்பீ இறப்பு நாள். (பிறப்பு-1928)
    2017ல் இந்திய வான்படைத் தளபதியான‌ அர்ஜன் சிங் இறப்பு நாள். (பிறப்பு-1919)
    2021ல் இந்திய இயற்பியலாளரும் பேராசிரியருமான‌ தாணு பத்மநாபன் இறப்பு நாள். (பிறப்பு-1957)
    2021ல் ஈழத்து எழுத்தாளரான‌ நந்தினி சேவியர் இறப்பு நாள். (பிறப்பு-1949)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleஇன்றைய ராசி பலன் 07.09.2022 Today Rasi Palan 07-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
    Next articleSeptember 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 17