September 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 18

0

Today Special Historical Events In Tamil | 18-09 | September 18

September 18 Today Special | September 18 What Happened Today In History. September 18 Today Whose Birthday (born) | September-18th Important Famous Deaths In History On This Day 18/09 | Today Events In History September-18th | Today Important Incident In History | புரட்டாதி 18 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 18-09 | புரட்டாதி மாதம் 18ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 18.09 Varalatril Indru Nadanthathu Enna| September 18 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 18/09 | Famous People Born Today September 18 | Famous People died Today 18-09.

September 18
  • Today Special in Tamil 18-09
  • Today Events in Tamil 18-09
  • Famous People Born Today 18-09
  • Famous People died Today 18-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 18-09 | September 18

    எயிட்சு விழிப்புணர்வு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அமெரிக்கா)
    உலக நீர் கண்காணிப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 18-09 | September 18

    96ல் உரோமைப் பேரரசர் தொமீசியன் கொல்லப்பட்டதை அடுத்து நேர்வா பேரரசராக முடிசூடினார்.
    1066ல் நோர்வே மன்னர் எரால்சு ஆர்திராதா இங்கிலாந்து மீதான முற்றுகையை ஆரம்பித்தார்.
    1180ல் பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார்.
    1679ல் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இருந்து நியூ ஆம்ப்சயர் தனியாகப் பிரிக்கப்பட்டது.
    1739ல் பெல்கிரேட் நகரம் உதுமானியப் பேரரசிடம் கையளிக்கப்பட்டது.
    1759ல் ஏழாண்டுப் போர்: கியூபெக் நகரை பிரித்தானியா பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது.
    1810ல் சிலியில் முதலாவது அரசு அமைக்கப்பட்டது.
    1812ல் மாஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெத்ரோவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான்.
    1851ல் த நியூயார்க் டைம்ஸ் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
    1872ல் இரண்டாம் ஒஸ்கார் சுவீடன்–நோர்வேயின் மன்னராக முடி சூடினார்.
    1906ல் ஆங்காங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் உயிரிழந்தனர்.
    1911ல் உருசியப் பிரதமர் பியோத்தர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பேரா மாளிகையில் சுடப்பட்டார்.
    1919ல் நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
    1922ல் உலக நாடுகள் அணியில் அங்கேரி இணைந்தது.
    1924ல் மகாத்மா காந்தி இந்து-முசுலிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
    1934ல் உலக நாடுகள் அணியில் சோவியத் ஒன்றியம் இணைந்தது.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: இக்னாசி மொஸ்சிக்கியின் தலைமையிலான போலந்து அரசு உருமேனியாவுக்கு தப்பி ஓடியது.
    1940ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியக் கப்பல் வாரணாசி நகரம் நாட்சி ஜெர்மனியின் நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 77 குழந்தைகள் உட்படப் பல அகதிகள் உயிரிழந்தனர்.
    1943ல் இரண்டாம் உலகப் போர்: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சோபிபோர் என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
    1943ல் இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற இட்லர் உத்தரவிட்டார்.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சப்பானின் ஜூனியோ மாரு என்ற கப்பலைத் தாக்கியதில் போர்க்கைதிகள், மற்றும் அடிமைகள் உட்பட 5,600 பேர் கொல்லப்பட்டனர்.
    1948ல் ஐதராபாத் இராணுவம் சரணடைய ஒப்புக்கொண்டதை போலோ நடவடிக்கையை இந்தியா கைவிட்டது.
    1959ல் வன்கார்ட் 3 விண்கலம் பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது.
    1960ல் பிடல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.
    1961ல் ஐநாவின் பொதுச்செயலர் டாக் ஹமாஷெல்ட் காங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார்.
    1962ல் புருண்டி, ஜமேக்கா, ருவாண்டா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
    1972ல் இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.
    1973ல் பகாமாசு, கிழக்கு செருமனி, மேற்கு செருமனி ஆகியன ஐநாவில் இணைந்தன.
    1974ல் சூறாவளி ஃபீஃபி ஒந்துராசைத் தாக்கியதில் 5,000 பேர் உயிரிழந்தனர்.
    1976ல் பெய்ஜிங் நகரில் மா சே துங்கின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
    1977ல் வொயேஜர் 1 விண்கலம் பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.
    1980ல் சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு உருசியருடனும் விண்வெளி சென்றது.
    1981ல் பிரான்சில் மரணதண்டனையை நீக்கும் தீர்மானத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்தது.
    1982ல் லெபனானில் கிறிஸ்தவ துணை இராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.
    1988ல் பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 8888 எழுச்சி முடிவுக்கு வந்தது.
    1990ல் லீக்கின்ஸ்டைன் ஐநாவில் இணைந்தது.
    1997ல் அமெரிக்க ஊடகத் தொழிலதிபர் டெட் டேர்னர் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு $1 பில்லியன் பணத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
    1999ல் கிழக்கிலங்கை, அம்பாறையில் உகனை, மகா ஓயா எல்லைக் கிராமங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[1]
    2006ல் கிழக்கிலங்கை, அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
    2007ல் மியான்மரில் பௌத்த பிக்குகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.
    2011ல் 2011 சிக்கிம் நிலநடுக்கம் வடகிழக்கு இந்தியா, நேபாளம், பூட்டான், வங்காளதேசம், தெற்கு திபெத்து ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.
    2014ல் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் 55.3% இசுக்கொட்லாந்து மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர்.
    2016ல் இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் யூரி என்ற நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில், 19 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 18-09 | September 18

    53ல் உரோமைப் பேரரசரான‌ திராயான் பிறந்த நாள். (இறப்பு-117)
    1709ல் ஆங்கிலேயக் கவிஞரும் அகராதியியலாளருமான‌ சாமுவேல் ஜோன்சன் பிறந்த நாள். (இறப்பு-1784)
    1765ல் திருத்தந்தையான‌ பதினாறாம் கிரகோரி பிறந்த நாள். (இறப்பு-1846)
    1889ல் எழுத்தாளரும் இதழாளரும் பதிப்பாளரும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான‌ பரலி சு. நெல்லையப்பர் பிறந்த நாள். (இறப்பு-1971)
    1908ல் சார்ச்சிய-ஆர்மீனிய வானியலாளரான‌ விக்தர் அம்பர்த்சுமியான் பிறந்த நாள். (இறப்பு-1996)
    1925ல் தமிழ்ப் பேராசிரியரும் தமிழறிஞருமான‌ இரா. சாரங்கபாணி பிறந்த நாள். (இறப்பு-2010)
    1928ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ பண்டரிபாய் பிறந்த நாள். (இறப்பு-2003)
    1949ல் இந்தியத் திரைப்பட நடிகரும் பாடகரும் விஷ்ணுவர்தன் பிறந்த நாள். (இறப்பு-2009)
    1950ல் இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகையான‌ சபனா ஆசுமி பிறந்த நாள்.
    1961ல் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான‌ ஜேம்ஸ் கண்டோல்பினி பிறந்த நாள். (இறப்பு-2013)
    1968ல் இந்திய நடிகரும் பாடகருமான‌ உபேந்திரா பிறந்த நாள்.
    1971ல் அமெரிக்க மிதிவண்டி வீரரான‌ லான்சு ஆம்ஸ்டிராங் பிறந்த நாள்.
    1973ல் அமெரிக்க நடிகரான‌ ஜேம்ஸ் மார்ஸ்டன் பிறந்த நாள்.
    1976ல் பிரேசில் கால்பந்தாட்ட வீரரான‌ ரொனால்டோ பிறந்த நாள்.
    1979ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான‌ வினய் பிறந்த நாள்.
    1986ல் இந்திய தடகள வீரரான‌ பல்ஜிந்தர் சிங் பிறந்த நாள்.
    1989ல் இந்திய இறக்கை பந்தாட்ட வீரரான‌ அசுவினி பொன்னப்பா பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 18-09 | September 01

    1783ல் சுவிசு கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ லியோனார்டு ஆய்லர் இறப்பு நாள். (பிறப்பு-1707)
    1945ல் ஆதி திராவிடர் இயக்கத் தலைவரான‌ இரட்டைமலை சீனிவாசன் இறப்பு நாள். (பிறப்பு-1859)
    1958ல் இந்திய இறை மெய்யியலாளரும் அரசியல்வாதியுமான‌ பக்வான் தாஸ் இறப்பு நாள். (பிறப்பு-1869)
    1961ல் ஐநாவின் 2வது பொதுச் செயலரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவீடியருமான‌ டாக் ஹமாஷெல்ட் இறப்பு நாள். (பிறப்பு-1905)
    1966ல் ஈழத் தமிழறிஞரான‌ வித்துவான் க. வேந்தனார் இறப்பு நாள். (பிறப்பு-1918)
    1967ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளரான‌ ஜான் கொக்ரொஃப்ட் இறப்பு நாள். (பிறப்பு-1897)
    1970ல் அமெரிக்க பாடகரான‌ ஜிமி ஹென்றிக்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1942)
    1978ல் இலங்கை, மலையாள உளவியலாளரான‌ ஆபிரகாம் கோவூர் இறப்பு நாள். (பிறப்பு-1898)
    1992ல் இந்தியாவின் 6வது குடியரசுத் துணைத் தலைவரான‌ முகம்மது இதயத்துல்லா இறப்பு நாள். (பிறப்பு-1905)
    2005ல் இலங்கை-இந்திய சமூக செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான‌ ஆவாபாய் பொமாஞ்சி வாடியா இறப்பு நாள். (பிறப்பு-1913)
    2011ல் கருநாடக இசைக் கலைஞரான‌ டி. கே. கோவிந்த ராவ் இறப்பு நாள். (பிறப்பு-1929)
    2018ல் அமெரிக்கக் கட்டிடக்கலைஞடான‌ ராபர்ட் வெஞ்சூரி இறப்பு நாள். (பிறப்பு-1925)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 17
    Next articleSeptember 19 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 19