Today Special Historical Events In Tamil | 13-09 | September 13
September 13 Today Special | September 13 What Happened Today In History. September 13 Today Whose Birthday (born) | September-13th Important Famous Deaths In History On This Day 13/09 | Today Events In History September-13th | Today Important Incident In History | புரட்டாதி 13 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 13-09 | புரட்டாதி மாதம் 13ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 13.09 Varalatril Indru Nadanthathu Enna| September 13 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 13/09 | Famous People Born Today September 13 | Famous People died Today 13-09.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 13-09 | September 13
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 13-09 | September 13
1229ல் ஒகோடி கான் மங்கோலியப் பேரரசின் ககானாகப் பதவியேற்றார்.
1437ல் போர்த்துக்கீசப் படைகள் மொரோக்கோவின் தாங்கியர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
1501ல் மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.
1541ல் மூன்றாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த ஜான் கால்வின் திருச்சபைகளை கால்வினீசம் என்ற தனது புதிய சமய அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கும் நோக்கில் ஜெனீவா திரும்பினார்.
1584ல் எல் எசுக்கோரியல் அரண்மனை மத்ரித் நகரில் கட்டி முடிக்கப்பட்டது.
1609ல் என்றி அட்சன் பின்னர் அட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார்.
1743ல் பெரிய பிரித்தானியா, ஆஸ்திரியா, சார்தீனிய இராச்சியம் ஆகியன அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.
1759ல் ஏழாண்டுப் போர்: கனடாவின் கியூபெக் நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
1782ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரான்சிய-எசுப்பானியப் படைகள் ஜிப்ரால்ட்டர் மீதான பெரும் முற்றுகையை ஆரம்பித்தன.
1788ல் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத்தலைவர் தேர்தலுக்கான திகதி பிலடெல்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக நியூயோர்க் நகரம் அறிவிக்கப்பட்டது.
1791ல் பதினாறாம் லூயி மன்னன் பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டான்.
1814ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: போரின் திருப்புமுனையாக பிரித்தானியர் பால்ட்டிமோர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இச்சமரில் பிரான்சிசு கீ இயற்றிய பாடல் பின்னர் அமெரிக்காவின் தேசியப் பண்ணாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1847ல் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினர்.
1898ல் அனிபால் குட்வின் செலுலாயிடு புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார்.
1899ல் ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது தானுந்து விபத்து உயிரிழப்பு இடம்பெற்றது.
1923ல் எசுப்பானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினான்.
1948ல் ஐதராபாதில் நுழைந்து அதனை இந்திய ஒன்றியத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க இந்தியத் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
1949ல் இலங்கை, இத்தாலி பின்லாந்து, ஐசுலாந்து, யோர்தான் ஆகிய 6 நாடுகள் ஐநாவில் அங்கத்துவம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.
1953ல் நிக்கிட்டா குருசேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1956ல் ஐபிஎம் முதல் தடவையாக வட்டு சேமிப்பை அறிமுகப்படுத்தியது.[1]
1968ல் பனிப்போர்: அல்பேனியா வார்சா ஒப்பந்த அமைப்பில் இருந்து விலகியது.
1971ல் மா சே துங்கின் இரண்டாவது தளபதி லின் பியாவோ இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து சீனாவை விட்டு வெளியேறினார். இவர் சென்ற விமானம் மங்கோலியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
1971ல் நியூயோர்க்கில் சிறைக்கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
1987ல் பிரேசில் மருத்துவமனை ஒன்றில் இருந்து திருடப்பட்ட கதிரியக்கப் பொருள் ஒன்றினால் அடுத்தடுத்த வாரங்களில் பலர் கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறியால் உயிரிழந்தனர்.
1989ல் டெசுமான்ட் டுட்டுவின் தலைமையில் தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கல் கொள்கைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
1993ல் நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்தை வெள்ளை மாளிகை சந்தித்தார்.
1995ல் கொழும்பு இரத்மலானையில் இருந்து பலாலிக்கு இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற அன்டனோவ் ஏஎன்-32 வானூர்தி ஜா-எல அருகே கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.[2][3]
2001ல் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவில் விமான சேவைகள் ஆரம்பமாயின.
2007ல் பழங்குடிகளின் உரிமைகள் குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2008ல் தில்லியில் தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதில் 30 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர்.
2013ல் தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானித்தான் எராட் நகரில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் மீது தாக்குதலை நடத்தியதில், இரண்டு காவல்துரையினர் கொல்லப்பட்டனர்.
2018ல் மாசச்சூசெட்ஸ் எரிவளி வெடிப்புகள்: எரிவாயு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், 25 பேர் காயமடைந்தனர். 40 வீடுகள் அழிந்தன.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 13-09 | September 13
1853ல் தென்மார்க்கு நுண்ணுயிரியியலாளரான ஆன்சு கிறிட்டியன் கிராம் பிறந்த நாள். (இறப்பு-1938)
1886ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளரான ராபர்ட் ராபின்சன் பிறந்த நாள். (இறப்பு-1975)
1896ல் ஈழத்துத் தமிழறிஞரும் புலவருமான மு. நல்லதம்பி பிறந்த நாள். (இறப்பு-1951)
1898ல் இலங்கை அரசியல்வாதியான கதிரவேலு சிற்றம்பலம் பிறந்த நாள். (இறப்பு-1964)
1912ல் அமெரிக்க வானியலாளரான ஒரேசு வெல்கம் பாப்காக் பிறந்த நாள். (இறப்பு-2003)
1916ல் உவெல்சு-ஆங்கிலேய எழுத்தாளரான ரூவால் டால் பிறந்த நாள். (இறப்பு-1990)
1929ல் தமிழக அரசியல்வாதியான கோ. சி. மணி பிறந்த நாள். (இறப்பு-2016)
1932ல் இலங்கை இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான எம். கே. றொக்சாமி பிறந்த நாள். (இறப்பு-1988)
1947ல் ஈழத்து எழுத்தாளரும் இதழாசிரியருமான சி. தர்மகுலசிங்கம் பிறந்த நாள். (இறப்பு-2011)
1960ல் தென்னிந்திய நடிகரான கார்த்திக் பிறந்த நாள்.
1960ல் தென்னாப்பிரிக்க ஊடகவியலாளரான கெவின் கார்ட்டர் பிறந்த நாள். (இறப்பு-1994)
1960ல் ஆந்திராவின் 16வது முதலமைச்சரான நல்லாரி கிரண் குமார் ரெட்டி
1969ல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரரான சேன் வார்ன் பிறந்த நாள். (இறப்பு-2022)
1971ல் குரொவாசிய தென்னிசு வீரரான கொரான் இவானிசெவிச் பிறந்த நாள்.
1982ல் தமிழகத் திரைப்பட நடிகரும் மருத்துவருமான வி. சேதுராமன் பிறந்த நாள். (இறப்பு-2020)
1989ல் செருமானியக் கால்பந்து வீரரான தோமா முல்லர் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 13-09 | September 13
81ல் உரோமைப் பேரரசரான டைட்டசு இறப்பு நாள். (பிறப்பு-39)
1598ல் எசுப்பானிய மன்னரான இரண்டாம் பிலிப்பு இறப்பு நாள். (பிறப்பு-1526)
1901ல் இந்திய வழக்கறிஞரும் மைசூர் திவானுமாகிய கு. சேசாத்ரி ஐயர் இறப்பு நாள். (பிறப்பு-1845)
1929ல் இந்தியச் செயற்பாட்டாளரான ஜத்தீந்திர நாத் தாஸ் இறப்பு நாள். (பிறப்பு-1904)
1936ல் செருமானிய இயற்பியலாளரும் வானியலாளருமான யோகான்னசு பிரான்சு ஆர்ட்மேன் இறப்பு நாள். (பிறப்பு-1865)
1941ல் உருசிய வானியலாளரும் புவி இயற்பியலாளருமான போரிசு வசீலியேவிச் நியுமெரோவ் இறப்பு நாள். (பிறப்பு-1891)
1944ல் பிரித்தானிய சிறப்பு உளவுப் பிரிவின் இரகசிய உளவாளியான நூர் இனாயத் கான் இறப்பு நாள். (பிறப்பு-1914)
1975ல் கருநாடக இசைப் பாடகரான முடிகொண்டான் வெங்கடராம ஐயர் இறப்பு நாள். (பிறப்பு-1897)
1996ல் அமெரிக்க ராப் இசைக்கலைஞரான டூப்பாக் ஷகூர் இறப்பு நாள். (பிறப்பு-1971)
1999ல் அமெரிக்க உளவியலாளரான பெஞ்சமின் புளூம் இறப்பு நாள். (பிறப்பு-1913)
2009ல் தமிழகத் தமிழறிஞரும் எழுத்தாளருமான அரங்க முருகையன் இறப்பு நாள். (பிறப்பு-1932)
2010ல் தமிழக எழுத்தாளரான ஆர். சூடாமணி இறப்பு நாள். (பிறப்பு-1931)
2012ல் இந்தியாவின் 21-வது தலைமை நீதிபதியான ரங்கநாத் மிஸ்ரா இறப்பு நாள். (பிறப்பு-1926)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan