September 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 12

0

Today Special Historical Events In Tamil | 12-09 | September 12

September 12 Today Special | September 12 What Happened Today In History. September 12 Today Whose Birthday (born) | September-12th Important Famous Deaths In History On This Day 12/09 | Today Events In History September-12th | Today Important Incident In History | புரட்டாதி 12 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 12-09 | புரட்டாதி மாதம் 12ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 12.09 Varalatril Indru Nadanthathu Enna| September 12 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 12/09 | Famous People Born Today September 12 | Famous People died Today 12-09.

September 12
  • Today Special in Tamil 12-09
  • Today Events in Tamil 12-09
  • Famous People Born Today 12-09
  • Famous People died Today 12-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 12-09 | September 12

    தேசிய நாளாக கொண்டாடப்படுகிறது. (கேப் வர்டி)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 12-09 | September 12

    கிமு 490ல் மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.
    1185ல் பைசாந்தியப் பேரரசர் முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார்.
    1609ல் என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார்.
    1634ல் மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், பல கட்டடங்கள் சேதமடைந்தன.
    1683ல் உதுமானியப் பேரரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் வியென்னாவில் இடம்பெற்ற போரில் ஒன்றிணைந்தன.
    1762ல் சூலு சுல்தானகம் மலேசியாவில் உள்ள பலம்பாங்கன் தீவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் கையளித்தது.
    1814ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வடக்கு முனை சமரில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியரின் பால்ட்டிமோர் நோக்கிய முன்னெடுப்பைத் தடுத்தன.
    1848ல் சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
    1857ல் மத்திய அமெரிக்கா கப்பல் வட கரொலைனாவில் ஆல்ட்டெராசு முனையின் கிழக்கே 160 மைல்கள் தூரத்தில் மூழ்கியதில், 426 பேர் உயிரிழந்தனர். இக்கப்பலில் கலிபோர்னியா தங்க வேட்டையில் இருந்து 13–15 தொன்கள் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.
    1890ல் ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டாது.
    1915ல் பிரெஞ்சுப் போர்வீரர்கள் ஆர்மீனிய இனப்படுகொலைகளில் இருந்து தப்பிய 4,000 இற்கும் அதிகமானோரைக் காப்பாற்றினர்.
    1923ல் தெற்கு ரொடீசியா (இன்றைய சிம்பாப்வே) ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.
    1933ல் அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முதலாக லியோ சிலார்ட் அறிவித்தார்.
    1940ல் குகை ஓவியங்கள் பிரான்சில் லாசுக்கோ நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
    1940ல் நியூ செர்சியில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 51 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமுற்றனர்.
    1942ல் இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் போர்வீரர்கள், இத்தாலியப் போர்க்கைதிகள், மற்றும் பொதுமக்களை ஏற்றிச் என்ற லக்கோனியா என்ற கப்பல் மேற்கு ஆபிரிக்காவில் செருமனியர்களால் தாக்கப்பட்டு மூழ்கியது.
    1943ல் இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி வீட்டுக்காவலிலிருந்து செருமனிய படைத்தளபதி ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.
    1948ல் முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.
    1959ல் லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
    1974ல் எத்தியோப்பியாவின் பேரரசராக 58 ஆண்டுக் காலம் பதவியில் இருந்த முதலாம் ஹைலி செலாசி இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
    1977ல் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.
    1980ல் துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
    1990ல் செருமானிய மீளிணைவுக்கான ஒப்பந்தம் மாஸ்கோவில் கையெழுத்தானது.
    1992ல் நாசாவின் எண்டெவர் விண்ணோடம் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
    2001ல் ஆஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கிடையேயான முதலாவது பயணிகள் போக்குவரத்து விமான சேவையான “ஆன்செட் ஆஸ்திரேலியா” மூடப்பட்டது. 10,000 பேர் வேலையிழந்தனர்.
    2003ல் லிபியா மீதான பன்னாட்டுப் பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் அவை விலக்கியது.
    2006ல் திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் ஜேர்மனியில் நிகழ்த்திய உரையின் போது “தீங்கு விளைவிக்கிற மற்றும் மனிதத் தன்மையற்ற விடயங்களையே நபிகள் நாயகம் இவ்வுலகிற்கு அளித்தார்” என்று தெரிவித்தார். இதற்கு முசுலிம்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து திருத்தந்தை மன்னிப்புக் கேட்டார்.
    2008ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர்.
    2015ல் மத்தியப் பிரதேசம், பெட்லாவாத் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 105 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 12-09 | September 12

    1832ல் தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடியான‌ சி. வை. தாமோதரம்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1901)
    1866ல் ஆங்கிலேயத் துடுப்பாளரும் அரசியல்வாதியும் கனடாவின் 13வது ஆளுநருமான‌ வெல்லிங்டன் பிரபு பிறந்த நாள். (இறப்பு-1941)
    1897ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளரான‌ ஐரீன் ஜோலியோ கியூரி பிறந்த நாள். (இறப்பு-1956)
    1912ல் இந்திய அரசியல்வாதியும் பத்திரிகையாளருமான‌ பெரோஸ் காந்தி பிறந்த நாள். (இறப்பு-1960)
    1913ல் அமெரிக்கத் தடகள விளையாட்டு வீரரான‌ ஜெசி ஓவென்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1980)
    1913ல் சப்பானியத் தொழிலதிபரான‌ இஜி டொயோடா பிறந்த நாள். (இறப்பு-2013)
    1915ல் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியான‌ பி. எஸ். கைலாசம் பிறந்த நாள்.
    1930ல் நோபல் பரிசு பெற்ற சப்பானிய வேதியியலாளரான‌ அக்கிரா சுசுக்கி பிறந்த நாள்.
    1938ல் மலையாள நடிகரான‌ திலகன் பிறந்த நாள். (இறப்பு-2012)
    1944ல் அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளரான‌ லியோனார்ட் பெல்டியர் பிறந்த நாள்.
    1945ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ ரிச்சர்ட் தாலர் பிறந்த நாள்.
    1957ல் செருமானிய இசையமைப்பாளரான‌ ஹான்ஸ் சிம்மர் பிறந்த நாள்.
    1960ல் இந்திய தமிழ் நகைச்சுவை நடிகரான‌ வடிவேலு பிறந்த நாள்.
    1965ல் ஈழத்து எழுத்தாளரான‌ மாவை வரோதயன் பிறந்த நாள். (இறப்பு-2009)
    1968ல் இந்திய நடிகையான‌ அமலா பிறந்த நாள்.
    1969ல் விடுதலைப் புலிகளின் போராளியான‌ கப்டன் மொறிஸ் பிறந்த நாள். (இறப்பு-1989)
    1973ல் அமெரிக்க நடிகரான‌ பால் வாக்கர் பிறந்த நாள். (இறப்பு-2013)
    1977ல் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகரான‌ கிரிஷ் பிறந்த நாள்.
    1989ல் தமிழகத் திரைப்பட நடிகரான‌ கௌதம் கார்த்திக் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 12-09 | September 12

    1885ல் சம்மு காசுமீர் மன்னரான‌ ரண்பீர் சிங் இறப்பு நாள். (பிறப்பு-1830)
    1927ல் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளருமான‌ சாரா பிரான்சிசு வைட்டிங் இறப்பு நாள். (பிறப்பு-1847)
    1977ல் தென்னாபிரிக்க செயற்பாட்டாளரான‌ ஸ்டீவ் பைக்கோ இறப்பு நாள். (பிறப்பு-1946)
    1981ல் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளரான‌ எயுஜேனியோ மொண்டாலே இறப்பு நாள். (பிறப்பு-1896)
    1983ல் இந்திய நடிகரும் நாட்டிய மற்றும் இசைக் கலைஞரும் எழுத்தாளருமான‌ ரஞ்சன் இறப்பு நாள். (பிறப்பு-1918)
    1997ல் ஈழத்து முஸ்லிம் எழுத்தாளரான‌ இளங்கீரன் இறப்பு நாள். (பிறப்பு-1927)
    2004ல் தமிழக எழுத்தாளரும் திரைக்கதையாசிரியருமான‌ பி. டி. சாமி இறப்பு நாள். (பிறப்பு-1930)
    2009ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கரான‌ நார்மன் போர்லாக் இறப்பு நாள். (பிறப்பு-1914)
    2010ல் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியான‌ சுவர்ணலதா இறப்பு நாள்.
    2017ல் தமிழக எழுத்தாளரான‌ ஆர். கே. சண்முகம் இறப்பு நாள். (பிறப்பு-1930)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 11
    Next articleSeptember 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 13