September 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 07

0

Today Special Historical Events In Tamil | 07-09 | September 07

September 07 Today Special | September 07 What Happened Today In History. September 07 Today Whose Birthday (born) | September-07th Important Famous Deaths In History On This Day 07/09 | Today Events In History September-07th | Today Important Incident In History | புரட்டாதி 07 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 07-09 | புரட்டாதி மாதம் 07ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 07.09 Varalatril Indru Nadanthathu Enna| September 07 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 07/09 | Famous People Born Today September 07 | Famous People died Today 07-09.

September 07
  • Today Special in Tamil 07-09
  • Today Events in Tamil 07-09
  • Famous People Born Today 07-09
  • Famous People died Today 07-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 07-09 | September 07

    விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பிரேசில் போர்த்துகலிடம் இருந்து 1822 இல்)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 07-09 | September 07

    70ல் உரோமைப் பேரரசின் இராணுவம் டைட்டசு தலைமையில் எருசலேமைக் கைப்பற்றியது.
    878ல் திக்குவாயர் லூயி மேற்கு பிரான்சியாவின் மன்னராக எட்டாம் யோவான் திருத்தந்தையால் முடிசூடப்பட்டார்.
    1159ல் மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
    1191ல் மூன்றாம் சிலுவைப் போர்: இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அர்சுப் நகரில் நடந்த சண்டையில் சலாகுத்தீனைத் தோற்கடித்தார்.
    1228ல் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.[1]
    1303ல் பிரெஞ்சு மன்னர் நான்காம் பிலிப்பின் உத்தரவில் திருத்தந்தை எட்டாம் பொனிபேசு கைது செய்யப்பட்டார்.
    1571ல் நோர்போக்கின் 4-வது கோமகன் தோமசு அவார்டு இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தைக் கொலை செய்ய சதி முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.
    1652ல் 15,000 ஆன் சீன விவசாயிகளும் துணை இராணுவக்குழுக்களும் சீனக் குடியரசில் இடச்சு ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
    1695ல் முகலாயர்களின் கஞ்ச்-இ-சவாய் கப்பலை ஆங்கிலேயக் கடற்கொள்ளைக்காரன் என்றி எவரி கைப்பற்றினான். இதுவே வரலாற்றில் மிகப்பெரும் கப்பல் கொள்ளை எனக் கருதப்படுகிறது. பதிலுக்கு, பேரரசர் ஔரங்கசீப் இந்தியாவுடனான ஆங்கிலேயர்களின் வணிகத்தைத் தடை எய்யப்போவதாக அச்சுறுத்தினார்.
    1706ல் எசுப்பானிய மரபுரிமைப் போர்: துரின் முற்றுகை முடிவடைந்தது. பிரெஞ்சுப் படைகள் வடக்கு இத்தாலியில் இருந்து விலகிக்கொண்டன.
    1778ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரான்சு பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளில் டொமினிக்காவை ஆக்கிரமித்தது.
    1812ல் நெப்போலியப் போர்கள்: நெப்போலியன் உருசியப் படைகளை பரடீனோ என்ற கிராமத்தில் தோற்கடித்தான்.
    1818ல் மூன்றாம் காருல் நோர்வே மன்னராக குடி சூடினார்.
    1822ல் முதலாம் டொம் பெத்ரோ போர்த்துகலில் இருந்து பிரேசிலின் விடுதலையை சாவோ பாவுலோவில் இருந்து அறிவித்தார்.
    1860ல் இத்தாலிய ஐக்கியம்: கரிபால்டி நாபொலியை அடைந்தார்.
    1864ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அட்லாண்டாவில் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
    1870ல் எசுப்பானியாவின் வீகோ அருகே பிரித்தானிய அரச கடற்படையின் காப்டன் என்ற போர்க்கப்பல் மூழ்கியதில் 500 பேர் வரை உயிரிழந்தனர்.[2]
    1911ல் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர் கைது செய்யப்பட்டார்.
    1921ல் கத்தோலிக்கரின் மரியாயின் சேனை என்ற அமைப்பு டப்ளின் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
    1923ல் பன்னாட்டுக் காவலகம் (இன்டர்போல்) ஆரம்பிக்கப்பட்டது.
    1927ல் முதலாவது முழுமையான இலத்திரனியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்டது.
    1929ல் பின்லாந்தில் “குரு” என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.
    1936ல் கடைசி தாசுமேனியப் புலி ஓபார்ட்டில் இறந்தது.
    1940ல் இரண்டாம் உலகப் போர்: தி பிளிட்ஸ்: நாட்சி ஜெர்மனி பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் லண்டன் நகர் மீது 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 50 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.
    1943ல் டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர்.
    1945ல் இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் 1941 டிசம்பர் முதல் நிலை கொண்டிருந்த சப்பானியப் படைகள் அமெரிக்கக் கடற்படையிடம் சரணடைந்தன.
    1945ல் இரண்டாம் உலகப் போர்: பெர்லின் வெற்றி ஊர்வலம் இடம்பெற்றது.
    1953ல் நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    1965ல் இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப்போவதாக சீனா அறிவித்தது.
    1970ல் யோர்தானில் அரபுக் கரந்தடிப் படைகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை ஆரம்பமானது.
    1977ல் கனடா, ஒண்டாரியோவில் 300-மீட்டர் உயரத் தொலைத்தொடர்புக் கோபுரத்தின் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதியதில் கோபுரம் உடைந்து வீழ்ந்தது.
    1977ல் பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.
    1978ல் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
    1978ல் பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் லண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில் பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    1986ல் தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதலாவது கறுப்பின ஆயராக டெசுமான்ட் டுட்டு நியமிக்கப்பட்டார்.
    1988ல் சோவியத் மீர் விண்வெளி நிலையத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த ஆப்கானித்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அகாது மொகுமாண்டு சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.
    1999ல் ஏதன்சில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர்.
    1999ல் இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.
    2005ல் எகிப்தில் முதலாவது பல-கட்சி அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
    2011ல் உருசியாவில் இடம்பெற்ற விமான விபத்தில், லோக்கோமோட்டிவ் யாரொசுலாவ் பனி வளைதடியாட்ட அணியின் அனைத்து வீரர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.
    2017ல் 2017 சியாப்பசு நிலநடுக்கம்: தெற்கு மெக்சிக்கோவில் இடமொஎற்ற 8.2 அளவு நிலநடுக்கத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 07-09 | September 07

    1533ல் இங்கிலாந்தின் அரசியான‌ முதலாம் எலிசபெத் பிறந்த நாள். (இறப்பு-1603)
    1860ல் அமெரிக்க ஓவியரான‌ அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் பிறந்த நாள். (இறப்பு-1961)
    1867ல் தமிழக நாடகாசிரியரும் நாடக நடிகருமான‌ சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாள். (இறப்பு-1922)
    1870ல் உருசிய நாடுகாண் பயணியும் எழுத்தாளருமான‌ அலெக்சாண்டர் குப்ரின் பிறந்த நாள். (இறப்பு-1938)
    1877ல் இலங்கை குடியேற்றக்கால அரசியல்வாதியும் தொழிலதிபருமான‌ முகம்மது மாக்கான் மாக்கார் பிறந்த நாள். (இறப்பு-1952)
    1911ல் இலங்கை மருத்துவரான‌ அப்பாக்குட்டி சின்னத்தம்பி பிறந்த நாள். (இறப்பு-1986)
    1925ல் இந்திய நடிகையும் பாடகியும் இயக்குநருமான‌ பி. பானுமதி பிறந்த நாள். (இறப்பு-2005)
    1928ல் அமெரிக்க மருத்துவரும் கல்வியாளருமான‌ தொனால்டு எண்டர்சன் பிறந்த நாள். (இறப்பு-2016)
    1929ல் தொழுநோய் மருத்துவரும் எழுத்தாளருமான‌ சார்வாகன் பிறந்த நாள். (இறப்பு-2015)
    1929ல் தமிழகக் கவிஞரான‌ பெரி. சிவனடியார் பிறந்த நாள். (இறப்பு-2004)
    1930ல் இலங்கைப் பத்திரிகையாளரான‌ எஸ். சிவநாயகம் பிறந்த நாள். (இறப்பு-2010)
    1934ல் இந்திய வங்காளக் கவிஞரான‌ சுனில் கங்கோபாத்யாயா பிறந்த நாள். (இறப்பு-2012)
    1934ல் கேரள இதழாளரும் இறைமறுப்பாளரருமான சோசப் இடமருகு பிறந்த நாள். (இறப்பு-2006)
    1951ல் மலையாள நடிகரான‌ மம்முட்டி பிறந்த நாள்.
    1963ல் இந்திய விமானப் பணிப்பெண்ணான‌ நீரஜா பனோட் பிறந்த நாள். (இறப்பு-1986)
    1984ல் இலங்கைத் துடுப்பாளரான‌ மாலிங்க பண்டார பிறந்த நாள்.
    1985ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ ராதிகா ஆப்தே பிறந்த நாள்.
    1987ல் அமெரிக்க நடிகையான‌ இவான் ரசேல் வூட் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 07-09 | September 07

    1566ல் உதுமானியப் பேரரசரான‌ முதலாம் சுலைமான் இறப்பு நாள். (பிறப்பு-1494)
    1809ல் தாய்லாந்து மன்னரான‌ முதலாம் இராமா இறப்பு நாள். (பிறப்பு-1737)
    1949ல் ஆத்திரேலிய உளவியலாளரான‌ எல்டன் மேயோ இறப்பு நாள். (பிறப்பு-1880)
    1974ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ சி. மூ. இராசமாணிக்கம் இறப்பு நாள். (பிறப்பு-1913)
    1988ல் தமிழ்த் திரைப்பட நடிகயும் பரதநாட்டியக் கலைஞரும் கருநாடக இசைப் பாடகியுமான‌ வசுந்தரா தேவி இறப்பு நாள். (பிறப்பு-1917)
    1997ல் கொங்கோவின் அரசுத்தலைவரான‌ மொபுட்டு செசெ செக்கோ இறப்பு நாள். (பிறப்பு-1930)
    2008ல் சப்பானிய இயக்குநரும் தயாரிப்பாளரான‌ நாகி நோடா இறப்பு நாள். (பிறப்பு-1973)
    2014ல் தமிழக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான‌ சு. கிருஷ்ணமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1929)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 06
    Next articleஇன்றைய ராசி பலன் 02.09.2022 Today Rasi Palan 02-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!