இன்றைய ராசி பலன் 02.09.2022 Today Rasi Palan 02-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 02-09-2022 ஆவணி மாதம் 17ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். இன்று சஷ்டி திதி பகல் 01.51 வரை பின்பு வளர்பிறை சப்தமி ஆகும். இன்று விசாகம் நட்சத்திரம் இரவு 11.47 வரை பின்பு அனுஷம் ஆகும். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம் ஆகும். இன்று நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். இன்று முருக வழிபாடு செய்வது நல்லது.

இராகு காலம்: பகல் 10.30-12.00, எம கண்டம்: மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள்: காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம் ராசிக்கு இன்றைய நாள் பலன்கள்:

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 05.55 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது உத்தமம்.

ரிஷபம் ராசிக்கு இன்றைய நாள் பலன்கள்:

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மிதுனம் ராசிக்கு இன்றைய நாள் பலன்கள்:

இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் சில இடையூறுகள் ஏற்படலாம். வீடு, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

கடகம் ராசிக்கு இன்றைய நாள் பலன்கள்:

இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மன உளைச்சல்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். கையில் இருப்பதை கொண்டு செலவு செய்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும்.

சிம்மம் ராசிக்கு இன்றைய நாள் பலன்கள்:

இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்-.

கன்னி ராசிக்கு இன்றைய நாள் பலன்கள்:

இன்று தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு அமையும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.

துலாம் ராசிக்கு இன்றைய நாள் பலன்கள்:

இன்று அலுவலக பணிகளில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் நிதானத்துடன் இருப்பது நல்லது. வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும்.

விருச்சிகம் ராசிக்கு இன்றைய நாள் பலன்கள்:

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

தனுசு ராசிக்கு இன்றைய நாள் பலன்கள்:

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் உண்டாகும். தொழில் ரீதியான முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

மகரம் ராசிக்கு இன்றைய நாள் பலன்கள்:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். குடும்பத்தில் பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அசையா சொத்துக்களால் ஆதாயம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.

கும்பம் ராசிக்கு இன்றைய நாள் பலன்கள்:

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிகாக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.

மீனம் ராசிக்கு இன்றைய நாள் பலன்கள்:

இன்று உங்கள் ராசிக்கு மாலை 05.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleSeptember 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 07
Next articleஆறு துணை பாரதியார் கவிதைகள் Aaru Thunai Bharathiyar Kavithaigal PDF தோத்திரப் பாடல்