ஆறு துணை
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி – ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
கணபதி ராயன் — அவனிரு
காலைப் பிடித் திடுவோம்
குணமுயர்ந் திடவே — விடுதலை
கூடி மகிழ்ந் திடவே
(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 1
சொல்லுக் கடங்காவே — பராசக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள் — பராசக்தி
வாழி யென்றே துதிப்போம். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 2
வெற்றி வடிவேலன் — அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்;
சுற்றிநில் லாதேபோ! — பகையே!
துள்ளி வருகுதுவேல். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 3
தாமரைப் பூவினிலே — சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே — கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 4
பாம்புத் தலைமேலே — நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ் வோம்
மாம்பழ வாயினிலே — குழலிடஞ
வண்மை புகழ்ந்திடுவோம். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 5
செல்வத் திருமகளைத் — திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்.
செல்வ மெல்லாந் தருவாள் — நமதொளி
திக்க னைத்தும் பரவும். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 6
Related Articles: Aaru Thunai Bharathiyar Kavithaigal PDF Tamil, Aaru Thunai Padal Pdf, Aaru Thunai Kavithai Pdf, Aaru Thunai Tamil Lyrics, Aaru Thunai in Tamil.
பாரதியார் பாடல்கள் தொகுப்பு – Youtube
By: Tamilpiththan