Sani Peyarchi Palangal Viruchigam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் 2020-2023 Scorpio Astrology Viruchiga Rasi விருச்சிக ராசி

0

Sani Peyarchi Palangal Viruchigam 2020-2023

Sani Peyarchi Palangal Viruchigam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் 2020-2023
Mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Mesha, Rishaba, Mithuna, Kadaga, Simha, Kanya, Thula, Viruchika, Dhanu, Makara, Kumbha, Meena.
Sani Peyarchi Palangal Viruchigam 2020-2023

Sani Peyarchi Palangal Viruchigam 2020-2023: விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

முன்னெடுக்கும் முயற்சிகளில் எந்தவிதமான எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல் அயராது பாடுபடக்கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, செவ்வாய் ராசியில் பிறந்த நீங்கள் இயற்கையாகவே துனிவு குணம் உடைய உங்களுக்கு இதுநாள் வரை ஏழரைச்சனி நடைபெற்றதால் பல்வேறு வகையில் நெருக்கடிகளை சந்தித்து வந்தீர்கள்.

தற்போது 2-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளதனால் கடந்த ஏழரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஏழரைச்சனி முழுமையாக முடிவடைகிறதனால், பணவரவுகள் சிறப்பாக எதிர்பாராத தன வரவுகள் கிடைக்கப்பெற்று கடன் பிரச்சினைகள் படிப்டியாக விலகுவதுடன், அனைத்து தேவைகளும் தடையின்றி பூர்த்தியாகும்.

மேலும், உடல் ஆரோக்கியம் மேன்மை அடைவதால் மருத்துவ செலவுகள் குறைவடைவதுடன், திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறுதல் மற்றும் குழந்தை பாக்கியம் என்பன மூலமான மன நிறைவு ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவுவதன் ஊடாக இதுவரை உங்கள் வாழ்வில் இருந்து வந்த நெருக்கடிகள் பிரச்சினைகள் அனைத்தும் விலகி தொட்ட தெல்லாம் பொன்னாகும்.

புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். மேலும், உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைத்தல், தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டிகள் குறைவடைதல், வேலை ஆட்களால் சிறப்பான ஆதாயங்கள் கிடைத்தல் என்பன மூலம் தொழிலை விரிவுபடுத்த முடியும். இதனைவிட, பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையப் பெற்று பொன் பொருள் சேருவதுடன், வீடு மனை, வண்டி மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி 3-ல் சஞ்சரித்து அற்புதமான பலன்களை அள்ளித்தரும் இக்காலங்களில் குருபகவானும் வரும் 20-11-2020 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், 13-04-2022 முதல் 22-04-2023 வரை 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் க்காலங்களில் மேலும் மகிழ்ச்சியான நிகழ்வுகள் குடும்பத்தில் நடந்து மகிழ்ச்சி ஏற்படுவதன் மூலம் உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும்.

எதிர்வரும் 23-09-2020 முடிய கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதும், அதனை தொடர்ந்து வரும் 23-09-2020 முதல் 12-04-2022 முடிய ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதும் கணவன் மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தும் அமைப்பு; என்பதனால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதுடன், விட்டு கொடுத்து செல்வது நல்லது.

உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிலவுவதால் மனமகிழ்ச்சி அடைவதுடன், குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைவடைவதுடன், மருத்துவ செலவுகள் மறைந்து உடல் நிலை மிக அற்புதமாக புதுப் பொலிவுடன் காட்சி அமையப்பெற்று எந்தவொரு காரியத்தையும் இலகுவில் செய்து முடிக்கும் அளவிற்கு சுறுசுறுப்புடன் திகழ்வீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை எப்படி இருக்கும்

உற்றார், உறவினர்கள் ஆதரவு சிறப்பாக அமைவதுடன், தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் குறிப்பாக சிறப்பான புத்திர பாக்கியத்தை பெறுவர். மேலும், குடும்பத்தில் தாராள தன வரவுகளால் எல்லா தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகி பொருளாதார நிலை மேம்படும். இவ்வாறாக குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எனினும், சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது மற்றும் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.

கொடுக்கல் வாங்கல் எப்படி இருக்கும்

கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று ஏற்றம் அடைவதுடன், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். மேலும், பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். குறிப்பாக கமிஷன் ஏஜென்ஸி காண்ராக்ட் போன்றவற்றில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். இதனைவிட, உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையப்பெற்று உங்களது கடன்கள் யாவும் குறையும்.

தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய பொற்காலமாக கடந்த கால நெருக்கடிகள் மறைந்து முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். மேலும், புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைப்பதுடன், வெளியூர் வெளிநாடு மூலம் அனுகூலம் மற்றும் புதிய வாய்ப்புகள் தேடி வருதல் அரசு வழியிலான சாதகமான பலன்கள் போன்றனவும் கிடைக்கும். மிக முக்கியமாக புதிய கூட்டாளிகள் சேர்ந்து உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

உத்தியோகம் எப்படி இருக்கும்

அதிகாரிகளின் ஆதரவுகளும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளும் வேலை பளுவை குறைத்துக் கொள்ள உதவுவதுடன், உங்கள் திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள் மற்றும் தடைபட்ட உயர்வுகள் கிடைக்கப் பெறுதல் என்பனவற்றினால் மகிழ்ச்சி கடலில் நீந்துவீர்கள். மேலும், எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையும் அமைப்பு, மன நிம்மதி ஏற்படுதல் மற்றும் செய்யும் பணிக்கேற்றபடி பாராட்டுதல்களும் கிடைத்தல் மூலம் பெயர் மற்றும் புகழை உயர்த்திக் கொள்வதனூடாக உங்கள் கனவுகள் யாவும் நனவாகும்.

அரசியல் நிலை எப்படி இருக்கும்

மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பெயர் புகழுக்கு பஞ்சம் இல்லாத நிலையில் மாண்புமிகு பதவிகள் எளிதில் கிடைக்கப் பெற்று எதிர்பார்க்கும் எடுக்கும் முயற்சிகளை சிறப்பாக செய்து முடித்து ஏற்றங்கள் உண்டாகும். மேலும், மறைமுக வருவாய் பெருகி பொருளாதார நிலை மிக சிறப்பாக அமைகின்ற வகையில் உங்களுக்கு இது பொற்காலம் என்றே சொல்லலாம்.

விவசாயிகள் நிலை எப்படி இருக்கும்

புதிய வழிமுறைகளைக் கையாண்டு நல்ல விளைச்சலை பெருக்க கூடிய தன்மை உள்ளதனால் பயிர் விளைச்சல் சிறப்பாக காணப்பட்டு பட்ட பாட்டிற்கான பலனை தடையின்றிப் பெற முடியும். இவ்வாறாக பணவரவுகளில் இருந்த தேக்கம் முற்றிலும் விலகுதல் மற்றும் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைத்தல் என்பனவற்றின் கூடாக அசையும் அசையா சொத்துகளை வாங்குதல் மற்றும் கடன்கள் யாவும் செலுத்தி முடிக்கப்படும். மேலும், பங்காளிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.

கலைஞர்கள் நிலை எப்படி இருக்கும்

உங்களுக்கு இருந்த தடைகள் எல்லாம் விலகி புதிய பட வாய்ப்புகள் தேடி வந்து குவிவதுடன், பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் மற்றும் எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கிடைத்து உங்கள் கனவுகள் நிறைவேறும். மேலும், ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதுடன் அடிக்கடி வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும்.

பெண்கள் நிலை எப்படி இருக்கும்

நினைத்தவரை கைபிடிக்கும் யோகம் கிட்டுவதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவுவதுடன், தடைப்பட்ட புத்திர பாக்கியத்தை பெற்று மன மகிழ்ச்சியை அடைவீர்கள். மேலும் பிரிந்த உறவுகள் ஒன்று கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். இதனைவிட, பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் பூர்த்தியடைதல் மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதனால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.

மாணவ மாணவியர் நிலை எப்படி இருக்கும்

கல்வியில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கப் பெற்று பல சாதனைகள் செய்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவதன் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படக் கூடிய காலமாகும். குறிப்பாக பேச்சு போட்டி கட்டுரை போட்டிகளில் பரிசுகளை தட்டிச் செல்வதுடன், வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று பயிலும் வாய்ப்புகளும் உண்டாகும்.

Sani Peyarchi Palangal Thulaam 2020-2023: விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

துலாம் தனுசு

ஏனைய அனைத்து ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleSani Peyarchi Palangal Thulaam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் துலாம் 2020-2023 Libra Astrology Thula Rasi துலாம் ராசி
Next articleThirukkural Avaavaruththal Adhikaram-37 திருக்குறள் அவாவறுத்தல் அதிகாரம்-37 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil