Sani Peyarchi Palangal Thulaam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் துலாம் 2020-2023 Libra Astrology Thula Rasi துலாம் ராசி

0

Sani Peyarchi Palangal Thulaam 2020-2023

Sani Peyarchi Palangal Kadagam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் துலாம் 2020-2023
Mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Mesha, Rishaba, Mithuna, Kadaga, Simha, Kanya, Thula, Viruchika, Dhanu, Makara, Kumbha, Meena.
Sani Peyarchi Palangal Thulaam 2020-2023

Sani Peyarchi Palangal Thulaam 2020-2023: சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

நேர்மையாக வாழ்தலையே தமது வாழ்நாள் இலட்சியமாக கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படகூடிய ஆற்றல் வாய்ந்த துலாம் ராசி நேயர்களே, சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுவரை 3-ல் சஞ்சரித்த சனி இவரும் திருக்கணிதத்தின் படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதனால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்குவதன் மூலம் இருப்பதை அனுப்பவிக்க முடியாதவாறு பல்வேறு இடையூறுகள் மற்றும் அலைச்சல் மூலமான டென்ஷன்கள் அதிகரித்து உங்களின் சுகவாழ்வு பாதிப்படையும்.

உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு சனி நட்பு கிரகம் என்பதனாலும் உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோன ஸ்தானமான 4, 5-க்கு சனி அதிபதியாகி மிக சிறந்த யோககாரகனாக திகழ்வதனாலும் உங்களுக்கு அதிகளவில் கெடுதலை ஏற்படுத்த மாட்டார். எனினும், நேரத்திற்கு உணவு உண்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ததல், தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனத்துடன் செயல்படுதல், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுதல் என்பனவற்றுடன் உடல் நிலையில் சோர்வு, மந்தநிலை மற்றும் கை, கால் மூட்டுகளில் வலி போன்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்துவதுடன், வண்டி வாகனங்கள் மூலமாக எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

மேலும், கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பதன் மூலமாக தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடிவதுடன், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எனினும், சிலருக்கு சற்று அதிகப்படியான வேலைபளு மற்றும் திடீர் இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும்.

அர்த்தாஷ்டமச் சனியால் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படுகின்ற போதிலும், இக்காலங்களில் குரு பகவான் உங்கள் ராசிக்கு வரும் 20-11-2020 வரை 3-ஆம் வீட்டிலும், 20-11-2020 முதல் 20-11-2021 வரை 4-ஆம் வீட்டிலும், 13-04-2022 முதல் 22-04-2023 வரை 6-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதல் பொருளாதார ரீதியாக சிறிது சுனக்கத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்பதனால் ஆடம்பர செலவுகளை குறைத்து பண விடயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் (கும்ப ராசியில்) 06-04-2021 முதல் 20-06-2021 வரையும் அதன் பின்பு 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சாரம் செய்ய உள்ள காலத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு இடையூறுக்குப் பின்னர் சாத்தியமாவதுடன், சிலருக்கு புத்திர பாக்கியமும் கிடைப்பதன் மூலமான பொருளாதார ரீதியாக அனுகூலப் பலனை அடைய முடியும். மேலும், உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதல் மற்றும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

தற்போது 3, 9-ல் சஞ்ரிக்கும் கேது, ராகு வரும் 23-09-2020 முதல் 12-04-2022 முடிய 2-ல் கேது, 8-ல் ராகு என சஞ்சரிக்க இருப்பதும், அதன் பின் 30-10-2023 முடிய ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு என சஞ்சரிக்க இருப்பதும் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படுத்தும் என்பதனால் கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதுடன், மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உடல்நிலையில் சற்று மந்த நிலை, சோர்வு என்பன உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் கெடுதிகள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் தேவையற்ற அலைச்சல்களை சற்றே குறைக்க முடிவதுடன், உணவு விஷயங்களில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது உத்தமமானது.

குடும்பம், பொருளாதார நிலை எப்படி இருக்கும்

சுபகாரிய முயற்சிகள் தடைகளுடன் நிறைவேறுகின்ற அதேவேளை வீடு, வண்டி, வாகனம் மூலம் சுப செலவு உண்டாகி கடன்கள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கும் போது பொருளாதாரநிலை ஒரளவுக்கு திருப்தியளிக்கும். மேலும், குடும்பத்தில் கணவன்- மனைவி மற்றும் உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் நிதானமாக பேசுவதுடன் அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையாக வாழ முடியும்.

கொடுக்கல் வாங்கல் எப்படி இருக்கும்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் எதிர்பார்க்கும் லாபத்தில் சில தடைகள் நிலவினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். அரசு வழியில் உதவிகள் கிட்டும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரித்தாலும் எதையும் சமாளித்து லாபம் அடைய கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் அதிகப்படியான அலைச்சலால் நிம்மதி குறைவு, உடல் அசதி ஏற்படும்.

உத்தியோகம் எப்படி இருக்கும்

பதவி உயர்வுகளால் கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். எதிலும் சற்று நிதானமாக செயல்பட்டால் அதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற முடியும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மற்றவர்கள் வேலையை நீங்கள் எடுத்து செய்ய வேண்டி இருக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

அரசியல் நிலை எப்படி இருக்கும்

பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தலைவர்களின் ஆதரவுகள் கிடைத்தாலும் உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே, மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் அவர்களின் ஆதரவுகளை தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும். மேலும், கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் வீண் செலவுகள் அதிகரிக்கும்.

விவசாயிகள் நிலை எப்படி இருக்கும்

பயிர் விளைச்சல் சுமாராக இருப்பினும் கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மேலும், போட்ட முதலீட்டினை எடுக்க சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருப்பதுடன், அசையும், அசையா சொத்து வழியில் சுப செலவுகள் ஏற்படும். இவ்வாறாக பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும் என்பதனால் பேச்சில் கவனத்துடன் இருப்பதுடன், சிக்கனமாக செயல்படுவது நல்லது.

கலைஞர்கள் நிலை எப்படி இருக்கும்

பணவரவுகள் நன்றாக இருந்த போதிலும் அதற்காக அதிகப்படியாக உழைக்க வேண்டி ஏற்படுவதுடன், புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போகும். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளால் சற்றே அனுகூலம் உண்டாகும்.

பெண்கள் நிலை எப்படி இருக்கும்

தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் உண்டாகும். முடிந்த வரை நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதும், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. மேலும், பணிபுரியும் பெண்களுக்கு பணியில் வேலைபளு அதிகரிக்கும்.

மாணவ மாணவியர் நிலை எப்படி இருக்கும்

பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் அதேவேளை கல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலம் என்பதனால் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்த்து சற்று கவனமுடன் செயற்படுவதன் மூலம் ஒரளவுக்கு அனுகூலங்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

கன்னி விருச்சிகம்

ஏனைய அனைத்து ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleSani Peyarchi Palangal Simmam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் சிம்மம் 2020-2023 Leo Astrology Simha Rasi சிம்ம ராசி
Next articleSani Peyarchi Palangal Viruchigam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் 2020-2023 Scorpio Astrology Viruchiga Rasi விருச்சிக ராசி