Sani Peyarchi Palangal Kanni 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் கன்னி 2020-2023 Virgo Astrology Kanya Rasi கன்னி ராசி

0

Sani Peyarchi Palangal Kanni 2020-2023

Sani Peyarchi Palangal Kanni 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் கன்னி 2020-2023
Mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Mesha, Rishaba, Mithuna, Kadaga, Simha, Kanya, Thula, Viruchika, Dhanu, Makara, Kumbha, Meena.கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2020
Sani Peyarchi Palangal Kanni 2020-2023

Sani Peyarchi Palangal Kanni 2020-2023 உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

சொல்லாலும் செயலாலும் பிறரைப் புண்படுத்தாமல் மிகவும் நிதானமுடனும், நேர்மையுடனும் வாழக் கூடிய பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, புதனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான சனி இது நாள் வரை 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெற்றதால் பல வித இன்னல்களை சந்தித்து வந்தீர்கள். திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளதனால் உங்களுக்கு நிலவிய தேவையற்ற அலைச்சல்கள் குறைவடைந்து உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக மறைந்து அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடிவதுடன் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சிலருக்கு வயிறு பாதிப்பு ஏற்பட கூடும் என்பதனால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. மேலும், அசையும், அசையா சொத்து வகையில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும் அதேவேளை தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவடைந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடிவதுடன், தேவையற்ற வீண் செலவுகள் குறைந்து பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் உருவாகி சேமிப்பினைப் பெருக்கிக் கொள்ள முடியம். பூர்வீக சொத்து ரீதியாக பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட 4டும் என்பதனால்; உறவினர்களுடனான பேச்சில் மிகவம் அவதானத்துடன் இருப்பது நல்லது. மேலும், பிள்ளைகள் வகையில் சிறிது மன கவலை தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதனால் அவர்களை கையாள்வதில் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் குடும்பத்தில் சுபிட்சம் மலரும்.

சனி 5-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டு கோளான குருபகவான் 20-11-2020 முதல் 20-11-2021 வரை 5-ஆம் வீட்டிலும், 13-04-2022 முதல் 22-04-2023 வரை 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கவுள்ள காலத்தில் பொருளாதார ரீதியாக மேலும் பல அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஏற்கனவே உள்ள கடன்கள் யாவும் குறைவடைவதுடன், திருமண சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். மேலும், பல பெரிய மனிதர்களின் நட்பு கிடைப்பதுடன் புதிய முயற்சிகளில் எளிதில் வெற்றியடைவீர்கள். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிப்பதுடன் பிள்ளைகளால் இருக்கும் கவலை மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். மேலும், தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

சர்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் வரும் 23-09-2020 முதல் 12-04-2022 வரை சஞ்சரிக்க இருப்பதும் உங்களது பலத்தை அதிகரிக்கும் அமைப்பு என்பதால் இக்காலங்களில் எதிர்பாராத அனுகூலங்கள் உண்டாகும். அதன் பின்பு வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை ஜென்ம ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க உள்ள காலத்தில் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் மனைவி மற்றும் உறவினர்களை அனுசரித்து செல்வதுடன் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், உணவு விஷயத்தில் கவனத்துடன் இருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. எதிர்பாராத பயணங்களால் சற்றே அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்களை கிடைப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சி தரகூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மனநிறைவை உண்டாக்கும். இவ்வாறாக உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை எப்படி இருக்கும்

வீடு மனை வாங்க கூடிய யோகம் ஏற்படுவதன் மூலம் பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையப்பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். மேலும் முன்னெடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எனினும் பிள்ளைகள் வழியில் சிறிது மன கவலை உண்டாகும் ஏற்படும் அதேவேளை உற்றார் உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் உதவ வேண்டிய நேரத்தில் அவர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல் எப்படி இருக்கும்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதுடன், கமிஷன் ஏஜென்ஸி மற்றும் கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும்;. மேலும், உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமைவதுடன் கடன்களினளவு குறையும் அதேவேளை நீங்கள் பெரிய தொகைகளை எளிதாக ஈடுபடுத்தி லாபம் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்

பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் நிறைவேறுவதுடன், தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். மேலும், நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி கிடைப்பதுடன், மறைமுக எதிர்ப்புகளும் போட்டி பொறாமைகளும் விலகி, கூட்டாளி மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

உத்தியோகம் எப்படி இருக்கும்

உத்தியோகஸ்தர்கள் முன்னெடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுகின்ற அதேவேளை வெளியூர் அல்லது வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். மேலும், தடைப்பட்ட உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்க பெற்று மன மகிழ்ச்சி ஏற்படுவதுடன் புதிய வேலை தேடுபவர்களும் சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். குறிப்பாக உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும்.

அரசியல் நிலை எப்படி இருக்கும்

அரசியல்வாதிகளின் முன்னெடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று மக்களின் ஆதரவைப் பெறுவதுடன் உங்கள் பேச்சிற்கு மக்களிடையே செல்வாக்கு அதிகளவில் காணப்பட்டு பெயர் புகழ் பெருமை என்பன உயரும். மேலும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் நன்மையளிப்பதுடன் மறைமுக வருமானங்கள் அதிகரித்து உடனிருப்பவர்களின் மூலமும் சாதக பலன் உண்டாகும்.

விவசாயிகள் நிலை எப்படி இருக்கும்

போதிய நீர்வரத்து மற்றும் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலை கிடைத்தல் என்பனவற்றுடன் பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். இதனால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைவதுடன் குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். எனினும், பூர்வீக சொத்துக்களால் சிறிது பிரச்சினை ஏற்படலாம் என்பதனால் பங்காளிகளுடனான பேச்சில் சற்று பொறுமை கொள்வதன் மூலமே எதனையும் சமாளிக்க முடியும்.

கலைஞர்கள் நிலை எப்படி இருக்கும்

இசை, பாடல் நடன துறைகளில் உள்ளவர்கள் சிறப்பான வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதுடன், பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மற்றும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். மேலும், பயணங்களால் பல்வேறுபட்ட நன்மைகள் ஏற்படுவதுடன் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. மேலும் தடைப்பட்ட பணவரவுகள் கிடைககப் பெற்று பொருளாதார நிலை முன்னேற்றமடைவதுடன் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும்.

பெண்கள் நிலை எப்படி இருக்கும்

எதிர்பாராத திடீர் தனவரவுகளினால் தடைப்பட்ட சுபகாரியங்கள் நிறைவேறுவதுடன் புத்திர பாக்கியம் சிறப்பாக அமையப் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் வீடு மனை வாங்கும் யோகம் ஏற்பட்டு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மேலும் வயிறு பாதிப்பு ஏற்படலாம் என்பதனால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. வேலை செய்யும் பெண்களுக்கு உயர்வுகள் கிடைக்கும்.

மாணவ மாணவியர் நிலை எப்படி இருக்கும்

முன்னெடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுகின்ற வாய்புகள் உள்ளதனால் கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும்; வெற்றி பெற்று நல்ல முன்னேற்றமும் உயர்வும் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு கிடைப்பதுடன் நல்ல நண்பர்களின் சேர்க்கை உங்களுக்கு நற்பலனை தரும். மேலும் அரசு வழியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் யாவும் தடையின்றிக் கிடைக்கப்பெறும்.

சிம்மம் துலாம்

ஏனைய அனைத்து ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleSani Peyarchi Palangal Dhanusu 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு 2020-2023 Sagittarius Astrology Dhanusu Rasi தனுசு ராசி in Tamil
Next articleSani Peyarchi Palangal Magaram 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் மகரம் 2020-2023 Capricorn Astrology Magara Rasi மகர ராசி