Sani Peyarchi Palangal Dhanusu 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு 2020-2023 Sagittarius Astrology Dhanusu Rasi தனுசு ராசி in Tamil

0

Sani Peyarchi Palangal Dhanusu 2020-2023

Sani Peyarchi Palangal Dhanusu 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு 2020-2023
Mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Mesha, Rishaba, Mithuna, Kadaga, Simha, Kanya, Thula, Viruchika, Dhanu, Makara, Kumbha, Meena.
Sani Peyarchi Palangal Dhanusu 2020-2023

Sani Peyarchi Palangal Dhanusu 2020-2023 மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

பெரியவர்களுக்கு கீழ்படிந்து நடக்கும் ஆற்றலும் ஒழுக்கநெறி தவறாத பண்பும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! குரு பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதனால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மச்சனி முடிவடைந்து பாதச்சனி தொடங்குகின்றது. இதன் மூலம் ஏழரைச்சனியில் முதல் 5 வருடங்கள் முடிகிறது. உடல் ஆரோக்கிய ரீதியாக சற்று மந்த நிலை மற்றும் சோர்வு காணப்பட்ட போதிலும், நீங்கள் எதிலும் துணிவுடன் செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைந்து கொள்வதுடன், கடந்த காலங்களில் காணப்பட்ட பெரிய பிரச்சினைகள் யாவும் படிப்படியாக மறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

தொழில், வியாபார ரீதியாக இருந்த தேக்க நிலை சற்று மறைந்து ஏற்றம் பெறுகின்ற நீங்கள் அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மேலும், சில போட்டிகளையும் மந்தமான சூழ்நிலைகள் உருவாகுகின்ற போதிலும் எதிர்நீச்சல் போட்டாவது நீங்கள் அடைய வேண்டிய லாபத்தை பெற்று விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கின்ற அதிகப்படியான அதேவேளை வேலைபளுவும் காணப்படும். அதாவது மற்றவர்கள் செய்ய வேண்டிய வேலைகளைக் கூட நீங்கள் செய்யும் சூழ்நிலை உருவாக கூடிய வாய்ப்புகள் உள்ளதனால், புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.

பொருளாதார நிலை ஒரளவுக்கு சாதகமாக காணப்பட்டு உங்களது சகல தேவைகளும் பூர்த்தியாகுகின்ற அதேவேளை முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. மேலும், குடும்பத்தில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதனால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது மற்றும் தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது என்பன நல்ல பலனைக் கொடுக்கும அதேவேளை, கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமமானது.

சனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் 20-11-2020 முதல் 20-11-2021 வரை சஞ்சாரம் செய்ய இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதனால் இக்காலங்களில் பொருளாதார நிலைமை மிகவும் சிறப்பாக இருப்பதுடன், குடும்பத்தில் மங்களகரமான சுபகாரிங்கள் கைகூடும். ஏழரைச்சனி நடக்கும் இக்காலத்தில் வரும் 23-09-2020 வரை ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதனால் கணவன்- மனைவி இடையே அனுசரித்து செல்வது நல்லது. சர்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 6-ல் 23-09-2020 முதல் 12-04-2022 முடியவும், கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் வரும் 12-04-2022 முதல் 30-10-2023 முடிய சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதனால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து உங்களுக்கு ஏற்கனவே உள்ள நெருக்கடிகள் குறைந்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும்;.

உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் மருத்துவச் செலவுகள் மற்றும் மன நிம்மதி குறைவு ஏற்படுகின்ற அதேவேளை புத்திர வழியில் சிறிது சுப செலவுகள் ஏற்படும். மேலும், உடல் ஆரோக்கியம் சற்று சாதகமாக காணப்படுகின்ற போதிலும் அதிகளான அலைச்சல் காரணமாக தூக்கமின்மை, உடல்நிலையில் சோர்வு, ஞாபகமறதி போன்றவை ஏற்படும். இவ்வாறாக தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்களை குறைக்க முடிவதுடன், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம்; மன உளைச்சலை தவிர்க்க முடியும்.

குடும்பம், பொருளாதார நிலை எப்படி இருக்கும்

உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் பேச்சில் கவனமாக இருப்பதுடன், கணவன்- மனைவி இருவரும் அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப காரிய முயற்சிகள் தடையுடன் நிறைவேறுகின்றதுடன் பணவரவுகள் சுமாராக இருப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதனால்; குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்து விட முடியும். மேலும், ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

கொடுக்கல் வாங்கல் எப்படி இருக்கும்

பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே காணப்படக் கூடிய நிலைமை உள்ளதனால் பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. எனினும் கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். குறிப்பாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடிவதுடன் உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் ஒரளவுக்கு சாதகமான நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள போதிலும் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளன.

தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் கடனுதவிகள் தாமதப்பட்டு சிறுசிறு சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் தக்க சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். மேலும், அரசு வழியில் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் அதேவேளை தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெற அவர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. இவ்வாறாக எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது நீங்கள் முன்னேறி விடுவீர்கள்.

உத்தியோகம் எப்படி இருக்கும்

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் பதவி உயர்வுக்காக அதிக நேரம் உழைக்க நேரிடுவதுடன், உழைப்பிற்கான பலனை அடைய இடையூறு உண்டாகும். எனினும் கடந்த கால பிரச்சினைகள் ஒரளவுக்கு குறைவடைகின்ற அதேவேளை சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர் செல்ல நேரிடும். இவ்வாறாக உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம்; எதையும் சமாளித்து முன்னுக்கு வர முடியும்.

அரசியல் நிலை எப்படி இருக்கும்

அரசியல்வாதிகளின் கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும் மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக காணப்படுவதனால் பெயர், புகழ், உயரும் என்றாலும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அதாவது கொடுத்த வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றி கொடுப்பதில் சில தடைகளை சந்திக்க நேரிடும். மேலும் பொருளாதாரம் உயரும்.

விவசாயிகள் நிலை எப்படி இருக்கும்

போதிய நீர்வரத்து இல்லாததனால் பயிர்களை பாதுகாக்க அதிகளவில் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுடன் பயிர் விளைச்சல் சுமாராக காணப்பட்டு போட்ட முதலீட்டினை எடுக்கவே நிறைய உழைப்பினை மேற்கொள்ள வேண்டியேற்படும். மேலும், அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதுடன் கடந்த கால பிரச்சனைகள் சற்று குறைவடைந்து முன்னேற்றம் அடைவீர்கள்.

கலைஞர்கள் நிலை எப்படி இருக்கும்

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் சுமாராக அமையும் என்றாலும் பட வசூல் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக அமையக் கூடிய சாத்தியங்கள் உள்ளதனால் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதுடன் வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையும். மேலும், சுகவாழ்வு மற்றும் சொகுசு வாழ்வில் சிறுசிறு இடையூறுகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதனால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

பெண்கள் நிலை எப்படி இருக்கும்

பெண்களுக்கு தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடுவதுடன் சிலருக்கு சிறப்பான புத்திரபாக்கியமும் வீடு மனை வாங்கும் முயற்சிகள் சில தடைகளுக்குப் பின்னர் நிறைவேறி பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிக்கும். மேலும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடத்தல், கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்படுதல் என்பன நன்மையளிக்கும். இன்னும், பணிபுரிவோருக்கு வேலைபளு சற்று அதிகரித்து காணப்படும்.

மாணவ மாணவியர் நிலை எப்படி இருக்கும்

எவ்வளவு தான் கஷ்டப்பட்டு படித்தாலும் மனதில் வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மனம் அலைபாய்ந்து கல்வியில் சற்று மந்தநிலை உண்டாகக் கூடிய காலம் என்பதனால் தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்த்து அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. மேலம் பெற்றோர் ஆசிரியர்களின் சொற்படி நடந்தால் அனுகூலமான பலன்களைப் பெற முடியும்.

விருச்சிகம் மகரம்

ஏனைய அனைத்து ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan 31-01-2020 இன்றைய ராசி பலன் 31.01.2020 இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை Today Calendar 31/01/2020 Friday Indraya Rasipalan
Next articleSani Peyarchi Palangal Kanni 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் கன்னி 2020-2023 Virgo Astrology Kanya Rasi கன்னி ராசி