Sani Peyarchi Palangal Simmam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் சிம்மம் 2020-2023 Leo Astrology Simha Rasi சிம்ம ராசி

0

Sani Peyarchi Palangal Simmam 2020-2023

Sani Peyarchi Palangal Kadagam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் சிம்மம் 2020-2023
Mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Mesha, Rishaba, Mithuna, Kadaga, Simha, Kanya, Thula, Viruchika, Dhanu, Makara, Kumbha, Meena.
Sani Peyarchi Palangal Simmam 2020-2023

Sani Peyarchi Palangal Simmam 2020-2023 மகம், பூரம், உத்திரம்1-ஆம் பாதம்.

உயர்ந்த எண்ணங்களும் பிறருக்கு அடி பணியாத குணமும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 5-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளதனால்; உங்கள் பலமும், வலிமையும் அதிகரிக்கும். அதாவது, கடந்த கால மனக்கவலைகள் எல்லாம் விலகி எதிலும் நிம்மதி ஏற்படுவதுடன், கணவன் மனைவி இடையே ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகரித்து உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடிவதன் மூலம் நீண்ட நாட்களாக நீங்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிறைவேறும்.

மேலும், கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடிவதுடன், தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி லாபகரமான பலன்கள் உண்டாகுவதுடன், புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறி மகிழ்ச்சி உண்டாகும். இதனைவிட, அசையும், அசையா சொத்துகளில் இருந்த வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வருவதுடன், வீடு வாகனங்கள் வாங்க கூடிய யோகமும், வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் பெருகுதல், உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினைகள் குறைவடைதல் மற்றும் நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகன்று குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும்.

மேலும், கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியும் பெருகுதல், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் தேடி வருதல், உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளும் சிறப்பாக அமைதல் என்பனவற்றுடன், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள்.

சனி சாதகமாக 6-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் வரும் 20-11-2020 வரையும், 7-ஆம் வீட்டில் 20-11-2021 முதல் 13-04-2022 வரையும் சஞ்சாரம் செய்கின்ற காலத்தில் பல வழிகளில் பணம் கிடைக்கப்பெறுதல், திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருதல், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியம் அமைதல், குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருப்பதுடன், பூர்வீக சொத்து ரீதியாக இருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வருதல் மற்றும் அதிநவீன பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் அமைதல் என மேலும் பல அனுகூலமான பலன்கள் ஏற்பட்டு உங்களது பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். சர்ப கிரகமான ராகு லாப ஸ்தானத்தில் 23-09-2020 வரை சஞ்சரிப்பதும், கேது வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் மிக சிறப்பான அமைப்பு என்பதால் சகல வகையிலும் முன்னேற்ற பலன்களை நிங்கள் அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதனால் வீண் செலவுகள் குறைவடைவதுடன், மகிழ்ச்சி தர கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மனநிறைவு ஏற்படும். மேலும், நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதுடன், உடல் நிலை அற்புதமாக அமையப் பெற்று உங்கள் பலமும் வலிமையும் அதிகரிக்கும். உங்களுக்கு பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைப்பதுடன், நீஞ்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பல்வேறு வகையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை எப்படி இருக்கும்

மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிப்பது மட்டுமன்றி கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் சிறப்பாக அமையப்பெற்று குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மேலும், தாராளமான பணவரவுகளால் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுவதுடன், வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படுவதுடன், கடன்கள் குறைவடைந்து சேமிக்க கூடிய சூழ்நிலை ஏற்படுவதுடன் உறவினர்களிடம் சுமூகமான நிலைமையும் ஏற்படும்.

கொடுக்கல் வாங்கல் எப்படி இருக்கும்

கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகி கடன்கள் குறைவடைவதன் மூலமும் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடிதல் மற்றும் உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக கிடைத்தல் மூலமும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மேலும், கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடிவதுடன், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கப்பெற்று வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும்.

தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்

கடந்த கால போட்டிகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வருவதன் மூலம் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் மற்றும் பழைய தொழிலை விரிவுபடுத்தும் நோக்கங்கள் யாவும் வெற்றியை கொடுக்கக் கூடியதாக அமைவதுடன், வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் சிறப்பான லாபம் கிடைக்கும். மேலும், வேலையாட்கள் சாதகமாக இருப்பதனால் பல்வேறு வகையில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

உத்தியோகம் எப்படி இருக்கும்

எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், பாராட்டுதல்களும் கிடைக்கும் அதேவேளை கூடுதல் பொறுப்புகளும் வேலைபளுவும் சற்று அதிகரித்தாலும் எதையும் எளிதில் செய்து முடிக்க கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகுவதுடன், சிலருக்கு இடமாற்றங்களையும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு நிம்மதியாக வாழும் வாய்ப்பு கிடைக்கும், மேலும் உத்தியோகஸ்தர்கள் எதிலும் அனுகூலமானப் பலன்களை அடைவார்கள்.

அரசியல் நிலை எப்படி இருக்கும்

பெரிய மனிதர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் கிடைப்பதுடன் உங்களின் பேச்சுகளுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். மேலும், நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டுவதுடன், பொருளாதார நிலையில் உயர்வை சந்திப்பீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். இவ்வாறாக உங்களின் செல்வம், செல்வாக்கு உயர கூடிய காலமாகும்.

விவசாயிகள் நிலை எப்படி இருக்கும்

புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்பு அமைவதுடன், பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேருதல் மற்றும் கடந்த கால வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிதல் என்பனவும் இடம்பெறும். மேலும், பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக காணப்படுவதுடன் சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலை தாராளமாகக் கிடைக்கும். இதனை விட நவீனகரமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலனை பெற முடியும்.

கலைஞர்கள் நிலை எப்படி இருக்கும்

தொழிலில் உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் போட்டி, பொறாமைகள் யாவும் படிப்படியாக குறைவடைவதுடன், சம்பளத் தொகைகளும் விரிவடைவதால் பொருளாதார நிலையும் உயருவதுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மேலும், வெளியூர், வெளிநாடுகள் செல்ல கூடிய வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், ரசிகர்களின் ஆதரவும் பெருகும்.

பெண்கள் நிலை எப்படி இருக்கும்

திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருவதுடன், புத்திரர்களால் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதுடன், குடும்ப வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மேலும், பொருளாதார நிலை உயர்வாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுவதுடன், பொன் பொருள் சேர்ந்து வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். குறிப்பாக கணவன்- மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவியர் நிலை எப்படி இருக்கும்

பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நல்ல நண்பர்களின் நட்பு நற்பெயரை பெற்று தருவதுடன், நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபகசக்தி போன்றவற்றால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்க்க முடிவதுடன் விளையாட்டு துறைகளில் வெற்றிமேல் வெற்றிகள் குவியும். இவ்வாறாக, கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.

கடகம் கன்னி

ஏனைய அனைத்து ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Oozh Adhikaram-38 திருக்குறள் ஊழ் அதிகாரம்-38 ஊழியல் அறத்துப்பால் Oozhiyal Arathupal in Tamil
Next articleSani Peyarchi Palangal Thulaam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் துலாம் 2020-2023 Libra Astrology Thula Rasi துலாம் ராசி