Sani Peyarchi Palangal Kadagam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் கடகம் 2020-2023 Cancer Astrology Kadaga Rasi கடக ராசி

0

Sani Peyarchi Palangal Kadagam 2020-2023

Sani Peyarchi Palangal Kadagam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் கடகம் 2020-2023
Mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Mesha, Rishaba, Mithuna, Kadaga, Simha, Kanya, Thula, Viruchika, Dhanu, Makara, Kumbha, Meena.

Sani Peyarchi Palangal Kadagam 2020-2023 புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அமைதியான சுபாவத்துடன் சகிப்புத்தன்மை நிறைந்த சுறுசுறுப்பானவர்களான‌ கடக ராசி அன்பர்களே, சந்திரனுடைய ஆதிக்கமான‌ ராசியில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் அதிகமான‌ நாட்கள் சஞ்சரிக்கும் கிரகமான சனி பகவான் தன்னுடைய‌ சொந்த வீடான மகர ராசியில் சமசப்தம ஸ்தாமான 7-ஆம் வீட்டில் திருக்கணித சித்தாந்தபடி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். சனி 7-ல் சஞ்சாரம் செய்வது கண்டச்சனி என்பதால் ஏற்ற தாழ்வான பலன்கள் உண்டாகும். களத்திர ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகுவதுடன், பண வரவுகள் சுமாராக இருப்பதுடன், உடல் நிலையில் கூடிய கவனம் செலுத்துவது நல்லது. ஜென்ம ராசி, 4 மற்றும் 9 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்வதனால் உங்களிடம் சகலதும் இருந்தும் அதனை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பல்வேறுபட்ட பாதிப்புகள் ஏற்படும்.

மேலும், அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படுவதுடன், கொடுக்கல் வாங்கலில் மற்றவர்களுக்கு முன்ஜாமின், வாக்குறுதி கொடுப்பதை தவிர்த்தல் அவசியம். மேலும், உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும், நல்ல வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைக்கும் எனினும் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதனால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. இதனைவிட, உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியதனால், தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் சக நண்பர்களை அனுசரித்து செல்வதுடன், முன்னெடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி ஏற்படும். இவ்வாறாக, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் முன் கோபத்தை குறைத்துக் கொள்வதும் உங்களுக்கு நற்பலனை தரும்.

சனி 7-ல் சஞ்சரிக்கும் இக்காலகட்டத்தில் குருபகவான் 20-11-2020 முதல் 20-11-2021 வரை 7-ஆம் வீட்டிலும், 13-04-2022 முதல் 22-04-2023 வரை 9-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் காலங்கள் பொருளாதார நிலை சிறப்பாக அமைவதால் அசையும் அசையா சொத்துகள் வாங்க முடிவதுடன், உற்றார் உறவினர்களுடனான சுமுகமான நிலைமை மற்றும் முன்னெடுக்கும் முயற்சிகளில் வெற்றியடைதல், கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபம் கிடைத்தல், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடிதல், தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி மற்றும் வெளியூர், வெளிநாடுகள் மூலமான நன்மைகள் என சகலவிதத்திலும் ஏற்றத்தை உண்டாக்கும் காலமாக உங்களுக்கு இருக்கும். குறிப்பாக குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவதுடன், திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். சர்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6-ல் வரும் 01-09-2020 வரையும், ராகு 11-ல் வரும் 23-09-2020 முதல் 12-04-2022 வரையும் சஞ்சரிக்க இருப்பதும் உங்களது பலத்தை அதிகரிப்பதனால்இக்காலங்களில் எதிர்பாராத நன்மைகள் பல உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

உடல் நிலையில் சோர்வு, மந்தமான நிலை மற்றும் மனைவி, மக்களுக்கும் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படுவதுடன், தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் உண்டாகும் பிரச்சினைகள் மன குழப்பத்தை ஏற்படுத்துகின்ற போதிலும் பெரிய கெடுதிகளினை ஏற்படுத்தாது. உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் செயல்படுவது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை எப்படி இருக்கும்

திருமண சுப காரியங்கள் சிறு தடைக்கு பின்பு கைகூடுவதுடன், கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைக்கு பங்கம் ஏதும் விளையாது. மேலும், பொருளாதாரநிலை திருப்தியளிப்பதாக இருப்பதுடன் அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு அதிகரித்து பொன், பொருள் சேரும். எது எவ்வாறாயினும், உற்றார்- உறவினர்களிடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது.

கொடுக்கல் வாங்கல் எப்படி இருக்கும்

கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. அதாவது, கமிஷன், ஏஜென்ஸி மற்றும் காண்டிராக்ட் போன்றவற்றில் கவனத்துடன் செயல்பட்டால் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். மேலும், பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது மற்றும் முன்ஜாமின் கொடுப்பதில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது மிகமிக நல்லது.

தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்

தொழில், வியாபாரத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நல்ல முறையில் உயர்வினை சந்திப்பீர்கள்.; வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்ல வேண்டியிருப்பதுடன், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஓரளவுக்கு முனனேற்றமானப் பலன்கள் ஏற்படும். எதுஎவ்வாறாயினும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது மிகமிக கவனம் தேவை.

உத்தியோகம் எப்படி இருக்கும்

உத்தியோகஸ்தர்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், அதிகாரிகளின் ஆதரவுகளும் மனமகிழ்ச்சியை உண்டாக்கும். இவ்வாறாக எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் வேலைபளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். இங்கு சக நண்பர்களை அனுசரித்து செல்வது மூலம் மட்டுமே எதனையும் சமாளிக்க முடியும். மேலும், வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு சிறு தடைகளுக்கு பினனர்; சாதகமாக அமையும்.

அரசியல் நிலை எப்படி இருக்கும்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் மக்களின் ஆதரவு சிறப்பாகவே அமைவதுடன், சிறுசிறு சோதனைகளை சந்தித்தாலும் பதவிக்கு பங்கம் ஏதும் ஏற்படாது. மேடை பேச்சுகளில் சற்று கவனம் செலுத்துதல் மற்றும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது என்பன அவசியமாக உள்ளன. மேலும், கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உருவாகி உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.

விவசாயிகள் நிலை எப்படி இருக்கும்

சுமாரான பயிர் விளைச்சல் மற்றும் பணவரவுகள் அதாவது பட்ட பாட்டிற்கான பலனைப் பெற்றுக் கொள்வதற்காக சற்று எதிர்நீச்சல் போட வேண்டி வரும். எனினும், கால்நடைகளை வாங்குவதுடன். புதிய பூமி மனை போன்றவற்றால் ஒரளவுக்கு நன்மைகள் ஏற்படும்;. எதுஎவ்வாறாயினும் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைஞர்கள் நிலை எப்படி இருக்கும்

தொழில் ரீதியாக சில போட்டிகளை சந்தித்தாலும் நேரிட்ட போதிலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடைபடாது கிடைக்கும் என்பதனை மனதிற் கொண்டு எதிர்பார்க்கும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், வெளிநாடு பயணங்களால் சற்றே அலைச்சல்கள் ஏற்பட்ட போதிலும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். எதுஎவ்வாறாயினும் உங்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகளும் இருக்கும்.

பெண்கள் நிலை எப்படி இருக்கும்

நிங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். எனினும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். மணமாகாத மங்கையருக்கு சில தடைகளுக்குப்பின் சுபகாரியம் நடந்தேறும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். மேலும், பொருளாதார நிலை திருப்தியளிப்பதுடன், பொன், பொருள் ஆடை ஆபரணம் சேர்த்து நவீன பொருட் சேர்க்கைகள் உண்டாகும்.

மாணவ மாணவியர் நிலை எப்படி இருக்கும்

அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதமடைவதுடன், எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருப்பதனால் முடிந்தவரை தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் முழு ஈடுபாடுட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். எனினும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு ஒரளவுக்கு சிறப்பாகவே அமையும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை

சனிபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மற்றும் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது என்பதுடன் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்தல் அவசியம். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்ட போதிலும்; கேது 6-ல் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்குதல் மற்றும் புத்திர வழியில் பூரிப்பு உண்டாதல் போன்ற பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயற்படுவதுடன், கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் ஏற்படும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். இவ்வாறாக துர்க்கை வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மிதுனம் சிம்மம்

ஏனைய அனைத்து ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவாழ்க்கை துணை
Next articleThirukkural Kannottam Adhikaram-58 திருக்குறள் கண்ணோட்டம் அதிகாரம்-58 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil