Sani Peyarchi Palangal Mithunam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் மிதுனம் 2020-2023 Gemini Astrology Mithuna Rasi மிதுன ராசி

0

Sani Peyarchi Palangal Mithunam 2020-2023

Sani Peyarchi Palangal Mithunam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் மிதுனம் 2020-2023
Mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Mesha, Rishaba, Mithuna, Kadaga, Simha, Kanya, Thula, Viruchika, Dhanu, Makara, Kumbha, Meena.
Sani Peyarchi Palangal Mithunam 2020-2023

Sani Peyarchi Palangal Mithunam 2020-2023: மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் எந்தவொரு கடினமான காரியங்களையும் துச்சமென எண்ணி எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றலும் வல்லமையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமும் உங்கள் ராசிக்கு 8, 9-க்கும் அதிபதியான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 தொடக்கம் 17-01-2023 வரை ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சாரம் செய்ய‌ உள்ளதனால் உங்களுக்கு அஷ்டமச் சனி தொடங்கின்றது. இதனால் நீங்கள் முன்னெடுக்கும் எந்தவொரு முயற்சிகளிலும் பல்வேறு தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டு எந்த ஒரு காரியத்தையும் எதிர் நீச்சல் போட்டே முடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதுடன், தேக ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், உடல் நிலையில் சோர்வு, மந்த நிலை ஏற்படுவதுடன், குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

மேலும், கணவன்- மனைவி மற்றும் உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதனால்; முடிந்த வரை பேச்சை குறைத்து, விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். இன்னும், பண விஷயங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதனால் கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாத நிலைமை மற்றும் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படுதல் போன்றனவற்றினால் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனைவிட, பெரிய முதலீடுகள் கொண்ட செயல்களை செய்யும் போது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்பட்டு அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். இவ்வாறாக, அஷ்டமச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதலை செய்ய மாட்டார்.

சனியானது அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள இக்காலகட்டத்தில் ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் வரும் 20-11-2020 வரையும், 9-ஆம் வீட்டில் 20-11-2021 தொடக்கம் 13-04-2022 வரையும் சஞ்சாரம் செய்கின்ற காலத்தில் நெருங்கியவர்கள் ஆதரவாக செயல்படுவதுடன், எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு குடும்பத்தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி செய்யப்படுவதுடன், திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களும் கிடைக்கும். மேலும், இக்காலத்தில் கொடுக்கல்- வாங்கலில் ஓரளவுக்கு லாபம் அமையும் எனினும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில், சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.

வரும் 23-09-2020 வரை ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வதால் சங்கடங்களை தவிர்க்கலாம். சர்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6-ல் 23-09-2020 முதல் 12-04-2022 முடியவும், 12-04-2022 முதல் 30-10-2023 முடிய ராகு 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எந்த வித நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளினால் மன நிம்மதியற்ற நிலை ஏற்படுவதுடன், முன்னெடுக்கும் முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படுவதுடன், தேவையற்ற பயணங்களால் உடல்நிலை சோர்வடைந்து உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டி ஏற்படும். மேலும், அவ்வப்போது ஏற்படும் இத்தகைய பாதிப்புகள் மற்றும் மனைவி, பிள்ளைகளால் மருத்துவ மருத்துவ செலவுகள் ஏற்படும்.

குடும்பம், பொருளாதார நிலை எப்படி இருக்கும்

உற்றார்- உறவினர்களிடையே உண்டாக கூடிய கருத்து வேறுபாடுகளினால் மங்களகரமான சுபகாரியங்கள் தாமதமடைவதுடன், கணவன்- மனைவியிடையே ஒற்றமை குறையும். மேலும், பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டு குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவே கஷ்டப்பட வேண்டிய நிலைமை ஏற்படும். என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து அதிகரிக்கும் கடன்சுமையிலிருந்து தப்பிப்பது நல்லது. குறிப்பாக புத்திரர்கள் உங்கள் பேச்சை மதிககாது நடப்பதனால்; வீண் மன சஞ்சலங்கள் ஏற்படும்.

கொடுக்கல் வாங்கல் எப்படி இருக்கும்

உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் இருப்பதுடன், பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில், உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழபறி நிலை காணப்படும். இதனால், கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறையில் உள்ளவர்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்

தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகள் நிலவுவதனால் லாபம் குறைந்து அபிவிருத்தி தடைப்பட்டு, மந்தமான நிலை நிலவும் அதேவேளை எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படக் கூடிய சூழ்நிலை காணப்படுவதனால் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். மேலுமு;, புதிய முயற்சிகளில் லாபத்தினைப் பெறுவதற்கு நீங்கள் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். இவ்வாறாக பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனமுடன் நடந்து செயற்படும் போது அதில் ஓரளவுக்கு நற்பலனை பெற முடியும்.

உத்தியோகம் எப்படி இருக்கும்

பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க கூடும் என்பதனாலும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்காததால் வேலைபளு அதிகரிக்க கூடும் என்பதனாலும் பணியில் கவனக்குறைவுடன் செயல்பட்டு அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடக் கூடிய வாய்ப்புகள் உள்ளதனாலும், எதிர்பாராத இட மாற்றங்களினால் வீண் அலைச்சல் ஏற்பட வேண்டியதனாலும் எதிலும் கவனம் அவசியம். இவ்வாறாக, உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும்.

அரசியல் நிலை எப்படி இருக்கும்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் அவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுவதுடன், சுமாரான பண வரவு மற்றும் உடனிருப்பவர்களே துரோகம் செய்ய எண்ணுதல் போன்றனவற்றின் காரணமாக மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது நல்லது. எனினும், எதிர்பார்க்கும் பெரிய பதவிகள் கிடைக்காவிட்டாலும் உங்கள் பெயர் மற்றும் புகழுக்கு பங்கம் எதுவும் ஏற்படாது.

விவசாயிகள் நிலை எப்படி இருக்கும்

சுமாரான பயிர் விளைச்சல், அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படுதல், பூமி, மனை போன்றவற்றால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படுதல் போன்றவற்றினால் பொருளாதார நிலை சுமாராக இருப்பதுடன், பங்காளிகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு மன அமைதி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதனாலும் உடனிருப்பவர்களிடம் பேசும் போது மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்வது மிகவும் அவசியம்.

கலைஞர்கள் நிலை எப்படி இருக்கும்

ஆடம்பர செலவுகளால் பல கடன்கள் உருவாகின்ற அதேவேளை பண விஷயத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருப்பதோடு, தொழிலில் நிறைய போட்டிகள் உண்டாவதால் வர வேண்டிய வாய்ப்புகள் குறையும். இதனால், கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்வதுடன், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது அதிகளவில் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்கள் நிலை எப்படி இருக்கும்

பொருளாதார நிலையிலான பற்றாகுறைகள், உற்றார் உறவினர்களால் ஏற்படக் கூடிய வீண் செலவுகள் மற்றும் பிரச்சினைகள், எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படுதனால் கடன்கள் வாங்க வேண்டி இஏற்படுதல் என்பனவற்றினால் கணவன்— மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய நிலை என்பன ஏற்படும். எனவே, முடிந்தவரை அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

மாணவ மாணவியர் நிலை எப்படி இருக்கும்

மாணவ- மாணவியர் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற கல்வியில் கூடிய கவனம் செலுத்துவதுடன், கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். இந்நிலையில், கல்வியில் மந்தநிலை ஏற்படுதல், உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டு அடிக்கடி லீவு எடுக்க வேண்டி இருக்கும். எனவே, தேவையற்ற பொழுது போக்குகளையும் பழக்கவழக்கங்களையும் தவிர்ப்பது மாணவ- மாணவியரின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை

சனிபகவான் உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பது எதிர்மறையான பலனை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளதனால், வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமுடன் இருப்பதுடன், உடல் நிலையில் சற்று கூடியளவான கவனம் செலுத்துவது நல்லது. தன காரகன் குரு ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவதுடன், வீடு மனை, வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமைந்து சிறப்பாக பொருளாதார நிலைமையால் பழைய கடன்கள் படிப்படியாக குறைவடைந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் சிறு சிறு நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய போதிலும் எதிர்பார்த்த லாபத்தை நீங்கள் அடைந்து விடுவீர்கள். மேலும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நன்மையளிக்கும்.

ரிஷபம் கடகம்

ஏனைய அனைத்து ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleSani Peyarchi Palangal Rishabam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் 2020-2023 Taurus Astrology Rishaba Rasi ரிஷப ராசி
Next articleToday Rasi Palan 29-01-2020 இன்றைய ராசி பலன் 29.01.2020 இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை Today Calendar 29/01/2020 Wednesday Indraya Rasipalan