Sani Peyarchi Palangal Rishabam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் 2020-2023 Taurus Astrology Rishaba Rasi ரிஷப ராசி

0

Sani Peyarchi Palangal Rishabam 2020-2023

Sani Peyarchi Palangal Rishabam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் 2020-2023
Mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Mesha, Rishaba, Mithuna, Kadaga, Simha, Kanya, Thula, Viruchika, Dhanu, Makara, Kumbha, Meena.
Sani Peyarchi Palangal Rishabam 2020-2023

Sani Peyarchi Palangal Rishabam 2020-2023: கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள். தங்களின் இனிமையான சுபாவத்தால் அனைவரையும் கவரக்கூடிய சுபாவம் கொண்டவர்களான‌ ரிஷப ராசி நேயர்களே, சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இது வரை சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி காலம் நடைபெற்றதால் பல்வேறுபட்ட‌ இன்னல்களை சந்தித்து வந்தீர்கள். உங்களுடைய‌ ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சனிபகவான் தர்மகருமாதிபதி என்பதால் யோககாரகன் ஆகும்.

திருக்கணிதத்தின்படி வரும் 24-01-2020 தொடக்கம் 17-01-2023 வரை பாக்கிய ஸ்தானத்தில் மகரராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கப் பெற்று செல்வம் மற்றும் செல்வாக்கு அதிகரிப்பதுடன், பழைய கடன்கள் படிப்படியாக குறைவடைந்து, சகலவிதமான குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகுவதுடன், நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமும், புது வீடு கட்டி குடி போகும் யோகமும் கிட்டும்.

மேலும், உங்களுக்கு ,ருந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைவடைந்து ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவதுடன், உடல்நிலையில் தெம்பும், உற்சாகமும் உண்டாகி முன்னெடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். இன்னும், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த கால பின்னடைவுகள் நீங்கி லாபங்கள் அதிகரிப்பதுடன், புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாத்தியமாவதுடன், இதுவரை காலமும் உத்தியோகத்தில் காணப்பட்டு வந்த பிரச்சினைகள் நீஞ்கி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் அதேவேளை கடந்த கால வேலைபளு குறைவடைந்து பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். இவ்வாறாக, கடந்த கால மருத்துவ செலவுகள் குறைவடைவதுடன், கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலைமை தோன்றுவதுடன், வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பாராத வகையில் உங்களது பொருளாதார நிலைமை மேன்மையடையும்.

சனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள இக்காலகட்டத்தில் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் 20-11-2020 முதல் 20-11-2021 வரையும், 11-ஆம் வீட்டில் 13-04-2022 முதல் 22-04-2023 வரையும் சஞ்சரிக்க உள்ளதனால் இக்காலங்களில் நல்ல வரன்கள் தேடி வருவதன் மூலம், திருமணம் போன்ற சுப காரியங்கள் எளிதில் கைகூடி, குடும்பத்தில் மகிழ்ச்சி தரகூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதுடன், சிறப்பான புத்திரபாக்கியம் உண்டாகி சிறப்பான பொருளாதார நிலையுடனான உங்கள் பலமும் வலிமையும் அதிகரிக்கும்.

தற்போது 2, 8-ல் சஞ்ரிக்கும் ராகு, கேது வரும் 23-09-2020 முதல் 12-04-2022 முடிய 1, 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் இது கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக ,ருக்க வேண்டிய காலமாகும். அதாவது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதல் மற்றும் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகளைக் குறைக்கலாம். மேலும், உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் ,ருப்பதன் மூலம் ஆரோக்கிய ரீதியாக ஏற்படும் சிறு சிறு பாதிப்புகளை இலகுவாக கையாள முடியும்.

உடல்ஆரோக்கியம் எப்படி இருக்கும்

அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடுகின்ற போதிலும், கடந்த கால மருத்துவ செலவுகள் யாவும் படிப்படியாக குறைவடைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செல்படும் வகையில் உடல்நிலை சிறப்பாக ,ருக்கும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் ,ருப்பதன் மூலம் அன்றாட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடிவதுடன், மனைவி பிள்ளைகள் மற்றும் நெருங்கியவர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை எப்படி இருக்கும்

பிரிந்த உறவினர்களும் தற்போது நட்பு பாராட்டு நிலை ஏற்படுவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சி தர கூடிய ,னிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சேமிப்புகள் அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நிலைமை மேம்பட்டு கடந்த கால கடன்கள் குறையும்;. மேலும், நவீனகரமான பொருட் சேர்க்கை, வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்க முடிவதுடன், நீண்ட காலமாக தடைப்பட்ட பல சுபகாரியங்கள் கை கூடும்.

கொடுக்கல் வாங்கல் எப்படி இருக்கும்

கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் கிடைப்பதுடன், கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் அற்புதமான லாபம் கிடைக்கும். மேலும், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்பு மற்றும் வெளியூர், வெளிநாடு தொடர்புகளால் அனுகூலம் அதிகரிக்கும். இவ்வாறாக சேமிப்பு அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்

தொழில் வியாபாரத்தில் ,துநாள் வரை ,ருந்து வந்த தேக்க நிலைகளும், போட்டி பொறாமைகளும், மறைந்து தொழிலில் நல்ல வளர்ச்சி லாபங்கள் அடைந்து சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைப்பதுடன், உடனிருக்கும் வேலையாட்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

உத்தியோகம் எப்படி இருக்கும்

மேலதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் உங்களின் வேலை பளுவை குறைத்துக் கொள்ள உதவுவதுடன், உத்தியோக நிலையில் ,துநாள் வரை தடைப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வுகள் யாவும் இனி எளிதில் கிடைக்கும். மேலும், வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அதன் மூலமான சிறப்பான பல நன்மைகளும் கிடைக்கும்.

அரசியல் நிலை எப்படி இருக்கும்

மக்களின் ஆதரவுகள் பெருகி, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று உங்கள் மிது இருந்த அவப்பெயர்கள் உங்களை விட்டு அகலுவதன் ஊடாக இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகி பதவிகளில் மேன்மை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறாக உங்கள் வாழ்வில் பல்வேறுபட்ட முன்னேற்றங்களை ஏற்படுத்த கூடிய இனிய காலமாக இது இருக்கும்.

விவசாயிகள் நிலை எப்படி இருக்கும்

சிறப்பான விளைச்சல் மற்றும் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்தல் மூலமாக போட்ட முதலீட்டினை இலகுவாக எடுத்து விட முடிவதுடன், புதிய பூமி மற்றும் மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாக அமைவதுடன், பங்காளிகள் வழியில் இருந்து வந்த கருத்து வேறுப்பாடுகள் குறையும். மேலும், குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

கலைஞர்கள் நிலை எப்படி இருக்கும்

கலை, இசை, நாட்டியம், சங்கீத துறைகளில் உள்ளவர்கள் ஏற்றம் பெறுகின்ற காலமாக இருக்கும். அதாவது, கடந்த கால நெருக்கடிகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைத்து புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதுடன், எதிர்பார்க்கும் கதாபாத்திரங்களும் கிடைக்க பெற்று பெயர், புகழ் உயரும். மேலும், வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்கள் நிலை எப்படி இருக்கும்

பெண்கள் உற்றார் உறவினர்களிடையே விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவ முடிவதுடன், பணிபுரியும் பெண்களுக்கு வேலையில் திருப்தியும் மன நிறைவும் ஏற்படும். மேலும், மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுதல், பொன் பொருள், ஆடை, ஆபரணங்கள் வோங்குதல் மற்றும் புது வீடு கட்டி குடிபுகுதல் என பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மாணவ மாணவியர் நிலை எப்படி இருக்கும்

மாணவர்கள் மேற்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்ல கூடிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், பெற்றோர், ஆசிரியர்களின் சிறப்பான ஆதரவின் மூலம் மந்த நிலை விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடிவதுடன் விளையாட்டுத் துறைகளில் ஈடுபட்டு வெற்றிகளைப் ஈட்டி நல்ல பெயரினைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், நல்ல நண்பர்களின் சேர்க்கை உங்களுக்கு மன மகிழ்ச்சியை தரும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 தொடக்கம் 10-05-2020 வரை

சனிபகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஏற்ற ,றக்கமாக காணப்பட்ட போதிலும்; கடந்த கால கடன்கள் படிப்படியாக குறைவடைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியடைவதுடன், எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும்; ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். மேலும், தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் இலாபம் கிடைப்பதுடன், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிப்பதோடு உத்தியோகஸ்தர்கள் உயர்வான பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

எனினும் இங்கு பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று அவதானமாக இருப்பது நல்லது. குரு 8-ல் சஞ்சரிப்பதனால் கொடுக்கல்- வாங்கலில் அவதானமாக செயற்படுவதன் மூலம் மட்டுமே லாபத்தை அடைய கூடிய சாத்தியங்கள் உண்டு. மேலும், சர்ப்பகிரகமான ராகு 2-லும் கேது 8-லும் சஞ்சரிப்பதனால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்தல் மற்றும் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பதும் நன்மை யளிக்கின்ற அதேவேளை உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு விஷத்திலும் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும்.

மேஷம் மிதுனம்

ஏனைய அனைத்து ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Piranil Vizhayamai Adhikaram-15 திருக்குறள் பிறனில் விழையாமை அதிகாரம்-15 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil
Next articleSani Peyarchi Palangal Mithunam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் மிதுனம் 2020-2023 Gemini Astrology Mithuna Rasi மிதுன ராசி