Sani Peyarchi Palangal Mesham 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் மேஷம் 2020-2023 Aries Astrology Mesha Rasi மேஷ ராசி

0

Sani Peyarchi Palangal Mesham 2020-2023

Sani Peyarchi Palangal Mesham 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் மேஷம் 2020-2023 Mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Mesha, Rishaba, Mithuna, Kadaga, Simha, Kanya, Thula, Viruchika, Dhanu, Makara, Kumbha, Meena.
Sani Peyarchi Palangal Mesham 2020-2023

Sani Peyarchi Palangal Mesham 2020-2023 அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்: செவ்வாயின் ராசியில் பிறந்து நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்கள! இதுவரை காலமும் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதத்தின் படி எதிர்வரும் 24-01-2020 நாள் முதல் 17-01-2023 நாள் வரையில் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளதனால் உடல் ஆரோக்கியத்தில் சிறது முன்னேற்றம் காணப்படுவதுடன், பண வரவுகள் சற்று அதிகளவில் காணப்பட்ட போதிலும், நீங்கள் கடுமையாக உழைப்பது அவசியமாக உள்ளதுடன், தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட வேண்டி ஏற்படும்.

மேலும், தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளினால் லாபங்கள் சற்று குறைவடைவதுடன், தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலைமைகளால் மந்த நிலை காணப்படுவதுடன் அபிவிருத்தி குறைய கூடிய சூழ்நிலை ஏற்படுவதுடன், அதிகளவான அலைச்சலால் காரணமாக நிம்மதி குறைவும் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதனால் புதிய முயற்சிகளில் மிகவும் அவதானத்துடன்; செயல்படுவது மிகவும் நல்லது.

மேலும், உத்தியோகஸ்தர்கள் எவ்வாளவு தான் கஸ்ரப்hட்டாலும் நல்ல பெயரை எடுப்பது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளதுடன், பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். இதனைவிட, பாரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யவதற்கு எண்ணியுள்ள செயற்பாடுகளில் நன்கு சிந்தித்து செயல்படுவதுடன், கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பணிபுரிபவர்களால் வேலைபளு அதிகரித்து நீண்ட நேரம் உழைக்க வேண்டியிருப்பதனால் புதிய வேலை தேடுபவர்கள் இருப்பதைப் பயன்படுத்தி கொள்வதே சிறந்தது.

சனி ஜீவன ஸ்தானமாக உள்ள 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டு கோளான குருபகவான் 05-11-2019 முதல் 20-11-2020 வரையில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிலும், 20-11-2021 முதல் 13-04-2022 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதனால் திருமண போன்ற சுப காரியங்கள் கைகூடுதல், தொழில் உத்தியோகத்தில் வலமான பலனை பெறுதல், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுதல், நெருங்கியவர்களின் ஆதரவு கிட்டுதல், புத்திர வழியில் மகிழ்ச்சி தர கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறுதல், உங்களின் பொருளாதார நிலைமை மிக சிறப்பாக அமைதல் மற்றும் அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்புகள் கிடைத்தல் போன்ற நல்ல விடயங்கள் இடம்பெறும்.

மேலும், தற்போது 3, 9-ல் சஞ்ரிக்கும் ராகு மற்றும் கேது எதிர்வரும் 23-09-2020 ஆம் நாள் முதல் 12-04-2022 ஆம் நாள் வரை 2, 8-ல் சஞ்சரித்து பின்னர் 30-10-2023 இற்கு பின்னர் ஜென்ம ராசியில் ராகு உம் 7-ல் கேது உம் சஞ்சரிக்க உள்ளதனால், நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றகரமான பலனை அடைய முடிவதுடன், கணவன்- மனைவிக்கு இடையில் தேவையில்லாத ஒற்றுமை குறைவு ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதனால், விட்டு கொடுத்து செல்வது நல்லது. மேலும், ஆரோக்கியத்தை சிறப்பாக பேணுவதற்கு உணவு விடயத்தில் மிகவும் கட்டுபாடுடன் இருத்தல் அவசியம்.

உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் நிலையில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக மன நிம்மதி குறைவடைவதுடன், அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலையும் ஏற்படும். இவ்வாறாக உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும்; உங்களால் எதையும் சமாளிக்க முடிவதுடன், எடுக்கும் காரியங்களில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகளையும் பெறுவீர்கள். எனினும், தேவையற்ற பயணங்கள் காரணமாக அலைச்சல் அதிகளவில் ஏற்படுகின்ற போதிலும் ஒரளவுக்கு நன்மைகளும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை எப்படி இருக்கும்

நெருங்கியவர்களை அனுசரித்து நடத்தலின் மூலம் அனுகூலமான நற்பலனை பெறமுடிவதுடன், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றுகின்ற போதிலும் குடும்ப ஒற்றுமைக்கு பங்கம் ஏதும் ஏற்படாது. மேலும், பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திளிப்பதாக அமைவதுடன், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டுதல் மற்றும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதுஎவ்வாறாயினும் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டால் மட்டுமே சேமிப்பு என்பது சாத்தியமான ஒன்றாகும்.

கொடுக்கல்- வாங்கல் எப்படி இருக்கும்

உங்களுக்கு தேவையற்ற வம்பு, வழக்குகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்ற போதிலும், உங்களுக்கு ஆறுதலாக உங்கள் நெருங்கியவர்கள் உதவிகள் கிடைப்பதுடன், நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை உங்களால் காப்பாற்ற முடிவதுடன், பணவரவுகளைப் பொறுத்த வரையில் சுமாராக தான் அமைய முடியும் என்பதனால் ஆடம்பர செலவுகளை குறைத்தல் மற்றும் எதிலும் சிக்கனமாக இருத்தல் என்பன சிறப்பு. மேலும், கொடுக்கல்- வாங்கலில் ஈடுபட்டு கொண்டு இருப்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மிகமிக அவதானத்துடன் செயல்படுதல் மட்டுமே லாபம் அடைவதற்கான ஒரேயொரு வழியாக உள்ளது.

தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்

செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் தாமதமாகும். இதனால் அபிவிருத்தி சற்று குறையும் என்றாலும் பொருளாதார நிலையில் சற்று சாதகமாக இருக்கும். வேலையாட்கள் உங்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அவர்களை கவனத்துடன் கையாள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். வாங்கிய வங்கி கடன்களை செலுத்த முடியாத அளவிற்கு லாபம் குறையும்.

உத்தியோகம் எப்படி இருக்கும்

உயர் அதிகாரிகள் செய்யும் கெடு பிடிகளால் மனநிலையில் நிம்மதிக் குறைவு ஏற்படுவதுடன், பணியில் முழு மனநிறைவற்ற நிலையும், பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்தே பொறுப்பேற்க வேண்டிய நிலை மற்றும் உடல் நிலையில் உண்டாகக் கூடிய சிறுசிறு பாதிப்புகளால் அடிக்கடி லீவு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் என்பன உண்டாகும். எனினும், நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த நிலுவை தொகைகள் உங்களுக்கு உhயி நேரத்தில் கிடைக்கும்.

அரசியல் நிலை எப்படி இருக்கும்

அரசியல்வாதிகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவுடன் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதுடன் உடனிருபவர்களே துரோகம் செய்ய எண்ணும் ஒரு சூழ்நிலை காணப்படுவதனால் தங்கள் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மேலும், கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவுகள் செய்ய நேரிடுவதுடன், பயணங்களால் அதிகளவிலான அலைச்சல் ஏற்படுகின்ற போதிலும் சிறு தடைக்கு பின்னர் மாண்புமிகு பதவிகள் கிடைக்கும்.

விவசாயிகள் விளைச்சல்

விவசாயிகளுக்கு சுமாரான விளைச்சல்கள் கிடைக்கின்ற போதிலும் சந்தையில் விளைபொருட்களுக்கு ஏற்ற விலை எதிர்பார்த்தபடி கிடைக்கப் பெறுவதான் காரணமாக் நீங்கள் மகிழ்ச்சி அடைவது மட்டுமன்றி உங்கள் குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். எனினும்;, அரசு வழியில் வரவிருந்த மானிய உதவிகள் தாமதப்படுதல், சேமிப்பு குறைவடைதல் மற்றும் பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் என்பனவும் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகளவில் உள்ளன.

கலைஞர்கள் வாய்ப்புகள்

கலைஞர்கள் நினைத்த கதாபாத்திரத்திரங்களில் நடிக்க முடியாதவாறு வரவேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப்போகக் கூடிய வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதனால், கையிலிருக்கும் வாய்ப்புகளை சரியாக பார்த்து கொள்வதுடன் சக நடிகர்களுடன் கவனமுடன் பழகுவது நல்லது. மேலும், பொருளாதார நிலைமை சற்று சாதகமாக காணப்படுகின்ற போதிலும் அதிகளவான அலைச்சல் காரணமாக உங்களது சுகபோக வாழ்வு பாதிக்கும்.

பெண்கள் நிலை

பணிபுரியும் பெண்கள் உத்தியோகத்தில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதுடன், குடும்ப விடயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்த்தல் அதாவது பேச்சில் கவனம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் காரணமாக சேமிப்பு குறைவடைவதுடன் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் சில தடைகளை சந்திக்க நேரிடும் எனினும், நீங்கள் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவதுடன், உடல்நிலை ஒரளவுக்கு சிறப்பாக அமையும்.

மாணவ- மாணவியர் நிலை

உடன்பழகும் நண்பர்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதனால் அதிக கவனம் தேவை எனினும் நீங்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவதுடன், அரசு வழியில் வரவேண்டிய உதவிகள் தாமதப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் பல உங்களைத் தேடி வரும். மேலும், பயணங்களின் போது உங்களது வேகத்தைக் குறைப்பதுடன், விளையாட்டுப் போட்டிகளில் நிதானமுடன் இருத்தல் சிறந்த பலனளிக்கும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை

சனிபகவான் மகர ராசியில் உங்கள் ராசியாதிபதி செவ்வாயிக்கு நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதனால் தொழில் உத்தியோகத்தில் சிறிது நெருக்கடிகள் ஏற்பட்டாலும் குரு 9-லும், ராகு 3-லும் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். உடல்நிலை அற்புதமாக அமைந்து எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கிடைப்பதுடன், எதிர்பாராத வகையில் பண வரவுகள் கிடைத்து, நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ச்சி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படுவதுடன், குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும்.

மீனம் ரிஷபம்

ஏனைய அனைத்து ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleCoronavirus Symptoms: உலகை அச்சுறுத்தும் Coronavirus: ஒரு விளக்கம்! Prevention of Coronavirus Causes, Treatments, Types, Diagnosis, Transmitted.
Next articleThirukkural Piranil Vizhayamai Adhikaram-15 திருக்குறள் பிறனில் விழையாமை அதிகாரம்-15 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil