Sani Peyarchi Palangal Meenam 2020-2023
Sani Peyarchi Palangal Meenam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் மீனம் 2020-2023Mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Mesha, Rishaba, Mithuna, Kadaga, Simha, Kanya, Thula, Viruchika, Dhanu, Makara, Kumbha, Meena. Pisces Astrology Meena Rasi மீன ராசி சனி பெயர்ச்சி பலன்கள்.

Sani Peyarchi Palangal Meenam 2020-2023: பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மலர்ந்த முகமும், கனிந்த பார்வையும், கம்பீரமான தோற்றமும் கொண்ட மீன ராசி அன்பர்களே, பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில் உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த சனிபகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை உங்கள் ராசிக்கு லாபஸ்தானமான 11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளதனூல் இதுவரை உங்களுக்கு இருந்த வந்த பிரச்சினைகள் யாவும் பகலவனை கண்ட பனி போல விலகி உடல் ஆரோக்கியம் சிறப்பாக மேம்பட்டு எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவுவதுடன் தொழில் வியாபாரத்தில் இதுவரை காலமும் காணப்பட்டு வந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகி தொட்டதெல்லாம் லாபத்தை கொடுக்கும்.
எனவே புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமான பலனைப் பெற முடியும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைத்து தற்போது உள்ள கடன்கள் எல்லாம் படிப்படியாக குறைவடைவதுடன், அசையும் அசையா சொத்துக்கள் வாங்கி உங்களது செல்வம், செல்வாக்கு உயரும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருக்கும் ஊழியர்களின் ஒத்துழைப்புகளும் வேலைபளுவை குறைப்பதுடன் எதிர்பார்த்த உயர்வுகளையும், இடமாற்றங்களையும் தடையின்றி பெற முடிவதுடன் நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறுகின்ற வகையில் கனவுகள் அனைத்தும் நினவாகும். கடந்த கால மருத்துவ செலவுகள் குறைந்து சேமிக்க முடியும்.
சனி பகவான் சாதகமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் 20-11-2020 முதல் 20-11-2021 வரை சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதனால் புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவதுடன், மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி அளிப்பதுடன், கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மேலும், பூர்வீக சொத்து ரீதியாக இருந்த வழக்குகளில் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு நற்பலன் உண்டாகும். சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் வரும் 23-09-2020 ஆம் நாள் முதல் 12-04-2022 ஆம் நாள் முடிய சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய சிறப்பான அமைப்பாகும்.
உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்
புது தெம்பும் உற்சாகமும் ஏற்பட்டு, நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறைவடைந்து, உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகுவதுடன், குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். மேலும், மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெற்று உங்களின் கடமைகளை நிறைவேறி திருப்தி ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை எப்படி இருக்கும்
இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைவதுடன், பொருளாதார நிலை திருப்திகரமாக அமைந்து வீடு மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகுவதுடன், பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும். இவ்வாறாக, குடும்பத்தில் சுபிட்சமும், லஷ்மி கடாட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். மேலும், கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிப்பதுடன், உறவினர்கள் சாதகமாகச் செயல்பட்டு, மங்களகரமான சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும்.
கொடுக்கல் வாங்கல் நிலை எப்படி இருக்கும்
எதிர்பாராத தனவரவுகள், கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகுதல், விரோதிகள் நண்பர்களாவதல், கொடுத்த கடன்களும் வீடு தேடி வருதல் மற்றும் உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் போன்றனவற்றுடன், பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடிவதுடன், பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவதுடன், நல்ல நட்புகளால் நற்பலன் கிடைத்தல் மற்றும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்
புதிய தொழில் தொடங்க, பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அபிவிருத்தி செய்ய அற்புதமான காலமாகும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடைவதுடன், கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளும் லாபத்தை ஏற்படுத்துவதுடன், முதலாளி தொழிலாளி இடையே உள்ள உறவு திருப்திகரமாக அமைந்து மேலும் மேலும் முன்னேற்றத்தை உண்டாக்கும்.
உத்தியோகம் எப்படி இருக்கும்
உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் திருப்தியான நிலை ஏற்படுவதுடன், திறமைக்கேற்ற பாராட்டுதல்கள், எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் என்பன கிட்டுவதுடன், அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். மேலும், சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிடைப்பதுடன், புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்றுறு உயர்வடைவார்கள்.
அரசியல் எப்படி இருக்கும்
எடுக்கும் காரியங்களில் எந்த வித பிரச்சனைகளும் இன்றி சாதனை செயய முடிவதுடன், கொடுத்த வாக்குறுதிகளை தடையின்றிக் காப்பாற்ற முடிவதனால் மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதுடன், பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மேலும், கட்சி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகுவதுடன், கட்சிப் பணிகளை சிறப்பாகச் செய்ய முடியும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
விவசாயிகள் நிலை எப்படி இருக்கும்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருப்பதுடன், விளைப்பொருள்களுக்கு சற்று கூடுதலான விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதுடன், அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் கிடைக்கும். இவ்வாறாக தாராள தனவரவுகளால் நவீன யுக்திகளைக் கையாள முடியும். கடன்கள் குறைவடைவதுடன், வீடு, மனை, புதிய நிலம் போன்றவற்றையும் வாங்கிச் சேர்க்க முடிவதுடன், பங்காளி உடன் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.
கலைஞர்கள் நிலை எப்படி இருக்கும்
எதிர்பார்க்கும் கதாப்பாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்கள் கனவுகள் நனவாகுவதுடன், புதிய வாய்ப்புகள் தேடி வந்து கதவைத்தட்டுவதன் மூலம் நினைத்த அளவிற்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் நடித்தப் படங்கள் வசூலை வாரி வழங்குவதால் ரசிகர்களின் ஆதரவுப் பெருகி பணவரவுகள் மிக சிறப்பாக காணப்பட்டு ஆடம்பர கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சின்னத் திரையில் இருப்பவர்கள் எளிதில் ஜொலிக்க முடியும்.
பெண்கள் நிலை எப்படி இருக்கும்
பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மணமாகாதவர்களுக்கு திருமணமாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் கிட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
மாணவ மாணவியர் நிலை எப்படி இருக்கும்
நல்ல மதிப்பெண்களைப் பெற்று கல்வியில் பல சாதனைகளைச் செய்ய்து கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளையும், பாராட்டுதல்களையும் பெற முடியும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். நல்ல நட்புகளால் நற்பலன்கள் தேடி வரும்.
ஏனைய அனைத்து ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்களை பார்வையிட இங்கே அழுத்தவும்
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)
By: Tamilpiththan