Today Special Historical Events In Tamil | 10-10 | October 10
October 10 Today Special | October 10 What Happened Today In History. October 10 Today Whose Birthday (born) | October -10th Important Famous Deaths In History On This Day 10/10 | Today Events In History October-10th | Today Important Incident In History | ஐப்பசி 10 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 10-10 | ஐப்பசி மாதம் 10ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 10.10 Varalatril Indru Nadanthathu Enna| October 10 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 10/10 | Famous People Born Today October 10 | Famous People died Today 10-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 10-10 | October 10
மர நாளாக கொண்டாடப்படுகிறது. (போலந்து)
படைத்துறையினர் நாளாக கொண்டாடப்படுகிறது. (இலங்கை)
தலைநகர் விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (வியட்நாம்)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (பிஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1970)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது.(கியூபா, எசுப்பானியாவிடம் இருந்து, 1868)
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
உலக மரண தண்டனை எதிர்ப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
உலக மனநல நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 10-10 | October 10
680ல் முகம்மது நபியின் பேரன் இமாம் உசைன் கர்பலா போரில் முதலாம் யசீத் கலீபாவின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள் ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது.
1575ல் கத்தோலிக்கப் படைகள் கைசு இளவரசன் முதலாம் என்றியின் தலைமையில் சீர்திருத்தவாதிகளைத் தோற்கடித்தன.
1582ல் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1631ல் சாக்சனி இராணுவத்தினர் பிராகா நகரைக் கைப்பற்றினர்.
1760ல் டச்சுக் குடியேற்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, சுரிநாமின் தப்பியோடிய அடிமைகளின் வாரிசுகளான இந்தியூக்கா மக்கள் சுயாட்சியைப் பெற்றனர்.
1780ல் கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.
1846ல் நெப்டியூனின் மிகப்பெரிய சந்திரன் டிரைட்டனை ஆங்கிலேய வானியலாளர் வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.
1911ல் வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.
1916ல் வட இலங்கை அமெரிக்க மிசன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை குருமடத்தில் கொண்டாடியது.
1928ல் சங் கை செக் சீனக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1933ல் யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 விமானம் நடுவானில் வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
1935ல் கிரேக்கத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.
1942ல் சோவியத் ஒன்றியம் ஆத்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.
1945ல் போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனப் பொதுவுடமைக் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தன. இது இரட்டைப் பத்தாவது உடன்பாடு என அழைக்கப்படுகிறது.
1949ல் விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.
1957ல் ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது.
1967ல் விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் சனவரி 27 ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.
1970ல் பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1970ல் மொண்ட்ரியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணித் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர்.
1971ல் விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட இலண்டன் பாலம் அரிசோனாவின் லேக் அவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.
1975ல் பப்புவா நியூ கினி ஐநாவில் இணைந்தது.
1980ல் வடக்கு அல்சீரியாவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 2,633 பேர் உயிரிழந்தனர்.
1986ல் எல் சால்வடோர் தலைநகர் சான் சல்வடோரில் 5.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.
1987ல் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.
1991ல் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1997ல் உருகுவையில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 74 பேர் உயிரிழந்தனர்.
1998ல் காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கிண்டு நகரில் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 41 கொல்லப்பட்டனர்.
2010ல் நெதர்லாந்து அண்டிலிசு நாடு என்ற வகையில் கலைக்கப்பட்டது.
2015ல் துருக்கியின் தலைநகர் அங்காராவில் முக்கிய தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 102 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.
2018ல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சூறாவளி மைக்கேல் தாக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 10-10 | October 10
1684ல் பிரான்சிய ஓவியரான ஆண்ட்வான் வாட்டூ பிறந்த நாள். (இறப்பு-1721)
1731ல் பிரான்சிய-ஆங்கிலேய வேதியியலாளரும் இயற்பியலாளருமான என்றி கேவண்டிசு பிறந்த நாள். (இறப்பு-1810)
1811ல் பிரித்தானியக் கிழக்கிந்திய இராணுவ அதிகாரியான மருத்துவரான வில்லியம் பிரைடன் பிறந்த நாள். (இறப்பு-1873)
1813ல் இத்தாலிய இசையமைப்பாளரான ஜூசெப்பே வேர்டி பிறந்த நாள். (இறப்பு-1901)
1822ல் அமெரிக்கக் கிறித்தவ ஊழியரும் யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மருத்துவருமான சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் பிறந்த நாள். (இறப்பு-1884)
1861ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நோர்வே செயற்பாட்டாளரான பிரிட்ஜோப் நான்ஸன் பிறந்த நாள். (இறப்பு-1930)
1898ல் ஆசுத்திரியத் தொழிலதிபரும் கலைச்சொல்லியலாளருமான யூஜின் வூசுட்டர் பிறந்த நாள். (இறப்பு-1977)
1899ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான எஸ். ஏ. டாங்கே பிறந்த நாள். (இறப்பு-1991)
1902ல் கன்னட எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சிவராம காரந்த் பிறந்த நாள். (இறப்பு-1997)
1906ல் இந்திய எழுத்தாளரான ஆர். கே. நாராயணன் பிறந்த நாள். (இறப்பு-2001)
1913ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளரான கிளாட் சிமோன் பிறந்த நாள். (இறப்பு-2005)
1921ல் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான க. சச்சிதானந்தன் பிறந்த நாள். (இறப்பு-2008)
1927ல் தென்னிந்திய கருநாடக இசைப் பாடகரான நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி பிறந்த நாள். (இறப்பு-2014)
1930ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளருமான நடிகருமான ஹரோல்ட் பிண்டர் பிறந்த நாள். (இறப்பு-2008)
1936ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளரான கெரார்டு எர்ட்டில் பிறந்த நாள்.
1941ல் நைஜீரிய எழுத்தாளரான கென் சரோ விவா பிறந்த நாள். (இறப்பு-1995)
1942ல் அமெரிக்க இந்து மதகுருவான போதிநாத வேலன்சாமி பிறந்த நாள்.
1946ல் சப்பானின் 61வது பிரதமரான நவோடோ கான் பிறந்த நாள்.
1954ல் இந்திய நடிகையான ரேகா பிறந்த நாள்.
1963ல் அமெரிக்க-இசுரேலிய ஊடகவியலாளரான டேனியல் பெர்ல் பிறந்த நாள். (இறப்பு-2002)
1973ல் தெலுங்கு திரைப்பட இயக்குனரான இராஜமௌலி பிறந்த நாள்.
1989ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான சஞ்சனா கல்ரானி பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 10-10 | October 10
680ல் இறைத்தூதர் முகமது நபியின் பேரனான இமாம் உசைன் இறப்பு நாள். (பிறப்பு-626)
827ல் திருத்தந்தையான வாலண்டைன் இறப்பு நாள். (பிறப்பு-800)
1659ல் டச்சு நாடுகாண் பயணியான ஏபெல் டாஸ்மான் இறப்பு நாள். (பிறப்பு-1603)
1744ல் செருமானிய அறிவியலாளரான யோகான் ஐன்றிச் சூல்ட்சு இறப்பு நாள். (பிறப்பு-1687)
1929ல் கனடிய-அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எலைஜா மெக்காய் இறப்பு நாள். (பிறப்பு-1844)
1930ல் செருமனிய தாவரவியலாளரான அடால்ஃப் எங்கிளர் இறப்பு நாள். (பிறப்பு-1844)
1963ல் பிரான்சிய பாடகியும் நடிகையுமான எடித் பியாஃப் இறப்பு நாள். (பிறப்பு-1915)
1973ல் உக்ரைனிய-அமெரிக்க பொருளியலாளரான லுட்விக் வான் மீசசு இறப்பு நாள். (பிறப்பு-1881)
1974ல் தமிழறிஞரான மு. வரதராசன் இறப்பு நாள். (பிறப்பு-1912)
1987ல் விடுதலைப் புலிகளின் பெண் போராளியான மாலதி இறப்பு நாள். (பிறப்பு-1967)
1988ல் வங்காள எழுத்தாளரான பாபானி பட்டாச்சாரியா இறப்பு நாள். (பிறப்பு-1906)
1992ல் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான குலதெய்வம் ராஜகோபால் இறப்பு நாள். (பிறப்பு-1931)
1997ல் யாழ்ப்பாண தென்னிந்தியத் திருச்சபை ஆயரான டி. ஜெ. அம்பலவாணர் இறப்பு நாள். (பிறப்பு-1928)
2000ல் இலங்கையின் 6வது பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கா இறப்பு நாள். (பிறப்பு-1916)
2004ல் அமெரிக்க நடிகரான கிறிஸ்டோபர் ரீவ் இறப்பு நாள். (பிறப்பு-1952)
2011ல் இந்தியப் பாடகரான ஜக்ஜீத் சிங் இறப்பு நாள். (பிறப்பு-1941)
2015ல் தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகையான மனோரமா இறப்பு நாள். (பிறப்பு-1937)
2015ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளரான ரிச்சர்டு கெக் இறப்பு நாள். (பிறப்பு-1931)
2016ல் ரெ.மலேசியத் தமிழ் எழுத்தாளரான கார்த்திகேசு இறப்பு நாள். (பிறப்பு-1940)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan