October 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 11

0

Today Special Historical Events In Tamil | 11-10 | October 11

October 11 Today Special | October 11 What Happened Today In History. October 11 Today Whose Birthday (born) | October -11th Important Famous Deaths In History On This Day 11/10 | Today Events In History October-11th | Today Important Incident In History | ஐப்பசி 11 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 11-10 | ஐப்பசி மாதம் 11ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 11.10 Varalatril Indru Nadanthathu Enna| October 11 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 11/10 | Famous People Born Today October 11 | Famous People died Today 11-10.

  • Today Special in Tamil 11-10
  • Today Events in Tamil 11-10
  • Famous People Born Today 11-10
  • Famous People died Today 11-10
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 11-10 | October 11

    பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.
    புரட்சி நாளாக கொண்டாடப்படுகிறது. (மாக்கடோனியக் குடியரசு)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 11-10 | October 11

    1138ல் சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
    1142ல் சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
    1531ல் சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிக் சிவிங்கிலி கொல்லப்பட்டார்.
    1582ல் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
    1634ல் டென்மார்க் மற்றும் செருமனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் உயிரிழந்தனர்.
    1649ல் 10-நாள் முற்றுகையின் பின்னர், ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேயப் படைகள் வெக்சுபோர்டு நகரைத் தாக்கியதில், 2,000 அயர்லாந்துக் கூட்டமைப்புப் படையினரும், 1,500 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
    1727ல் இரண்டாம் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடி சூடினார்.
    1797ல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: கேம்பர்டவுன் சமரில் நெதர்லாந்து கடற்படையுடன் நடந்த மோதலில் அரச கடற்படை வெற்றியடைந்தது.
    1811ல் முதலாவது நீராவிப் படகுக் கப்பல் சேவை ஜூலியானா நியூயார்க்கிற்கும் நியூ செர்சி, ஓபோகின் நகருக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
    1852ல் ஆத்திரேலியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
    1865ல் ஜமெய்க்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது அன்றைய பிரித்தானிய அரசால் நசுக்கப்பட்டதில் நானூறுக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
    1899ல் இரண்டாம் பூவர் போர் ஆரம்பம். தென்னாப்பிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கும் திரான்சுவால், ஆரஞ்சு இராச்சியத்தின் பூவர்களுக்கும் இடையே போர் ஆரம்பமானது.
    1918ல் புவேர்ட்டோ ரிக்கோவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
    1941ல் மாக்கடோனியத் தேசிய விடுதலைப் போர் ஆரம்பமானது.
    1944ல் துவா மக்கள் குடியரசு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது.
    1954ல் வட வியட்நாமை வியட் மின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
    1958ல் நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.
    1962ல் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்: திருத்தந்தை 23-ஆம் யோவான் 92 ஆண்டுகளுக்குப் பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் முதலாவது கிறித்தவப் பொதுச்சங்கத்தை ஆரம்பித்து வைத்தார்.
    1968ல் நாசா முதற் தடவையாக மூன்று விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.
    1984ல் உருசியாவின் ஓம்சுக் நகரில் ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 178 பேர் உயிரிழந்தனர்.
    1984ல் சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கேத்ரின் சலிவன் விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
    1986ல் பனிப்போர்: அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஐரோப்பாவில் நடுத்தர ஏவுகணைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் தொடர்பாக ஐசுலாந்து ரெய்க்யவிக் நகரில் சந்தித்தனர்.
    1987ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தது.
    2000ல் டிஸ்கவரி விண்ணோடம் நாசாவின் 100-வது விண்ணோடத் திட்டமாக ஏவப்பட்டது.
    2002ல் பின்லாந்தில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
    2006ல் ஈழப்போர்: முகமாலையில் இடம்பெற்ற சமரில் 129 இராணுவத்தினரும் 22 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர். 300 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.
    2013ல் சிசிலி நீரிணையில் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 11-10 | October 11

    1738ல் நியூ சவுத் வேல்சின் 1வது ஆளுநரான‌ ஆர்தர் பிலிப் பிறந்த நாள். (இறப்பு-1814)
    1758ல் செருமானிய மருத்துவரும் வானியலாளருமான‌ ஹென்ரிச் ஒல்பெர்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1840)
    1820ல் ஈழத்தின் தமிழறிஞரும் தமிழாசிரியரும் இதழாசிரியரும் புலவருமான‌ ஆணல்ட் சதாசிவம்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1896)
    1826ல் தமிழ்ப் புதின முன்னோடியான‌ மாயூரம் வேதநாயகம்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1889)
    1872ல் ஆங்கிலேயக் கல்வியாளரும் செயற்பாட்டாளருமான‌ எமிலி டேவிசன் பிறந்த நாள். (இறப்பு-1913)
    1884ல் அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டியான‌ எலினோர் ரூசுவெல்ட் பிறந்த நாள். (இறப்பு-1962)
    1896ல் உருசிய-அமெரிக்க மொழியியலாளரான‌ உரோமன் யாக்கோபுசன் பிறந்த நாள். (இறப்பு-1982)
    1902ல் இந்திய அரசியல்வாதியான‌ ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த நாள். (இறப்பு-1979)
    1908ல் தமிழிசைப் பாடகியும் நாடக மற்றும் திரைப்பட நடிகையுமான‌ கே. பி. சுந்தராம்பாள் பிறந்த நாள். (இறப்பு-1980)
    1916ல் இந்தியக் கல்வியாளரும் செயற்பாட்டாளருமான‌ நானாஜி தேஷ்முக் பிறந்த நாள். (இறப்பு-2010)
    1917ல் சோவியத் உருசிய வானியலாளரான‌ வீக்தர் செர்கேயெவிச் சப்ரனோவ் பிறந்த நாள். (இறப்பு-1999)
    1922ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான‌ எஸ். ராஜேஸ்வர ராவ் பிறந்த நாள். (இறப்பு-1999)
    1923ல் இந்திய-அமெரிக்க கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ ஹரிஷ்-சந்திரா பிறந்த நாள். (இறப்பு-1983)
    1926ல் வியட்நாமிய கவிஞரும் மதகுருவுமான‌ திக் நியாட் ஹன் பிறந்த நாள்.
    1930ல் இந்திய நடிகரான‌ கே. பி. உமர் பிறந்த நாள். (இறப்பு-2001)
    1942ல் இந்திய நடிகரான‌ அமிதாப் பச்சன் பிறந்த நாள்.
    1947ல் கிரேக்கத்தின் 183வது பிரதமரான‌ லூகாசு பாபடெமோசு பிறந்த நாள்.
    1952ல் ஈழத்து நாடகக் கலைஞரான‌ ஐசக் இன்பராஜா பிறந்த நாள். (இறப்பு-2014)
    1962ல் ஐரிய எழுத்தாளரான ஆன் என்ரைட் பிறந்த நாள்.
    1969ல் மொரோக்கோ வானியலாளரான‌ மெரீமே சாதிது பிறந்த நாள்.
    1977ல் அமெரிக்க நடிகரான‌ மாட் போமேர் பிறந்த நாள்.
    1984ல் மலையாளத் திரைப்பட நடிகரான‌ நிவின் பவுலி பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 11-10 | October 11

    1531ல் சுவிட்சர்லாந்து இறையியலாளரான‌ உல்ரிச் ஸ்விங்ளி இறப்பு நாள். (பிறப்பு-1484)
    1889ல் ஆங்கிலேய இயற்பியலாளரான‌ ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் இறப்பு நாள். (பிறப்பு-1818)
    1896ல் ஆத்திரிய இசையமைப்பாளரான‌ ஆன்டன் புரூக்னர் இறப்பு நாள். (பிறப்பு-1824)
    2006ல் ஈழத்தின் எழுத்தாளரும் கல்வியாளருமான‌ ஏ. ஜே. கனகரத்னா இறப்பு நாள். (பிறப்பு-1934)
    2014ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான அப்பாஸ் அலி இறப்பு நாள். (பிறப்பு-1920)
    2015ல் ஈழத்துக் கட்டடக் கலைஞரும் காந்தியவாதியும் செயற்பாட்டாளருமான‌ எஸ். ஏ. டேவிட் இறப்பு நாள். (பிறப்பு-1924)
    2019ல் தென்னிந்திய சாக்சபோன் இசைக் கலைஞருமான‌ கத்ரி கோபால்நாத் இறப்பு நாள். (பிறப்பு-1949)
    2019ல் சோவியத்-உருசிய விண்வெளி வீரரான‌ அலெக்சி லியோனொவ் இறப்பு நாள். (பிறப்பு-1934)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleOctober 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 12
    Next articleஇன்றைய ராசி பலன் 18.09.2022 Today Rasi Palan 18-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!