October 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 09

0

Today Special Historical Events In Tamil | 09-10 | October 09

October 09 Today Special | October 09 What Happened Today In History. October 09 Today Whose Birthday (born) | October -09st Important Famous Deaths In History On This Day 09/10 | Today Events In History October-09th | Today Important Incident In History | ஐப்பசி 09 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 09-10 | ஐப்பசி மாதம் 09ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 09.10 Varalatril Indru Nadanthathu Enna| October 09 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 09/10 | Famous People Born Today October 09 | Famous People died Today 09-10.

  • Today Special in Tamil 09-10
  • Today Events in Tamil 09-10
  • Famous People Born Today 09-10
  • Famous People died Today 09-10
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 09-10 | October 09

    விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (உகாண்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1962)
    விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (எக்குவடோர், எசுப்பானியாவிடம் இருந்து 1820)
    உலக அஞ்சல் நாளாக கொண்டாடப்படுகிறது.
    தேசிய நானோ தொழில்நுட்ப நாளாக கொண்டாடப்படுகிறது. (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 09-10 | October 09

    768ல் முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர்.
    1238ல் முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான்.
    1446ல் அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது.
    1582ல் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
    1594ல் தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது.
    1604ல் சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது.
    1635ல் தொல்குடி அமெரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக றோட் தீவைக் கண்டுபிடித்த ரொஜர் வில்லியம்சு மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
    1708ல் உருசியாவின் முதலாம் பேதுரு லெசுனயா சமரில் சுவீடனைத் தோற்கடித்தார்.
    1740ல் டச்சுக் குடியேறிகளும் பல்வேறு அடிமைக் குழுக்களும் பட்டாவியாவில் உள்ளூர் சீன இனத்தவரைக் கொலை செய்ய ஆரம்பித்தனர். சாவகத் தீவில் இரண்டாண்டுகள் நீடித்த போரில் 10,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
    1760ல் ஏழாண்டுப் போர்: உருசியப் படைகள் பெர்லின் நகரைக் கைப்பற்றின.
    1790ல் அல்சீரியாவைத் தாக்கிய நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையினால் 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.
    1799ல் லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.
    1806ல் புருசியா பிரான்சு மீது போர் தொடுத்தது.
    1812ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: ஈரீ ஏரியில் இடம்பெற்ற கடற் சமரில் அமெரிக்கப் படையினர் இரண்டு பிரித்தானியக் கப்பல்களைக் கைப்பற்றினர்.
    1820ல் உவயாகில் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
    1824ல் கோஸ்ட்டா ரிக்காவில் அடிமை முறை இல்லாதொழிக்கப்பட்டது.
    1831ல் கிரேக்கத்தின் முதலாவது அரசுத்தலைவர் இயோனிசு கப்பொதிசுத்திரியாசு படுகொலை செய்யப்பட்டார்.
    1835ல் கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
    1847ல் செயிண்ட்-பார்த்தலெமியில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
    1854ல் உருசியாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்சு, துருக்கியப் படைகள் ஆரம்பித்தன.
    1871ல் மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
    1874ல் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அமைக்கப்பட்டது.
    1900ல் குக் தீவுகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.
    1910ல் மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.
    1914ல் முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரம் செருமனியிடம் வீழ்ந்தது.
    1934ல் யுகோசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர், பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் லூயி பார்த்தோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
    1940ல் இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டை: செருமனியின் லூப்டுவாபே படைகள் இலண்டன் புனித பவுல் பேராலயம் மீது இரவு நேரத்தில் குண்டுகள் வீசின.
    1941ல் பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத்தலைவரானார்.
    1942ல் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆத்திரேலியாவின் சுயாட்சியை அங்கீகரித்தது.
    1962ல் உகாண்டா பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது.
    1963ல் வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
    1966ல் வியட்நாம் போர்: தென் வியட்நாமில் பின் தாய் நகரில் தென் கொரியப் படைகள் நடத்திய தாக்குதலில் 168 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
    1967ல் சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    1970ல் கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.
    1980ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் தலாய் லாமாவைச் சந்தித்தார்.
    1981ல் பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
    1983ல் ரங்கூனில் தென் கொரிய அரசுத்தலைவர் சுன் டூ-குவான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
    1987ல் யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.
    2001ல் இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
    2004ல் ஆப்கானித்தானில் முதற்தடவையாக பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
    2006ல் வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
    2012ல் பாக்கித்தானிய தாலிபான்கள் மலாலா யூசப்சையியைப் படுகொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 09-10 | October 09

    1852ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளரான‌ எர்மான் எமில் பிசர் பிறந்த நாள். (இறப்பு-1919)
    1864ல் பிரித்தானிய இராணுவ அதிகாரியான‌ ரெசினால்டு டையர் பிறந்த நாள். (இறப்பு-1927)
    1873ல் செருமானிய இயற்பியலாளரும் வானியலாளருமான‌ கார்ல் சுவார்சுசைல்டு பிறந்த நாள். (இறப்பு-1916)
    1876ல் இந்தியப் பௌத்த பேரறிஞரான‌ தர்மானந்த தாமோதர் கோசாம்பி பிறந்த நாள். (இறப்பு-1947)
    1879ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான‌ மேக்ஸ் வோன் உலோ பிறந்த நாள். (இறப்பு-1960)
    1897ல் தமிழ்நாட்டின் 6வது முதலமைச்சரான‌ எம். பக்தவத்சலம் பிறந்த நாள். (இறப்பு-1987)
    1908ல் ஈழத்து எழுத்தாளரும் நாடகாசிரியருமான மு. இராமலிங்கம் பிறந்த நாள். (இறப்பு-1974)
    1909ல் இலங்கைக் கல்வியாளரும் அரசியல்வாதியுமான‌ வ. நல்லையா பிறந்த நாள்.
    1911ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ பி. எஸ். வீரப்பா பிறந்த நாள். (இறப்பு-1998)
    1924ல் இந்திய தலித் தலைவரான‌ இம்மானுவேல் சேகரன் பிறந்த நாள். (இறப்பு-1957)
    1933ல் இலங்கை மொழியியலாளரான‌ சு. சுசீந்திரராஜா பிறந்த நாள்.
    1940ல் ஆங்கிலேயப் பாடகரான‌ ஜான் லெனன் பிறந்த நாள். (இறப்பு-1980)
    1945ல் இலங்கை நடிகரும் அரசியல்வாதியுமான‌ விஜய குமாரணதுங்க பிறந்த நாள். (இறப்பு-1988)
    1945ல் இந்திய பாரம்பரிய சாரோட் இசைக் கலைஞரான‌ அம்ஜத் அலி கான் பிறந்த நாள்.
    1950ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளரான‌ ஜோடி வில்லியம்ஸ் பிறந்த நாள்.
    1959ல் உருசிய அரசியல்வாதியான‌ போரிசு நெம்த்சோவ் பிறந்த நாள். (இறப்பு-2015)
    1966ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான‌ டேவிட் கேமரன் பிறந்த நாள்.
    1968ல் அமெரிக்கக் குற்றவாளியான‌ டிராய் டேவிஸ் பிறந்த நாள். (இறப்பு-2011)
    1968ல் தமிழக அரசியல்வாதியான அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 09-10 | October 09

    892ல் பாரசீக இஸ்லாமிய அறிஞரான இமாம் திர்மிதி இறப்பு நாள். (பிறப்பு-824)
    1943ல் நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளரான‌ பீட்டர் சீமன் இறப்பு நாள். (பிறப்பு-1865)
    1958ல் திருத்தந்தையான‌ பன்னிரண்டாம் பயஸ் இறப்பு நாள். (பிறப்பு-1876)
    1967ல் அர்ச்செந்தீன-கியூப கெரில்லா தலைவரும் மருத்துவருமான‌ சே குவேரா இறப்பு நாள். (பிறப்பு-1928)
    1974ல் செக்-செருமானியத் தொழிலதிபரான‌ ஆஸ்கர் ஷிண்ட்லர் இறப்பு நாள். (பிறப்பு-1908)
    1987ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவரான‌ வில்லியம் பாரி மர்பி இறப்பு நாள். (பிறப்பு-1892)
    1989ல் தமிழக எழுத்தாளரும் பேச்சாளரும் இதழாசிரியரும் அரசியல்வாதியுமான‌ தி. கோ. சீனிவாசன் இறப்பு நாள். (பிறப்பு-1922)
    1995ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான‌ அலெக் டக்ளஸ் – ஹோம் இறப்பு நாள். (பிறப்பு-1903)
    2003ல் இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞரான‌ ஏ. ரி. பொன்னுத்துரை இறப்பு நாள். (பிறப்பு-1928)
    2004ல் அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளரான‌ ஜாக்கஸ் தெரிதா இறப்பு நாள். (பிறப்பு-1930)
    2005ல் இந்திய கருநாடக இசைப் பாடகரான‌ மதுரை என். கிருஷ்ணன் இறப்பு நாள். (பிறப்பு-1928)
    2006ல் இந்திய அரசியல்வாதியான‌ கன்சிராம் இறப்பு நாள். (பிறப்பு-1934)
    2010ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான‌ எஸ். எஸ். சந்திரன் இறப்பு நாள்.
    2015ல் தமிழகப் புல்லாங்குழல் கலைஞரான‌ என். ரமணி இறப்பு நாள். (பிறப்பு-1934)
    2015ல் ஈழத்து எழுத்தாளரான‌ ப. ஆப்டீன் இறப்பு நாள். (பிறப்பு-1937)
    2018ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளரான‌ தாமசு இசுடைட்சு இறப்பு நாள். (பிறப்பு-1940)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleஇன்றைய ராசி பலன் 17.09.2022 Today Rasi Palan 17-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
    Next articleOctober 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 10