Today Special Historical Events In Tamil | 28-11 | November 28
November 28 Today Special | November 28 What Happened Today In History. November 28 Today Whose Birthday (born) | November-28th Important Famous Deaths In History On This Day 28/11 | Today Events In History November 28th | Today Important Incident In History | கார்த்திகை 28 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 28-11 | கார்த்திகை மாதம் 28ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 28.11 Varalatril Indru Nadanthathu Enna| November 28 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 28/11 | Famous People Born Today 28.11 | Famous People died Today 28-11.
Today Special in Tamil 28-11
Today Events in Tamil 28-11
Famous People Born Today 28-11
Famous People died Today 28-11
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 28-11 | November 28
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (அல்பேனியா, துருக்கியிடம் இருந்து 1912)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (மூரித்தானியா, பிரான்சிடம் இருந்து 1960)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (பனாமா, எசுப்பானியாவிடம் இருந்து 1821)
குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. (புருண்டி)
குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. (சாட்)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 28-11 | November 28
1520ல் தென்னமெரிக்கா ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் மகெல்லன் நீரிணையூடாகச் சென்றார்.
1660ல் கிறிஸ்டோபர் ரென், இராபர்ட் வில்லியம் பாயில் உட்பட 12 பேர் இணைந்து அரச கழகம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அமைப்பை ஆரம்பித்தனர்.
1814ல் இலண்டனின் தி டைம்ஸ் நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது.
1821ல் பனாமா எசுப்பானியாவியம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
1843ல் அவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
1848ல் மாத்தளைக் கலகத்தின் தலைவரும், கண்டி இராச்சியத்திற்கு உரிமை கோரியவருமான கொங்காலேகொட பண்டாவிற்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவர் பின்னர் மலாக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
1885ல் செர்பிய-பல்கேரியப் போரில் பல்கேரியா வென்றது.
1893ல் நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
1899ல் இரண்டாம் பூவர் போர்: மோடர் ஆற்று சமரில் பிரித்தானியா பெரும் தோல்வியைச் சந்தித்தது.
1905ல் அயர்லாந்து தேசியவாதி ஆர்தர் கிறிஃபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் பெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
1908ல் பென்சில்வேனியாவின் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 154 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.
1912ல் அல்பேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1920ல் அயர்லாந்து விடுதலைப் போர்: ஐரியக் குடியரசு இராணுவத்தினர் பிரித்தானியப் படை முகாம் ஒன்றைத் தாக்கி 17 பேரைக் கொன்றனர்.
1942ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகர இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 492 பேர் இறந்தார்கள்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியையும், யப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில், உருசியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் தெகுரானில் சந்தித்துப் பேசினார்கள்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.
1958ல் சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
1960ல் மூரித்தானியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1964ல் நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
1965ல் வியட்நாம் போர்: தென் விடநாமிற்குப் படைகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக பிலிப்பீன்சு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேர்டினண்ட் மார்க்கோஸ் அறிவித்தார்.
1966ல் மிக்கேல் மிக்கொம்பெரோ புருண்டியின் மன்னராட்சியைக் கவிழ்த்து, தன்னை அரசுத்தலைவராக அறிவித்தார்.
1967ல் வல்பெக்கூலா என்ற விண்மீன் குழாமின் முதலாவது துடிவிண்மீனை ஜோசெலின் பெல் பர்னல், அந்தோனி எவிழ்சு ஆகியோர் கண்டுபிடித்தனர்.
1971ல் ஜோர்தான் பிரதமர் வாசுபி அல்-தால் பலத்தீன விடுதலை இயக்கத்தின் கருப்பு செப்டம்பர் இயக்கத்தினரால் படுகொலை செயப்பட்டார்.
1972ல் பாரிசு நகரில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1975ல் கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1979ல் நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் உயிரிழந்தனர்.
1980ல் ஈரான் – ஈராக் போர்: மொர்வாரிது நடவடிக்கையில் ஈராக்கியக் கடற்படை ஈராக் கடற்படையினால் அழிக்கப்பட்டது.
1987ல் தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர்.
1989ல் பனிப்போர்: செக்கோசிலோவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
1990ல் ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
1990ல் லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.
1991ல் தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1994ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
2006ல் நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.
2014ல் நைஜீரியாவின் கனோ நகரில் பள்ளிவாசல் ஒன்றில் மூன்று குண்டுகள் வெடித்ததில் 120 பேர் கொல்லப்பட்டனர்.
2016ல் கொலம்பியாவின் மெதெயின் நகருக்கு அருகில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 28-11 | November 28
1293ல் சீனப் பேரரசரான எசுன் தெமுர் கான் பிறந்த நாள். (இறப்பு-1328)
1757ல் ஆங்கிலேயக் கவிஞரும் ஓவியருமான வில்லியம் பிளேக் பிறந்த நாள். (இறப்பு-1827)
1820ல் செருமானிய-ஆங்கிலேய மார்க்சிய மெய்யியலாளரான பிரெட்ரிக் எங்கெல்சு பிறந்த நாள். (இறப்பு-1895)
1826ல் உருசிய வானியலாளரான மத்வேய் கூசெவ் பிறந்த நாள். (இறப்பு-1866)
1864ல் ஆங்கிலேய மெய்யியலாளரும் நூலாசிரியருமான ஜேம்ஸ் ஆலன் பிறந்த நாள். (இறப்பு-1912)
1901ல் மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியான எட்வினா மவுண்ட்பேட்டன் பிறந்த நாள். (இறப்பு-1960)
1907ல் இத்தாலிய எழுத்தாளரும் இதழாளருமான ஆல்பர்டோ மொராவியா பிறந்த நாள். (இறப்பு-1990)
1918ல் இலங்கை மலையகத் தொழிற்சங்கவாதியும் அரசியல்வாதியுமான வி. கே. வெள்ளையன் பிறந்த நாள். (இறப்பு-1971)
1927ல் மலேசிய மன்னரான சுல்தான் அப்துல் ஹாலிம் பிறந்த நாள். (இறப்பு-2017)
1927ல் தமிழக மருத்துவரும் அரசியல்வாதியுமான எச். வி. ஹண்டே பிறந்த நாள்.
1945ல் இந்திய எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான அமர்கோஸ்வாமி பிறந்த நாள்.
1961ல் மெக்சிக்கோ இயக்குநரான அல்போன்சா குயூரான் பிறந்த நாள்.
1962ல் அமெரிக்க நடிகரான யோன் சுருவாட் பிறந்த நாள்.
1967ல் அமெரிக்க நடிகையான ஆன்னா நிக்கோல் இசுமித் பிறந்த நாள். (இறப்பு-2007)
1976ல் ஆத்திரேலிய நடிகரான ரயன் குவான்டென் பிறந்த நாள்.
1984ல் அமெரிக்க நடிகையான மேரி எலிசபெத் வின்ச்டீத் பிறந்த நாள்.
1985ல் தமிழ்த் திரைப்பட நடிகரான சித்தார்த் வேணுகோபால் பிறந்த நாள்.
1992ல் அமெரிக்க நடிகையான ஆடம் ஹிக்ஸ் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 28-11 | November 28
1694ல் சப்பானியக் கவிஞரான மட்சுவோ பாஷோ இறப்பு நாள். (பிறப்பு-1644)
1859ல் அமெரிக்க எழுத்தாளரான வாசிங்டன் இர்விங் இறப்பு நாள். (பிறப்பு-1783)
1872ல் இசுக்கொட்லாந்து-இத்தாலிய வானியலாளரும் கணிதவியலாளருமான மேரி சோமர்வில்லி இறப்பு நாள். (பிறப்பு-1780)
1873ல் இத்தாலிய வானியலாளரான காத்தரினா சுகார்பெல்லினி இறப்பு நாள். (பிறப்பு-1808)
1890ல் இந்திய மெய்யியலாளரும் செயற்பாட்டாளருமான ஜோதிராவ் புலே இறப்பு நாள். (பிறப்பு-1827)
1893ல் பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் கன்னிங்காம் இறப்பு நாள். (பிறப்பு-1814)
1925ல் பிரான்சிய இயற்பியலாளரான ஆல்பிரட் பெரோ இறப்பு நாள். (பிறப்பு-1863)
1939ல் கூடைப்பந்தாட்ட விளையாட்டைக் கண்டுபிடித்த கனடியரான ஜேம்ஸ் நெய்ஸ்மித் இறப்பு நாள். (பிறப்பு-1861)
1954ல் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளரான என்ரிக்கோ பெர்மி இறப்பு நாள். (பிறப்பு-1901)
1968ல் ஆங்கிலேய எழுத்தாளரான எனிட் பிளைட்டன் இறப்பு நாள். (பிறப்பு-1897)
2009ல் தமிழகத் தமிழறிஞரான பொ. ம. இராசமணி இறப்பு நாள். (பிறப்பு-1936)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan