November 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 27

0

Today Special Historical Events In Tamil | 27-11 | November 27

November 27 Today Special | November 27 What Happened Today In History. November 27 Today Whose Birthday (born) | November-27th Important Famous Deaths In History On This Day 27/11 | Today Events In History November 27th | Today Important Incident In History | கார்த்திகை 27 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 27-11 | கார்த்திகை மாதம் 27ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 27.11 Varalatril Indru Nadanthathu Enna| November 27 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 27/11 | Famous People Born Today 27.11 | Famous People died Today 27-11.

Today Special in Tamil 27-11
Today Events in Tamil 27-11
Famous People Born Today 27-11
Famous People died Today 27-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 27-11 | November 27

மாவீரர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (தமிழீழம், இலங்கை)
ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது. (எசுப்பானியா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 27-11 | November 27

25ல் இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
602ல் பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார்.
1095ல் திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார்.
1703ல் இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது.
1830ல் அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார்.
1895ல் ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் உதுமானியர்களால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
1895ல் பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
1912ல் மொரோக்கோவின் வடக்குக் கரையை எசுப்பானியா தனது ஆளுகைக்குள் அறிவித்தது.
1935ல் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது வானூர்தி சென்னையில் இருந்து வந்திறங்கியது.
1940ல் உருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை தளபதி இயன் அண்டோனெஸ்கு கைதுசெய்து தூக்கிலிட்டான்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
1964ல் பனிப்போர்: இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் உருசியாவையும் கேட்டுக் கொண்டார்.
1971ல் சோவியத்தின் “மார்ஸ் 2” விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.
1975ல் கின்னசு உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரியக் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1978ல் துருக்கியில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) ஆரம்பிக்கப்பட்டது.
1983ல் கொலம்பியாவின் போயிங் 747 விமானம் எசுப்பானியா தலைநகர் மத்ரிதில் வீழ்ந்து நொருங்கியதில் 181 பேர் உயிரிழந்தனர்.
1989ல் போயிங் 727 வானூர்தி கொலம்பியாவின் நடுவானில் வெடித்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 107 பேரும், தரையில் மூவரும் கொல்லப்பட்டனர்.
1989ல் ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.
1997ல் அல்சீரியாவில் இடம்பெற்ற தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
2001ல் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிசு கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
2004ல் யோவான் கிறிசோஸ்தோம் புனிதரின் எச்சங்களை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கிழக்கு மரபுவழி திருச்சபையிடம் ஒப்படைத்தார்.
2005ல் பிரான்சின் ஏமியென்சு நகரில் உலகின் முதலாவது மனித முகமாற்றுப் பொருத்து வெற்றிகரமாக இடம்பெற்றது.
2006ல் கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்’ என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.
2007ல் ஈழப்போர்: கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர்.
2007ல் ஈழப்போர்: இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டம், ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2009ல் மாஸ்கோவிற்கும், சென் பீட்டர்ஸ்பேர்க்கிற்கும் இடையில் விரைவுத் தொடருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 28 பேர் கொல்லப்பட்டு, 96 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 27-11 | November 27

1701ல் சுவீடன் வானியலாளரும் இயற்பியலாளருமான‌ ஆன்டர்சு செல்சியசு பிறந்த நாள். (இறப்பு-1744)
1888ல் இந்திய அரசியல்வாதியான‌ கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் பிறந்த நாள். (இறப்பு-1956)
1899ல் தமிழகத் தமிழறிஞரான‌ ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1973)
1903ல் நோபல் பரிசு பெற்ற நோர்வே-அமெரிக்க வேதியியலாளரான‌ லார்ஸ் ஒன்சாகர் பிறந்த நாள். (இறப்பு-1976)
1907ல் இந்தியக் கவிஞரும் நூலாசிரியருமான‌ ஹரிவன்சராய் பச்சன் பிறந்த நாள். (இறப்பு-2003)
1911ல் பிலிப்பீனிய மருத்துவரான‌ பே டெல் முண்டோ பிறந்த நாள். (இறப்பு-2011)
1930ல் இந்திய சமூக செயற்பாட்டாளரான‌ பி. வி. வனஜா பாய் பிறந்த நாள். (இறப்பு-2007)
1940ல் தற்காப்புக்கலை நிபுணரான‌ரும் அமெரிக்க-சீன நடிகருமான‌ புரூசு லீ பிறந்த நாள். (இறப்பு-1973)
1942ல் அமெரிக்க கித்தார் கலைஞரான‌ பாடகருமான‌ ஜிமி ஹென்றிக்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1970)
1942ல் இந்திய எழுத்தாளரும் அரசியல்வாதியுமான‌ மிருதுளா சின்கா பிறந்த நாள்.
1952ல் இந்தியப் பாடகரான‌ பப்பி லஹரி பிறந்த நாள்.
1960ல் உக்ரைனின் 10வது பிரதமரான‌ யூலியா திமொஷென்கோ பிறந்த நாள்.
1965ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதுநிலைத் தளபதியான‌ பால்ராஜ் பிறந்த நாள். (இறப்பு-2008)
1972ல் இலங்கை அரசியல்வாதியான‌ ரிசாத் பதியுதீன் பிறந்த நாள்.
1973ல் இந்தியப் பொறியாளரான‌ சத்தியேந்திர துபே பிறந்த நாள். (இறப்பு-2003)
1977ல் தமிழகத் திரைப்பட நடிகரான‌ உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்.
1986ல் இந்தியத் துடுப்பாட்டக்காரரான‌ சுரேஷ் ரைனா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 27-11 | November 27

கிமு 8ல் உரோமைக் கவிஞரான‌ ஓராசு இறப்பு நாள். (பிறப்பு-கிமு 65)
1852ல் ஆங்கிலேயக் கணிதவியலாளரான‌ அடா லவ்லேஸ் இறப்பு நாள். (பிறப்பு-1815)
1875ல் ஆங்கிலேய வானியலாளரான‌ ரிச்சாட் கிறிஸ்தோபர் ஹரிங்டன் இறப்பு நாள். (பிறப்பு-1826)
1950ல் ஈழத்துத் தமிழறிஞரும் புலவருமான‌ தி. சதாசிவ ஐயர் இறப்பு நாள். (பிறப்பு-1882)
1982ல் ஈழப்போராட்டத்தில் இறந்த விடுதலைப் புலிகளின் முதல் போராளியான‌ லெப்டினன்ட் சங்கர் இறப்பு நாள். (பிறப்பு-1960)
1989ல் இலங்கை இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளரான‌ கே. ஏ. சுப்பிரமணியம் இறப்பு நாள். (பிறப்பு-1931)
2003ல் இந்தியக் கவிஞரான‌ ஹரிவன்சராய் பச்சன் இறப்பு நாள். (பிறப்பு-1907)
2003ல் இந்தியப் பொறியாளரான‌ சத்தியேந்திர துபே இறப்பு நாள். (பிறப்பு-1973)
2008ல் 7வது இந்தியப் பிரதமரான‌ வி. பி. சிங் இறப்பு நாள். (பிறப்பு-1931)
2010ல் இலங்கை வானொலி மற்றும் மேடை நாடக நடிகரும் திரைப்பட நடிகருமான‌ எஸ். ஜேசுரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1931)
2014ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ பிலிப் ஹியூஸ் இறப்பு நாள். (பிறப்பு-1988)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 26
Next articleNovember 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 28