November 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 26

0

Today Special Historical Events In Tamil | 26-11 | November 26

November 26 Today Special | November 26 What Happened Today In History. November 26 Today Whose Birthday (born) | November-26th Important Famous Deaths In History On This Day 26/11 | Today Events In History November 26th | Today Important Incident In History | கார்த்திகை 26 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 26-11 | கார்த்திகை மாதம் 26ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 26.11 Varalatril Indru Nadanthathu Enna| November 26 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 26/11 | Famous People Born Today 26.11 | Famous People died Today 26-11.

Today Special in Tamil 26-11
Today Events in Tamil 26-11
Famous People Born Today 26-11
Famous People died Today 26-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 26-11 | November 26

குடியரசு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மங்கோலியா)
அரசியல் சாசன தினமாக‌ கொண்டாடப்படுகிறது. (இந்தியா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 26-11 | November 26

1161ல் சீனாவில் சொங் கடற்படையினர் சின் கடற்படையினருடன் யாங்சி ஆற்றில் பெரும் போரை நிகழ்த்தினர்.
1778ல் அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக்.
1789ல் சியார்ச் வாசிங்டனால் அறிவிக்கப்பட்ட தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது.
1817ல் கொழும்பைப் பெரும் சூறாவளி தாக்கியதில் பல கப்பல்களும், படகுகளும் கடலில் மூழ்கின.
1842ல் நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1863ல் அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார். 1941 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
1918ல் மொண்டெனேகுரோவின் நாடாளுமன்றம் செர்பியா இராச்சியத்துடன் இணைய வாக்களித்தது.
1922ல் எகிப்திய பார்வோன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
1941ல் பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையை அறிவித்தது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: ஆறு யப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.
1942ல் நோர்வேயைச் சேர்ந்த 572 யூதர்கள் நாட்சி ஜெர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: ரோனா என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியின் வான்படையினரால் நடுநிலப் பகுதியில் வைத்துத் தாக்கியழிக்கப்பட்டது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வி-2 ஏவுகணை ஐக்கிய இராச்சியத்தில் நியூ கிராஸ் வீதியில் உள்ள வுல்வர்த்சு பல்பொருள் அங்காடி மேல் வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகர் மீது வி-1, வி-2 ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது.
1949ல் அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.
1950ல் கொரியப் போர்: மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் ஐநா படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தன.
1957ல் சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
1965ல் சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.
1970ல் குவாதலூப்பின் பாசு-தெர் நகரில் ஒரு நிமிடத்தில் பெய்த 1.5 அங்குல மழையே உலகில் இதுவரை பதியப்பட்ட மிகப்பெரும் மழைவீழ்ச்சி ஆகும்.
1983ல் இலண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.
1986ல் இரண்டாம் உலகப் போர்க்கால நாட்சிகளின் திரெப்ளிங்கா வதை முகாமின் பாதுகாப்பு அதிகாரி ஜான் தெம்சான்சுக் மீதான விசாரணைகள் எருசலேமில் ஆரம்பித்தன.
1991ல் அசர்பைஜான் நாடாளுமன்றம் நகோர்னோ கரபாக் மாகாணத்தின் சுயாட்சி அதிகாரத்தைத் திரும்பப் பெற்று அதன் நகரங்களின் பெயர்களை மூலப் பெயர்களுக்கு மாற்றியது.
1998ல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கன்னா நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 212 பேர் உயிரிழந்தனர்.
1999ல் வனுவாட்டுவை 7.5 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் ஆழிப்பேரலை ஏற்பட்டது. 10 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர்.
2001ல் நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.
2002ல் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.
2003ல் கான்கோர்டு வானூர்தி சேவை தனது கடைசிப் பயணத்தை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரின் மீது மேற்கொண்டது.
2008ல் மும்பாய் நகரில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய குண்டுத் தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2011ல் ஆப்கானித்தானில் நேட்டோ படைகள் பாக்கித்தான் இராணுவ முகாம் மீது தவறுதலாகத் தாக்குதல் மேற்கொண்டதில் 24 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
2011ல் செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் கியூரியோசிட்டி தரையுளவியுடன் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
2013ல் இலங்கையில் “பயணிகள் காசோலை” வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 26-11 | November 26

1857ல் சுவிட்சர்லாந்து மொழியியலாளரான‌ பேர்டினண்ட் டி சோசர் பிறந்த நாள். (இறப்பு-1913)
1890ல் இந்திய மொழியியலாளரும் கல்வியாளரும் இலக்கியவாதியுமான‌ சுனிதி குமார் சாட்டர்சி பிறந்த நாள். (இறப்பு-1977)
1919ல் இந்திய வரலாற்றாளரான‌ ராம் சரண் சர்மா பிறந்த நாள். (இறப்பு-2011)
1921ல் இந்தியப் பொறியியலாளரும் தொழிலதிபருமான‌ வர்கீஸ் குரியன் பிறந்த நாள். (இறப்பு-2012)
1923ல் இந்திய ஒளிப்பதிவாளரான‌ வி. கே. மூர்த்தி பிறந்த நாள். (இறப்பு-2014)
1926ல் இந்திய அறிவியலாளரான‌ யஷ் பால் பிறந்த நாள். (இறப்பு-2017)
1926ல் இந்திய அரசியல்வாதியான‌ ரபி ராய் பிறந்த நாள். (இறப்பு-2017)
1930ல் சுயமரியாதை இயக்கத் தலைவரான‌ குருவிக்கரம்பை வேலு பிறந்த நாள். (இறப்பு-2010)
1933ல் இந்திய இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளரான‌ கோவிந்த் பன்சாரே பிறந்த நாள். (இறப்பு-2015)
1934ல் இலங்கை அரசியல்வாதியான‌ யோசப் பரராஜசிங்கம் பிறந்த நாள். (இறப்பு-2005)
1936ல் இலங்கை அரசியல்வாதியான‌ லலித் அத்துலத்முதலி பிறந்த நாள். (இறப்பு-1993)
1939ல் மலேசியாவின் 5வது பிரதமரான‌ அப்துல்லா அகுமது பதவீ பிறந்த நாள்.
1948ல் ஈழத்து நாதசுவரக் கலைஞரான‌ வி. கே. பஞ்சமூர்த்தி பிறந்த நாள்.
1948ல் நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய-அமெரிக்க உயிரியலாளரான‌ எலிசபெத் பிளாக்பர்ன் பிறந்த நாள்.
1954ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான‌ வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாள். (இறப்பு-2009)
1972ல் இந்திய நடிகரான‌ அர்ஜூன் ராம்பால் பிறந்த நாள்.
1973ல் அமெரிக்க நடிகரும் இயக்குநருமான‌ பீட்டர் பாசிநெல்லி பிறந்த நாள்.
1983ல் அமெரிக்கப் பதிப்பாளரும் தொழிலதிபரும் முகநூலை ஆரம்பித்தவருமான‌ கிரிச் ஹக்ஸ் பிறந்த நாள்.
1986ல் தமிழகத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதையாசிரியருமான‌ ஆனந்த் சங்கர் பிறந்த நாள்.
1990ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ மீரா நந்தன் பிறந்த நாள்.
1990ல் கொசோவா-ஆங்கிலேய பாடகியான‌ நடிகையான‌ ரீட்டா ஓறா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 26-11 | November 26

399ல் திருத்தந்தையான‌ சிரீசியஸ் இறப்பு நாள். (பிறப்பு-334)
1504ல் காஸ்டைலின் அரசியாக இருந்த முதலாம் இசபெல்லா இறப்பு நாள். (பிறப்பு-1451)
1883ல் அமெரிக்கச் செயற்பாட்டாளரான‌ சோஜோர்னர் ட்ரூத் இறப்பு நாள். (பிறப்பு-1797)
1896ல் அமெரிக்க வானியலாளரான‌ பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு இறப்பு நாள். (பிறப்பு-1824)
1930ல் இலங்கை அரசியல்வாதியும் தேசியத் தலைவருமான‌ பொன்னம்பலம் இராமநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1851)
1946ல் இந்திய வரலாற்றாளரும் திராவிடவியலாளருமான‌ சா. கிருஷ்ணசுவாமி ஐயங்கார் இறப்பு நாள். (பிறப்பு-1871)
1964ல் உருசிய வானியலாளரான‌ விசெவோலத் சரனோவ் இறப்பு நாள். (பிறப்பு-1901)
2006ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ ஜி. வரலட்சுமி இறப்பு நாள். (பிறப்பு-1926)
2008ல் மும்பாய் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியக் கால்துறை அதிகாரியான‌ துகாராம் ஓம்பலே இறப்பு நாள்.
2014ல் ஈழத்து எழுத்தாளரான‌ எஸ். பொன்னுத்துரை இறப்பு நாள். (பிறப்பு-1932)
2015ல் சப்பானிய வரலாற்றாசிரியரும் எழுத்தாளரும் தமிழறிஞருமான‌ நொபொரு காராசிமா இறப்பு நாள். (பிறப்பு-1933)
2018ல் தமிழக கல்வெட்டு ஆய்வாளரான‌ ஐராவதம் மகாதேவன் இறப்பு நாள். (பிறப்பு-1930)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 25
Next articleNovember 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 27