November 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 25

0

Today Special Historical Events In Tamil | 25-11 | November 25

November 25 Today Special | November 25 What Happened Today In History. November 25 Today Whose Birthday (born) | November-25th Important Famous Deaths In History On This Day 25/11 | Today Events In History November 25th | Today Important Incident In History | கார்த்திகை 25 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 25-11 | கார்த்திகை மாதம் 25ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 25.11 Varalatril Indru Nadanthathu Enna| November 25 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 25/11 | Famous People Born Today 25.11 | Famous People died Today 25-11.

Today Special in Tamil 25-11
Today Events in Tamil 25-11
Famous People Born Today 25-11
Famous People died Today 25-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 25-11 | November 25

விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சுரிநாம், நெதர்லாந்திடம் இருந்து 1975)
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 25-11 | November 25

885ல் வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர்.
1034ல் இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான்.
1120ல் இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான்.
1343ல் திரேனியக் கடலில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் நாபொலி உட்படப் பல நகரங்கள் சேதமடைந்தன.
1510ல் போர்த்துக்கீசக் கடற்படை அபோன்சோ டி அல்புகெர்க்கே தலைமையிலும், உள்ளூர் கூலிப்படையினரின் உதவியிலும், கோவாவை பிஜப்பூர் சுல்தானகத்திடம் இருந்து கைப்பற்றியது. 451 ஆண்டு கால போர்த்துக்கீசக் குடியேற்ற ஆட்சி ஆரம்பமானது.
1667ல் காக்கேசியாப் பகுதியில் செமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1759ல் பெய்ரூத், திமிஷ்கு நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30,000-40,000 பேர் உயிரிழந்தனர்.
1783ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: 1783 பாரிசு உடன்படிக்கை: கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.
1795ல் சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிசுலாசு ஆகத்து பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு உருசியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
1833ல் சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1839ல் இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1905ல் டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் “ஏழாம் ஆக்கோன்” என்ற பெயரில் நோர்வேயின் மன்னனாக முடிசூடினான்.
1917ல் முதலாம் உலகப் போர்: செருமனியப் படை மொசாம்பிக், தன்சானியா எல்லையில் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தது.
1926ல் ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் உயிரிழந்து பலர் காயமுற்றனர்.
1936ல் சப்பானும், செருமனியும் சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பெர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
1941ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் ‘பர்காம் என்ற கப்பல் செருமனியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1947ல் நியூசிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது.
1950ல் ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் 22 மாநிலங்களைத் தாக்கிய சூறாவளியினால் 353 பேர் உயிரிழந்தனர்.
1960ல் டொமினிக்கன் குடியரசின் போராளிகள் மிராபல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1973ல் கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொசு இராணுவப் புரட்சியை அடுத்து பதவி இழந்தார்.
1975ல் சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1977ல் பிலிப்பீன்சின் முன்னாள் மேலவை உறுப்பினர் பெனீனோ அக்கீனோவிற்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் பின்னர் 1983 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1981ல் ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.
1987ல் பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் உயிரிழந்தனர்.
1992ல் செக்கோசிலோவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக 1993 சனவரி 1 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.
1996ல் அமெரிக்காவின் நடுப்பகுதியை பனிக்கட்டைச் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
2000ல் அசர்பைஜான் தலைநகர் பக்கூ நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
2006ல் சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
2008ல் இலங்கையின் வடக்குப் பகுதியை நிசா புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர், 90,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 25-11 | November 25

1835ல் இசுக்கொட்டிய-அமெரிக்கத் தொழிலதிபரான‌ ஆண்ட்ரூ கார்னேகி பிறந்த நாள். (இறப்பு-1919)
1844ல் செருமானியத் தொழிலதிபரான‌ கார்ல் பென்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1929)
1880ல் ஆங்கிலேய அரசியல் கோட்பாட்டாளரும் எழுத்தாளரும் பதிப்பாளருமான‌ லெனார்ட் வூல்ஃப் பிறந்த நாள். (இறப்பு-1969)
1881ல் திருத்தந்தையான‌ இருபத்திமூன்றாம் யோவான் பிறந்த நாள். (இறப்பு-1963)
1915ல் சிலியின் 30வது அரசுத்தலைவரான‌ அகஸ்தோ பினோசெட் பிறந்த நாள். (இறப்பு-2006)
1926ல் இந்தியாவின் 21வது தலைமை நீதிபதியான‌ ரங்கநாத் மிஸ்ரா பிறந்த நாள். (இறப்பு-2012)
1956ல் தென்னிந்திய மிருதங்க இசைக் கலைஞரான‌ திருவாரூர் பக்தவத்சலம் பிறந்த நாள்.
1965ல் இசுக்கொட்டிய நடிகரான‌ டக்ரே ஸ்காட் பிறந்த நாள்.
1978ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ ராக்கி சாவந்த் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 25-11 | November 25

1943ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ இராசா சாண்டோ இறப்பு நாள். (பிறப்பு-1894)
1950ல் நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு எழுத்தாளரான‌ யொகான்னசு வி. யென்சென் இறப்பு நாள். (பிறப்பு-1873)
1960ல் டொமினிக்கன் குடியரசுப் போராளிகளான‌ மிராபல் சகோதரிகள்,
1964ல் தெலுங்கு கருநாடக மற்றும் வயலின் இசைக் கலைஞரான‌ துவாரம் வேங்கடசுவாமி நாயுடு இறப்பு நாள். (பிறப்பு-1893)
1973ல் இலங்கை அரசியல்வாதியான‌ வி. ஏ. அழகக்கோன் இறப்பு நாள். (பிறப்பு-1903)
1974ல் பர்மிய வழக்கறிஞரும் ஐநாவின் 3வது பொதுச் செயலருமான‌ ஊ தாண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1909)
1984ல் இந்தியாவின் 5வது துணைப் பிரதமரான‌ ஒய். பி. சவாண் இறப்பு நாள். (பிறப்பு-1913)
1997ல் மாலாவியின் 1வது அரசுத்தலைவரான‌ ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா இறப்பு நாள். (பிறப்பு-1898)
2014ல் இந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞரான‌ சிதாராதேவி இறப்பு நாள். (பிறப்பு-1920)
2016ல் தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞரான‌ நேஷனல் செல்லையா இறப்பு நாள். (பிறப்பு-1936)
2016ல் கியூபாவின் 15வது அரசுத்தலைவரும் புரட்சியாளருமான‌ பிடல் காஸ்ட்ரோ இறப்பு நாள். (பிறப்பு-1926)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 24
Next articleNovember 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 26