November 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 24

0

Today Special Historical Events In Tamil | 24-11 | November 24

November 24 Today Special | November 24 What Happened Today In History. November 24 Today Whose Birthday (born) | November-24th Important Famous Deaths In History On This Day 24/11 | Today Events In History November 24th | Today Important Incident In History | கார்த்திகை 24 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 24-11 | கார்த்திகை மாதம் 24ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 24.11 Varalatril Indru Nadanthathu Enna| November 24 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 24/11 | Famous People Born Today 24.11 | Famous People died Today 24-11.

Today Special in Tamil 24-11
Today Events in Tamil 24-11
Famous People Born Today 24-11
Famous People died Today 24-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 24-11 | November 24

படிவளர்ச்சி நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (கொண்டாட்ட நாட்கள்)
ஆசிரியர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (துருக்கி)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 24-11 | November 24

380ல் உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு கான்ஸ்டண்டினோபிலை சென்றடைந்தார்.
1227ல் போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார்.
1359ல் முதலாம் பீட்டர் சைப்பிரசின் மன்னராக முடி சூடினார்.
1639ல் ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
1642ல் ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாசுமேனியா எனப் பெயர் பெற்றது.
1750ல் மராத்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பாளர் தாராபாய், கோலாப்பூர் மன்னர் இரண்டாம் ராஜாராமை பேஷ்வா பதவியில் இருந்து பாலாஜி பாஜி ராவை நீக்க மறுத்தமைக்காகக் கைது செய்தார்..
1859ல் சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார்.
1865ல் இலங்கையில் கொழும்பு, கண்டி மாநகரசபைகள் அமைக்கப்பட்டன.
1914ல் முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
1917ல் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
1922ல் துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டர்சு உட்பட ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1940ல் இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தராவா என்ற இடத்தில் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் கொல்லப்பட்டனர்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: தோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானப் படை வடக்கு மரியானா தீவுகளில் இருந்து குண்டுகளை வீசின.
1963ல் அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடியை சுட்டுக் கொன்ற லீ ஆர்வி ஆசுவால்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.
1965ல் யோசப் மொபுட்டு கொங்கோவின் அரசுத்தலைவர் பதவியை கைப்பற்றினார். இவர் நாட்டின் பெயரை சயீர் என மாற்றி 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
1966ல் செக்கோசிலோவாக்கியாவில் பிராத்திஸ்லாவா நகரில் பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் உயிரிழந்தனர்.
1969ல் சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1971ல் வாசிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் வான்குடையுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
1973ல் 1973 எண்ணெய் நெருக்கடியை அடுத்து செருமனியில் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இது அடுத்த நான்கு மாதங்களுக்கு அமுலில் இருந்தது.
1976ல் துருக்கியின் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1992ல் யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
2002ல் ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் தில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
2006ல் சிங்கள நாளிதழான `மௌபிம’ பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
2012ல் டாக்கா நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர்.
2015ல் உருசியாவின் சுக்கோய் சு-24 போர் விமானம் சிரியா-துருக்கிய எல்லையில் துருக்கிய வான்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் வானோடி ஒருவர் கொல்லப்பட்டார்.
2016ல் கொலம்பியா அரசும் கொலம்பியா மக்கள் இராணுவமும் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. நாட்டின் 50-ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
2017ல் பிர் அல்-அபெட் தாக்குதல்: எகிப்தில் பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவாடா பள்ளிவாசலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 305 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 24-11 | November 24

1632ல் இடச்சு மெய்யியலாளரான‌ பரூக் இசுப்பினோசா பிறந்த நாள். (இறப்பு-1677)
1784ல் அமெரிக்காவின் 12வது அரசுத்தலைவரான‌ சக்கரி தைலர் பிறந்த நாள். (இறப்பு-1850)
1888ல் அமெரிக்க எழுத்தாளரான‌ டேல் கார்னெகி பிறந்த நாள். (இறப்பு-1955)
1914ல் இந்திய இசுலாமிய அறிஞரான‌ அபுல் அஸன் அலி அஸனி நத்வி பிறந்த நாள். (இறப்பு-1999)
1918ல் மலையாள இலக்கியவாதியும் மதிப்புரைஞருமான‌ கிருஷ்ண சைதன்யா பிறந்த நாள். (இறப்பு-1994)
1924ல் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரான‌ தத்தினேனி பிரகாஷ் ராவ் பிறந்த நாள். (இறப்பு-1992)
1934ல் அமெரிக்க வானியலாளரான‌ கரோலின் கர்லெசு பிறந்த நாள். (இறப்பு-1987)
1939ல் இலங்கைத் தமிழ்ப் பன்னூலாசிரியரான‌ எஸ். ஏ. ஐ. மத்தியு பிறந்த நாள். (இறப்பு-2016)
1943ல் இந்தியப் பொருளியலாளரும் ஆட்சிப் பணி அதிகாரியுமான மான்டெக் சிங் அலுவாலியா பிறந்த நாள்.
1955ல் ஆங்கிலேயத் துடுப்பாளரான‌ இயன் போத்தம் பிறந்த நாள்.
1961ல் இந்திய எழுத்தாளரான‌ அருந்ததி ராய் பிறந்த நாள்.
1968ல் இலங்கை அரசியல்வாதியான‌ அனுர குமார திசாநாயக்க பிறந்த நாள்.
1969ல் இலங்கைத் துடுப்பாளரான‌ ருமேஸ் களுவித்தாரன பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 24-11 | November 24

1675ல் இந்திய ஆன்மீகத் துறவியான‌ குரு தேக் பகதூர் இறப்பு நாள். (பிறப்பு-1621)
1834ல் இசுக்கொட்லாந்து தாவரவியலாளரான‌ ஜான் கில்லிஸ் இறப்பு நாள். (பிறப்பு-1792)
1891ல் ஆங்கிலேய கவிஞரான‌ லிட்டன் பிரபு இறப்பு நாள். (பிறப்பு-1831)
1953ல் தமிழக இந்தியவியலாளரான வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் இறப்பு நாள். (பிறப்பு-1896)
1973ல் இலங்கை கல்வியாளரும் அரசியல்வாதியும் எழுத்தாளருமான‌ ஏ. எம். ஏ. அசீஸ் இறப்பு நாள். (பிறப்பு-1911)
1980ல் அமெரிக்க வானியலாளரான‌ என்றியேட்டா கில் சுவோப் இறப்பு நாள். (பிறப்பு-1902)
2002ல் அமெரிக்க மெய்யியலாளரான‌ ஜான் ரால்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1921)
2004ல் ஆங்கிலேய-கனடிய எழுத்தாளரான‌ ஆர்தர் ஹெய்லி இறப்பு நாள். (பிறப்பு-1920)
2005ல் தமிழக எழுத்தாளரான‌ தனுஷ்கோடி ராமசாமி இறப்பு நாள். (பிறப்பு-1945)
2009ல் தாய்லாந்தின் 25வது பிரதமரான‌ சமாக் சுந்தரவேஜ் இறப்பு நாள். (பிறப்பு-1935)
2011ல் இலங்கை அரசியல்வாதியும் இராணுவ அதிகாரியுமான‌ அனுருத்த ரத்வத்தை இறப்பு நாள். (பிறப்பு-1938)
2014ல் இந்திய அரசியல்வாதியான‌ முரளி தியோரா இறப்பு நாள். (பிறப்பு-1937)
2015ல் தமிழக அரசியல்வாதியும் சமூக சேவகருமான‌ ஏ. எஸ். பொன்னம்மாள் இறப்பு நாள்.
2018ல் கன்னடத் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான‌ அம்பரீசு இறப்பு நாள். (பிறப்பு-1952)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 23 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 23
Next articleNovember 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 25