November 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 17

0

Today Special Historical Events In Tamil | 17-11 | November 17

November 17 Today Special | November 17 What Happened Today In History. November 17 Today Whose Birthday (born) | November-17th Important Famous Deaths In History On This Day 17/11 | Today Events In History November 17th | Today Important Incident In History | கார்த்திகை 17 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 17-11 | கார்த்திகை மாதம் 17ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 17.11 Varalatril Indru Nadanthathu Enna| November 17 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 17/11 | Famous People Born Today 17.11 | Famous People died Today 17-11.

Today Special in Tamil 17-11
Today Events in Tamil 17-11
Famous People Born Today 17-11
Famous People died Today 17-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 17-11 | November 17

அனைத்துலக மாணவர் நாளாக கொண்டாடப்படுகிறது.
உலக குறைப்பிரசவ தினமாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 17-11 | November 17

1292ல் ஜோன் பலியல் இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார்.
1405ல் சூலு சுல்தானகம் அமைக்கப்பட்டது.
1511ல் எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.
1558ல் இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
1603ல் ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1796ல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.
1800ல் ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தனது முதலாவது அமர்வை வாசிங்டன், டி. சி.யில் ஆரம்பித்தது.
1811ல் ஒசே மிகுவேல் கரேரா சிலியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
1820ல் கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
1831ல் எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
1869ல் எகிப்தில், நடுநிலக் கடலையும், செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
1873ல் பெஸ்ட், பூடா, ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் அங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.
1878ல் இத்தாலி மன்னர் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது. மன்னர் சிறு காயங்களுடன் தப்பினார்.
1903ல் உருசியாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்செவிக் (பெரும்பான்மை), மேன்செவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.
1918ல் யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.
1922ல் முன்னாள் உதுமானிய சுல்தான் ஆறாம் மெகெமெத் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.
1933ல் ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
1939ல் செக் நாட்டில் நாட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்நாளை நினைவுகூரும் முகமாக அனைத்துலக மாணவர் நாள் பல நாடுகளில் நினைவுகூரப்பட்டு வருகிறது.
1947ல் அமெரிக்க அறிவியலாளர்கள் ஜான் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோர் திரான்சிஸ்டரின் முக்கிய இயல்புகளைக் கண்டறிந்தனர். 20-ஆம் நூற்றாண்டின் மின்னணுவியல் புரட்சி ஆரம்பமானது.
1950ல் லாமோ டோண்டிரப் டென்சின் கியாட்சோ என்ற பெயரில் திபெத்தின் 14வது தலாய் லாமாவாக முடிசூடினார்.
1953ல் அயர்லாந்து, பிளாசுக்கெட் தீவுகளில் இருந்து அங்கு வாழ முடியாத சூழலில் எஞ்சிய குடிமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
1969ல் பனிப்போர்: பேரழிவு ஆயுதங்களைக் குறைக்கும் முகமாக சோவியத், அமெரிக்க அதிகாரிகள் எல்சிங்கியில் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
1970ல் சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய தானியங்கி ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
1983ல் தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது.
1989ல் பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.
1993ல் நைஜீரியாவில் இராணுவப் புரட்சி மூலம் அரசு கவிழ்க்கப்பட்டது.
1997ல் எகிப்தில், அல்-உக்சுர் நகரில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 62 பேர் கொல்லப்பட்டனர்.
2000ல் பெருவில் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2012ல் எகிப்தில் தொடருந்துக் கடவை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 50 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.
2013ல் உருசியாவில் கசான் விமான நிலையத்தில் தத்தாரிஸ்தான் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 17-11 | November 17

79ல் உரோமைப் பேரரசரான‌ வெசுப்பாசியான் பிறந்த நாள். (இறப்பு-79)
1865ல் கனடிய வானியலாளரான‌ ஜான் சுடேன்லி பிளாசுகெட் பிறந்த நாள். (இறப்பு-1941)
1870ல் தமிழகப் புரவலரும் தமிழறிஞருமான‌ வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் பிறந்த நாள். (இறப்பு-1920)
1870ல் உருசிய வானியலாளரான‌ செர்கேய் பிளாசுக்கோ பிறந்த நாள். (இறப்பு-1956)
1885ல் அமெரிக்கத் திரைப்பட ஒளிப்பதிவாளரான‌ சார்லசு ரோஷர் பிறந்த நாள். (இறப்பு-1974)
1887ல் ஆங்கிலேய படைத்துறை அதிகாரியான‌ பெர்னார்ட் மோண்ட்கோமரி பிறந்த நாள். (இறப்பு-1976)
1896ல் பலருசிய-உருசிய மெய்யியலாளரும் உளவியலாளருமான‌ லெவ் வைகாட்ஸ்கி பிறந்த நாள். (இறப்பு-1934)
1904ல் அமெரிக்க கட்டிடக்கலைஞரும் சிற்பியுமான‌ இசாமு நொகுச்சி பிறந்த நாள். (இறப்பு-1988)
1906ல் ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்த சப்பானியப் பொறியியலாளரான‌ சோய்செரோ ஹோண்டா பிறந்த நாள். (இறப்பு-1991)
1909ல் தமிழகத் தமிழறிஞரான‌ சி. இலக்குவனார் பிறந்த நாள். (இறப்பு-1973)
1917ல் ஈழத்து எழுத்தாளரான‌ க. வேலாயுதம் பிறந்த நாள். (இறப்பு-2009)
1920ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குநருமான‌ ஜெமினி கணேசன் பிறந்த நாள். (இறப்பு-2002)
1922ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவரான‌ இசுட்டான்லி கோகென் பிறந்த நாள்.
1927ல் செக் நாட்டுத் தமிழறிஞரான‌ கமில் சுவெலபில் பிறந்த நாள். (இறப்பு-2009)
1929ல் மலேசியத் தமிழ் வேதியியலாளரும் இரப்பர் தொழிலை நவீனமயப் படுத்தியவருமான‌ பி. சி. சேகர் பிறந்த நாள். (இறப்பு-2006)
1930ல் இலங்கை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான‌ பிரேம்ஜி ஞானசுந்தரம் பிறந்த நாள். (இறப்பு-2014)
1942ல் கம்போடியக் குற்றவாளியான‌ காயிங் கெக் இயேவ் பிறந்த நாள்.
1942ல் அமெரிக்க இயக்குநரும் நடிகருமான‌ மார்ட்டின் ஸ்கோர்செசி பிறந்த நாள்.
1950ல் ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான‌ கோகிலா மகேந்திரன் பிறந்த நாள்.
1951ல் இலங்கை-இந்தியத் துறவியான‌ திருச்சி பிரேமானந்தா பிறந்த நாள். (இறப்பு-2011)
1952ல் தென்னாப்பிரிக்க அரசியல்வாதியான‌ சிறில் ரமபோசா பிறந்த நாள்.
1972ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ ரோஜா செல்வமணி பிறந்த நாள்.
1978ல் தெனிந்தியத் திரைப்பட நடிகையான‌ கீர்த்தி ரெட்டி பிறந்த நாள்.
1982ல் இந்தியத் துடுப்பாளரான‌ யூசுஃப் பதான் பிறந்த நாள்.
1983ல் அமெரிக்க எழுத்தாளரான‌ கிறிஸ்டோபர் பாலோனி பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 17-11 | November 17

1558ல் இங்கிலாந்தின் அரசியான‌ முதலாம் மேரி இறப்பு நாள். (பிறப்பு-1516)
1796ல் உருசியப் பேரரசியான‌ இரண்டாம் கத்தரீன் இறப்பு நாள். (பிறப்பு-1729)
1858ல் உவெல்சு செயற்பாட்டாளரான‌ இராபர்ட்டு ஓவன் இறப்பு நாள். (பிறப்பு-1771)
1917ல் பிரான்சிய சிற்பியான‌ ஆகுஸ்ட் ரொடான் இறப்பு நாள். (பிறப்பு-1840)
1928ல் இந்திய அரசியல்வாதியான‌ லாலா லஜபதி ராய் இறப்பு நாள். (பிறப்பு-1865)
1973ல் பிரான்சிய-இந்திய ஆன்மீகத் தலைவரான‌ மிரா அல்பாசா இறப்பு நாள். (பிறப்பு-1878)
1989ல் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகரான‌ திருச்சி லோகநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1924)
2000ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளரான‌ இலூயீ நீல் இறப்பு நாள். (பிறப்பு-1904)
2010ல் தமிழகத் தமிழறிஞரான‌ பி. விருத்தாசலம் இறப்பு நாள். (பிறப்பு-1940)
2012ல் மகாராட்டிர-இந்திய அரசியல்வாதியான‌ பால் தாக்கரே இறப்பு நாள். (பிறப்பு-1926)
2013ல் நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளரான‌ டோரிஸ் லெசிங் இறப்பு நாள். (பிறப்பு-1919)
2013ல் தமிழக எழுத்தாளரான‌ பூரணி இறப்பு நாள். (பிறப்பு-1913)
2013ல் நகைச்சுவை நடிகரான‌ திடீர் கண்ணையா இறப்பு நாள். (பிறப்பு-1937)
2015ல் பக்திப் பாடகரான‌ பித்துக்குளி முருகதாஸ் இறப்பு நாள். (பிறப்பு-1920)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 16
Next articleNovember 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 18