November 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 18

0

Today Special Historical Events In Tamil | 18-11 | November 18

November 18 Today Special | November 18 What Happened Today In History. November 18 Today Whose Birthday (born) | November-18th Important Famous Deaths In History On This Day 18/11 | Today Events In History November 18th| Today Important Incident In History | கார்த்திகை 18 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 18-11 | கார்த்திகை மாதம் 18ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 18.11 Varalatril Indru Nadanthathu Enna| November 18 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 18/11 | Famous People Born Today 18.11 | Famous People died Today 18-11.

Today Special in Tamil 18-11
Today Events in Tamil 18-11
Famous People Born Today 18-11
Famous People died Today 18-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 18-11 | November 18

விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (லாத்வியா, உருசியாவிடம் இருந்து 1918)
விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மொரோக்கோ, பிரான்சு, மற்றும் எசுப்பானியாவிடம் இருந்து 1956)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 18-11 | November 18

326ல் பழைய புனித பேதுரு பேராலயம் திறந்து வைக்கப்பட்டது.
401ல் விசிகோத்துகள் முதலாம் அலாரிக் மன்னரின் தலைமையில் ஆல்ப்சு மலைகளைத் தாண்டி வடக்கு இத்தாலியை முற்றுகையிட்டனர்.
1105ல் மேகினுல்ஃபோ எதிர்-திருத்தந்தையாக நான்காம் சில்வெசுட்டர் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1180ல் இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1210ல் புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஒட்டோ திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்டினால் நீக்கப்பட்டார்.
1421ல் நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,
1493ல் கிறித்தோபர் கொலம்பசு புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
1494ல் பிரெஞ்சு மன்னர் எட்டாம் சார்ல்சு இத்தாலியின் புளோரன்சு நகரைக் கைப்பற்றினார்.
1626ல் புதிய புனித பேதுரு பேராலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
1730ல் பின்னாளைய புருசிய மன்னர் இரண்டாம் பிரெடெரிக் அரச மன்னிப்புப் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1803ல் எயித்தியப் புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயித்தியக் குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.
1809ல் நெப்போலியப் போர்கள்: வங்காள விரிகுடாவில் இடம்பெற்ற கடற்படைச் சமரில் பிரெஞ்சுக் கடற்படை பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளை வென்றது.
1863ல் தென்மார்க்கின் ஒன்பதாம் கிறித்தியான் சிலெசுவிக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல் செருமனி-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.
1872ல் சூசன் பிரவுன் அந்தோனியும் மேலும் 14 பெண்களும் அமெரிக்க அரசுத்தேர்தலில் வாக்களித்தமைக்காகக் கைது செய்யப்பட்டனர்.
1883ல் கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேரவலயங்களை வகுத்துக் கொண்டன.
1903ல் பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
1905ல் டென்மார்க் இளவரசர் கார்ல் நோர்வே மன்னராக ஏழாம் ஆக்கொன் என்ற பெயரில் முடிசூடினார்.
1909ல் நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க் கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
1918ல் லாத்வியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1926ல் ஜார்ஜ் பெர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.
1928ல் வால்ட் டிஸ்னியால் இயக்கப்பட்ட முதலாவது ஒலி இசைவாக்கப்பட்ட அசையும் கேலித் திரைப்படம் நீராவிப்படகு வில்லி வெளியிடப்பட்டது. இந்நாளே மிக்கி மவுசின் பிறந்தநாளாகக் கொண்டாடப்பட்டுகிறது.
1929ல் அத்திலாந்திக் பெருங்கடலில் நியூபவுண்ட்லாந்துக் கரையில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக பலத்த சேதம் எற்பட்டது. 28 பேர் உயிரிழந்தனர்.
1940ல் இரண்டாம் உலகப் போர்: முசோலினியின் கிரேக்க-இத்தாலியப் போரில் ஏற்பட்ட தோல்வியைப் பற்றி விவாதிக்க இட்லரும் இத்தாலிய வெளியுறவு அமைச்சரும் சந்தித்தனர்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 440 போர் விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் பிரித்தானியா 9 வானூர்திகளையும் 53 விமானிகளையும் இழந்தது.
1947ல் நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர் உயிரிழந்தனர்.
1949ல் நைஜீரியாவில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 51 பேர் காயமடைந்தனர்.
1961ல் அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி 18,000 இராணுவ ஆலோசகர்களை தென் வியட்நாமுக்கு அனுப்பினார்.
1963ல் முதலாவது தள்ளு-குமிழ் தொலைபேசி சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
1971ல் ஓமான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1978ல் கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
1987ல் லண்டனில் கிங் க்ரொஸ் பாதாளத் தொடருந்து நிலையத்தில் தீ பரவியதில் 31 பேர் உயிரிழந்தனர்.
1988ல் அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் ஒப்புதல் அளித்தார்.
1989ல் கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1993ல் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின சிறுபான்மை ஆட்சிக்கு முடிவு ஏற்பட வழிவகுத்த புதிய அரசியலைப்புக்கு 21 அரசியல் கட்சிகள் இணைந்து ஒப்புதல் அளித்தன.
1996ல் பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்கு கால்வாய் சுரங்கம் வழியாகச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் பலர் காயமடைந்தனர்.
2006ல் ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் இலங்கைக் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.
2013ல் அமெரிக்காவின் நாசா நிறுவனம் மாவென் விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 18-11 | November 18

1787ல் பிரான்சிய இயற்பியலாளரும் படப்பிடிப்பாளருமான‌ லூயி தாகர் பிறந்த நாள். (இறப்பு-1851)
1836ல் ஆங்கிலேயக் கவிஞரான‌ டபிள்யூ. எஸ். கில்பர்ட் பிறந்த நாள். (இறப்பு-1911)
1882ல் பிரான்சிய மெய்யியலாளரான‌ ஜாக் மாரித்தேன் பிறந்த நாள். (இறப்பு-1973)
1888ல் இந்திய யோகா ஆசிரியரான‌ திருமலை கிருஷ்ணமாச்சாரி பிறந்த நாள். (இறப்பு-1989)
1888ல் அமெரிக்க எழுத்தாளரும் ஊடகவியலாளருமான‌ பிரான்சஸ் மரியன் பிறந்த நாள். (இறப்பு-1973)
1901ல் இந்திய நடிகரும் இயக்குநருமான‌ வி. சாந்தாராம் பிறந்த நாள். (இறப்பு-1990)
1910ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ பதுகேஷ்வர் தத் பிறந்த நாள். (இறப்பு-1965)
1923ல் அமெரிக்க விண்வெளி வீரரான‌ அலன் ஷெப்பர்ட் பிறந்த நாள். (இறப்பு-1998)
1929ல் தமிழகத் திரைப்பட நடிகையான பி. எஸ். சரோஜா பிறந்த நாள்.
1939ல் கனடிய எழுத்தாளரான‌ கவிஞரான‌ மார்கரெட் அட்வுட் பிறந்த நாள்.
1939ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-பிரித்தானிய நரம்பணுவியல் அறிஞரான‌ ஜான் ஓ’கீஃப் பிறந்த நாள்.
1945ல் இலங்கையின் 6வது அரசுத்தலைவரான மகிந்த ராசபக்ச பிறந்த நாள்.
1956ல் அமெரிக்கக் கணினியாளரான‌ ஜிம் விரிச் பிறந்த நாள். (இறப்பு-2014)
1965ல் இலங்கை இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளரான‌ பிரேம்குமார் குணரத்தினம் பிறந்த நாள்.
1967ல் இலங்கை-பிரான்சிய தமிழ்ப் படைப்பாளியும் நடிகரும் போராளியுமான‌ ஷோபாசக்தி பிறந்த நாள்.
1968ல் அமெரிக்க நடிகரான‌ ஓவன் வில்சன் பிறந்த நாள்.
1982ல் இந்தியப் பாடகியும் பாடலாசிரியருமான‌ நேகா பாசின் பிறந்த நாள்.
1984ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ நயன்தாரா பிறந்த நாள்.
1992ல் அமெரிக்க நடிகரும் இயக்குநருமான‌ நேத்தன் கிரெஸ் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 18-11 | November 18

1772ல் மராட்டியப் பேரரசின் நான்காம் தலைமை அமைச்சரான‌ மாதவராவ் இறப்பு நாள். (பிறப்பு-1745)
1887ல் செருமானியக் கவிஞரும் மெய்யியலாளருமான‌ குஸ்டாவ் பெச்னர் இறப்பு நாள். (பிறப்பு-1801)
1908ல் இந்திய வழக்கறிஞரும் நீதியாளருமான‌ வி. பாஷ்யம் ஐய்யங்கார் இறப்பு நாள். (பிறப்பு-1844)
1922ல் பிரான்சிய எழுத்தாளரான‌ மார்செல் புரூஸ்ட் இறப்பு நாள். (பிறப்பு-1871)
1936ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான‌ வ. உ. சிதம்பரம்பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1872)
1952ல் பிரான்சியக் கவிஞரான‌ போல் எல்யூவார் இறப்பு நாள். (பிறப்பு-1895)
1962ல் நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு இயற்பியலாளரான‌ நீல்சு போர் இறப்பு நாள். (பிறப்பு-1885)
1982ல் தமிழக எழுத்தாளரான‌ தி. ஜானகிராமன் இறப்பு நாள். (பிறப்பு-1921)
2013ல் தமிழக நாதசுவரக் கலைஞரான‌ செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1929)
2014ல் இந்திய இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ சி. ருத்ரைய்யா இறப்பு நாள். (பிறப்பு-1947)
2015ல் தமிழறிஞரான‌ கா. மீனாட்சிசுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1925)
2017ல் ஈழத்து இசையமைப்பாளரான‌ திருமலை பத்மநாதன் இறப்பு நாள்.
2020ல் உருசியத் தமிழ்ப் பேராசிரியரும் தமிழறிஞருமான‌ அலெக்சாண்டர் துபியான்சுகி இறப்பு நாள். (பிறப்பு-1941)
2021ல் ஈழத்து எழுத்தாளரான‌ கே. எஸ். ஆனந்தன் இறப்பு நாள். (பிறப்பு-1930)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 17
Next articleNovember 19 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 19