November 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 12

0

Today Special Historical Events In Tamil | 12-11 | November 12

November 12 Today Special | November 12 What Happened Today In History. November 12 Today Whose Birthday (born) | November-12th Important Famous Deaths In History On This Day 12/11 | Today Events In History November 12th | Today Important Incident In History | கார்த்திகை 12 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 12-11 | கார்த்திகை மாதம் 12ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 12.11 Varalatril Indru Nadanthathu Enna| November 12 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 12/11 | Famous People Born Today 12.11 | Famous People died Today 12-11.

Today Special in Tamil 01-11
Today Events in Tamil 12-11
Famous People Born Today 12-11
Famous People died Today 01-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 12-11 | November 12

தந்தையர் தினமாக‌ கொண்டாடப்படுகிறது. (இந்தோனேசியா)
உலக நுரையீரல் அழற்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 12-11 | November 12

764ல் திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன.
1028ல் பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார்.
1555ல் திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார்.
1793ல் பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
1893ல் அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாக்கித்தான்) ஆப்கானித்தானுக்கும் இடையேயான துராந்து எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
1905ல் நோர்வே மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
1918ல் ஆஸ்திரியா குடியரசாகியது.
1927ல் மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
1927ல் லியோன் திரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
1928ல் வெசுட்ரிசு என்ற பயணிகள் கப்பல் வர்ஜீனியாவில் மூழ்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 110 பேர் உயிரிழந்தனர்.
1940ல் இரண்டாம் உலகப் போர்: காபோன் சண்டை முடிவுக்கு வந்தது. பிரெஞ்சுப் படைகள் காபோன், லிப்ரவில் நகரைக் கைப்பற்றின.
1941ல் இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் “செர்வோனா உக்ரயீனா” மூழ்கடிக்கப்பட்டது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் வான்படை செருமனியின் திர்பித்சு போர்க்கப்பலை நோர்வே அருகில் குண்டுகள் வீசி மூழ்கடித்தது.
1948ல் டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு சப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
1956ல் மொரோக்கோ, சூடான், தூனிசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.
1956ல் சூயெசு நெருக்கடி: இசுரேலிய படைகள் காசாக்கரையில் ராஃபா என்ற இடத்தில் 111 பாலத்தீன அகதிகளைச் சுட்டுக் கொன்றனர்.
1969ல் வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் எர்சு வெளியிட்டார்.
1970ல் போலா சூறாவளி கிழக்குப் பாக்கித்தானைத் (இன்றைய வங்காளதேசம்) தாக்கியதில் 500.000 பேர் வரை இறந்தனர்.
1975ல் கொமொரோசு ஐநாவில் இணைந்தது.
1980ல் நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
1981ல் கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.
1982ல் லியோனீது பிரெசுனேவ் இறந்ததை அடுத்து, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.
1982ல் போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.
1989ல் தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.
1990ல் இளவரசர் அக்கிகித்தோ சப்பானின் 125-வது பேரரசராக முடிசூடினார்.
1990ல் இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை டிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.
1991ல் கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
1994ல் இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
1995ல் குரோவாசிய விடுதலைப் போரை அமைதியாக முடிவுக்குக் கொண்டுவர எர்தூத் உடன்பாடு எட்டப்பட்டது.
1996ல் சவூதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்கசுத்தானின் இலியூசின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் உயிரிழந்தனர்.
1999ல் துருக்கியின் வடமேற்கே இடம்பெற்ற 7.2 அளவு நிலநடுக்கத்தில் 845 பேர் உயிரிழந்தனர்.
2001ல் நியூயோர்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.
2001ல் ஆப்கானித்தானில் வடக்குக் கூட்டணி படைகள் முன்னேறியதை அடுத்து, காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.
2006ல் முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.
2011ல் ஈரானில் ஏவுகணைத் தளம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.
2014ல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ரொசெட்டா விண்கலத்தில் இருந்து இறக்கப்பட்ட பிலே விண்கலம் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியில் தரையிறங்கியது.
2015ல் பெய்ரூத் நகரில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைத் தாக்குதல்களில் 43 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
2017ல் ஈரானில் ஈராக் எல்லைப் பகுதியில் கெர்மான்சா மாகாணத்தில் இடம்பெற்ற 7.3 அளவு நிலநடுக்கத்தில் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 8,100 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 12-11 | November 12

1817ல் பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகரான‌ பகாவுல்லா பிறந்த நாள். (இறப்பு-1892)
1819ல் பிரித்தானிய மொழியியலாளரான‌ மானியர் வில்லியம்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1899)
1840ல் பிரான்சிய சிற்பியான‌ ஆகுஸ்ட் ரொடான் பிறந்த நாள். (இறப்பு-1917)
1842ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளரான‌ சான் வில்லியம் ஸ்ட்ரட் பிறந்த நாள். (இறப்பு-1919)
1866ல் சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவரான‌ சுன் இ சியன் பிறந்த நாள். (இறப்பு-1925)
1879ல் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான‌ சே. ப. இராமசுவாமி பிறந்த நாள். (இறப்பு-1966)
1896ல் இந்திய இயற்கையியலாளரான‌ சலீம் அலி பிறந்த நாள். (இறப்பு-1987)
1918ல் இந்திய கல்வியாளரும் அரசியல்வாதியுமான‌ சிறீபதி சந்திரசேகர் பிறந்த நாள். (இறப்பு-2001)
1920ல் தமிழக எழுத்தாளரான வல்லிக்கண்ணன் பிறந்த நாள். (இறப்பு-2006)
1926ல் இலங்கை அரசியல்வாதியான‌ எம். எஸ். செல்லச்சாமி பிறந்த நாள். (இறப்பு-2020)
1934ல் அமெரிக்க மதக்குழுத் தலைவரான‌ சார்லஸ் மேன்சன் பிறந்த நாள். (இறப்பு-2017)
1947ல் இலங்கை அரசியல்வாதியும் வடமாகாணத்தின் 5-வது ஆளுநருமான‌ ரெஜினால்ட் குரே பிறந்த நாள்.
1948ல் ஈரானின் 7வது அரசுத்தலைவரான‌ அசன் ரவ்கானி பிறந்த நாள்.
1961ல் உருமேனிய சீருடற்பயிற்சியாளரான‌ நாடியா கொமனட்சி பிறந்த நாள்.
1971ல் சீன-அமெரிக்க செயற்பாட்டாளரான சென் குவாங்செங் பிறந்த நாள்.
1982ல் அமெரிக்க நடிகையான‌ ஆன் ஹாத்தவே பிறந்த நாள்.
1985ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ சனம் ஷெட்டி பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 12-11 | November 12

1623ல் இலித்துவேனியப் பேராயரான‌ யோசபாத்து இறப்பு நாள். (பிறப்பு-1582)
1916ல் அமெரிக்க வானியலாளரும் கணிதவியலாளருமான பெர்சிவால் உலோவெல் இறப்பு நாள். (பிறப்பு-1855)
1946ல் இந்திய அரசியல்வாதியான‌ மதன் மோகன் மாளவியா இறப்பு நாள். (பிறப்பு-1861)
1969ல் சீனக் குடியரசின் 2வது அரசுத்தலைவரான‌ லு சாஃவ்சி இறப்பு நாள். (பிறப்பு-1898)
1994ல் அமெரிக்க தடகள விளையாட்டு வீரரான‌ வில்மா ருடோல்ஃப் இறப்பு நாள். (பிறப்பு-1940)
1997ல் தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் பதிப்பாளருமான‌ கண. முத்தையா இறப்பு நாள். (பிறப்பு-1913)
2001ல் அமெரிக்க இந்துத் துறவியான‌ சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி இறப்பு நாள். (பிறப்பு-1927)
2005ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான‌ மது தண்டவதே இறப்பு நாள். (பிறப்பு-1924)
2015ல் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ ஈ. எல். ஆதித்தன் இறப்பு நாள்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 11
Next articleNovember 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 13