November 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 13

0

Today Special Historical Events In Tamil | 13-11 | November 13

November 13 Today Special | November 13 What Happened Today In History. November 13 Today Whose Birthday (born) | November-13st Important Famous Deaths In History On This Day 13/11 | Today Events In History November 13th | Today Important Incident In History | கார்த்திகை 13 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 13-11 | கார்த்திகை மாதம் 13ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 13.11 Varalatril Indru Nadanthathu Enna| November 13 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 13/11 | Famous People Born Today 13.11 | Famous People died Today 13-11.

Today Special in Tamil 13-11
Today Events in Tamil 13-11
Famous People Born Today 13-11
Famous People died Today 13-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 13-11 | November 13

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 13-11 | November 13

1002ல் இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).
1093ல் ஆல்ன்விக் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் இசுக்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்க்கம், அவரது மகன் எட்வர்டு ஆகியோர் கொல்லப்பட்டனர்.
1775ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: ரிச்சார்ட் மொன்ட்கோமெரி தலைமையிலான புரட்சிப் படையினர் மொண்ட்ரியாலைக் கைப்பற்றினர்.
1795ல் கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1851ல் வாசிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.
1887ல் மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
1887ல் நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
1914ல் பர்பர் இனத்தவர்கள் மொரோக்கோவில் எல் எரி என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளுடன் மோதி அவர்களுக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணினர்.
1916ல் முதலாம் உலகப் போர்: இராணுவத்துக்குக் கட்டாய ஆள் சேர்ப்பை ஆதரித்தமைக்காக ஆத்திரேலியப் பிரதமர் பில்லி இயூசு தொழிற் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
1918ல் உதுமானியப் பேரரசின் தலைநகர் கான்ஸ்டண்டினோபில் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றின.
1927ல் நியூ செர்சியையும் நியூயார்க் நகரையும் அட்சன் ஆறு ஊடாக இணைக்கும் ஆலந்து சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் செருமனியின் யூ-81 கப்பலினால் தாக்கப்பட்டது. அடுத்த நாள் இது மூழ்கியது.
1946ல் இலங்கை அரசியல்வாதியும் விமானியுமான ஜே. பி. ஒபயசேகர தனது சொந்த ஒற்றை-இயந்திர வானூர்தியை இலண்டனில் இருந்து இரத்மலானைக்கு 7,000 மைல்கள் தூரம் செலுத்தி சாதனை படைத்தார்.
1947ல் சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்தனர். இதுவே உலகின் முதலாவது தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி ஆகும்.
1950ல் வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் கார்லோசு டெல்காடோ சால்போட் கரகசு நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1957ல் கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை.
1965ல் அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் உயிரிழந்தனர்.
1985ல் கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூசு என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர்.
1986ல் மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், மார்சல் தீவுகள் ஆகியன விடுதலை பெறுவதை உறுதிப்படுத்தும் சட்டமூலம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
1989ல் இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1993ல் யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
1993ல் தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.
1994ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.
1995ல் சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.
2012ல் முழுமையான சூரிய கிரகணம் ஆத்திரேலியாவிலும் தெற்கு பசிபிக் நாடுகளிலும் நிகழ்ந்தது.
2013ல் அவாய் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.
2015ல் பாரிசில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
2015ல் புவியின் செயற்கைக்கோள் டபிள்யூடி1190எஃப் இலங்கையின் தென்கிழக்கே வீழ்ந்தது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 13-11 | November 13

354ல் உரோமை இறையியலாளரான‌ ஹிப்போவின் அகஸ்டீன் பிறந்த நாள். (இறப்பு-430)
1312ல் இங்கிலாந்தின் மன்னரான‌ மூன்றாம் எட்வார்டு பிறந்த நாள். (இறப்பு-1377)
1780ல் சீக்கியப் பேரரசரான‌ ரஞ்சித் சிங் பிறந்த நாள். (இறப்பு-1839)
1850ல் இசுக்கொட்டிய எழுத்தாளரும் கவிஞருமான‌ ஆர். எல். இசுட்டீவன்சன் பிறந்த நாள். (இறப்பு-1894)
1895ல் பிரித்தானியப் படைத்துறை அதிகாரியான‌ ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை பிறந்த நாள். (இறப்பு-1967)
1899ல் சீன வரலாற்றாளரும் மானிடவியலாளருமான‌ ஹுவாங் சியான் புயான் பிறந்த நாள். (இறப்பு-1982)
1913ல் இலங்கை இயற்பியலாளரான‌ வி. அப்பாபிள்ளை பிறந்த நாள். (இறப்பு-2001)
1914ல் பிரான்சிய திரைப்பட ஆவணக் காப்பாளரான‌ என்றி லங்லொவைசு பிறந்த நாள். (இறப்பு-1977)
1923ல் இரீயூனியன் அரசியல்வாதியான‌ ஆல்பர்ட் ராமசாமி பிறந்த நாள்.
1933ல் தமிழகப் பத்திரிக்கையாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான‌ மோகன் ராம் பிறந்த நாள். (இறப்பு-1993)
1934ல் மலேசிய-ஆத்திரேலிய இசைக் கலைஞரான‌ கமால் கமலேஸ்வரன் பிறந்த நாள்.
1935ல் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியான‌ பி. சுசீலா பிறந்த நாள்.
1940ல் அமெரிக்க மெய்யியலாளரான‌ சவுல் கிரிப்கே பிறந்த நாள்.
1942ல் இந்திய அரசியல்வாதியான‌ அம்பிகா சோனி பிறந்த நாள்.
1947ல் இந்திய சுற்றுச்சூழலியலாளரான‌ அனில் அகர்வால் பிறந்த நாள். (இறப்பு-2002)
1947ல் அமெரிக்க இயற்பியலாளரான‌ அமோரி லோவின்சு பிறந்த நாள்.
1948ல் வங்காளதேச எழுத்தாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான‌ உமாயூன் அகமது பிறந்த நாள். (இறப்பு-2012)
1956ல் மலேசிய சமூக நீதியாளரான‌ அம்பிகா சீனிவாசன் பிறந்த நாள்.
1958ல் தமிழக எழுத்தாளரான‌ இந்திரா சௌந்தரராஜன் பிறந்த நாள்.
1967ல் இந்திய நடிகையான‌ ஜூஹி சாவ்லா பிறந்த நாள்.
1969ல் சோமாலிய-அமெரிக்க எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான‌ அயான் கேர்சி அலி பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 13-11 | November 13

1916ல் ஆங்கிலேய எழுத்தாளரான‌ சாகி இறப்பு நாள். (பிறப்பு-1870)
1922ல் தமிழக நாடகக் கலைஞரான‌ நாடகாசிரியரான‌ சங்கரதாஸ் சுவாமிகள் இறப்பு நாள். (பிறப்பு-1867)
1987ல் கிழக்கிலங்கை அரசியல்வாதியான‌ ஏ. எல். அப்துல் மஜீத் இறப்பு நாள். (பிறப்பு-1933)
1989ல் இலங்கை கிளர்ச்சித் தலைவரும் அரசியல்வாதியுமான‌ ரோகண விஜேவீர இறப்பு நாள். (பிறப்பு-1943)
1996ல் ஆத்திரேலிய வானியற்பியலாளரான‌ உரோபெர்த்தா வைல் இறப்பு நாள். (பிறப்பு-1959)
2002ல் மலேசிய இதழாசிரியரான‌ கணபதி கணேசன் இறப்பு நாள். (பிறப்பு-1955)
2010ல் அமெரிக்க வானியலாளரான‌ ஆலன் சாந்தேகு இறப்பு நாள். (பிறப்பு-1926)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 12
Next articleஇன்றைய ராசி பலன் 29.09.2022 Today Rasi Palan 29-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!