Today Special Historical Events In Tamil | 11-11 | November 11
November 11 Today Special | November 11 What Happened Today In History. November 11 Today Whose Birthday (born) | November-11th Important Famous Deaths In History On This Day 11/11 | Today Events In History November 11th | Today Important Incident In History | கார்த்திகை 11 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 11-11 | கார்த்திகை மாதம் 11ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 11.11 Varalatril Indru Nadanthathu Enna| November 11 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 11/11 | Famous People Born Today 11.11 | Famous People died Today 11-11.
Today Special in Tamil 11-11
Today Events in Tamil 11-11
Famous People Born Today 11-11
Famous People died Today 11-11
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 11-11 | November 11
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (அங்கோலா, போர்த்துகலிடம் இருந்து 1975)
குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. (குரோவாசியா)
நினைவுகூரும் நாளாக கொண்டாடப்படுகிறது. (ஐக்கிய இராச்சியம், பொதுநலவாய நாடுகள்)
தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா)
குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. (மாலைத்தீவுகள்)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 11-11 | November 11
1100ல் இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் மன்னர் மூன்றாம் மால்க்கத்தின் மகள் மெட்டில்டாவை திருமணம் செய்தார்.
1028ல் பைசாந்தியப் பேரரசர் எட்டாம் கான்ஸ்டன்டைன் 66 கால ஆட்சியின் பின்னர் இறந்தார்.
1500ல் பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நாபொலி பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
1572ல் டைக்கோ பிராகி எசுஎன் 1572 என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பை அவதானித்தார்.
1673ல் உக்ரைனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-இலித்துவேனியப் படைகள் உதுமானிய இராணுவத்தைத் தோற்கடித்தன.
1675ல் குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவாகப் பொறுப்பேற்றார்.
1675ல் கோட்பிரீட் லைப்னிட்ஸ் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக தொகையீட்டு நுண்கணிதத்தைப் பயன்படுத்தினார்.
1778ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: செனெக்கா பழங்குடிகள் மத்திய நியூயார்க்கில் குடியேறிகள், படையினர் உட்பட 40 பேரைக் கொன்றனர்.
1813ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: கிறிசுலர் பண்ணையில் இடம்பெற்ற போரில், பிரித்தானிய, கனடியப் படைகள் அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
1831ல் அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர் வர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டார்.
1865ல் டீஸ்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
1869ல் பழங்குடியினரின் சம்பளம், வேலை, எங்கு அவர்களும் அவர்களது பிள்ளைகளும் எங்கு வசிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் விக்டோரிய பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் ஆத்திரேலியாவில் கொண்டு வரப்பட்டது. இது பின்னர் திருடப்பட்ட தலைமுறைகளுக்கு வழிவகுத்தது.
1887ல் ஹேமார்க்கெட் படுகொலை: ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
1889ல் வாசிங்டன் அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1909ல் அவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
1918ல் பிரான்சில் “கொம்பியேன் காடு” என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் செருமனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
1918ல் யோசப் பித்சூத்ஸ்கி வார்சாவுக்குத் திரும்பி போலந்தின் உயர் இராணுவப் பதவியைப் பெற்றான். போலந்து விடுதலை பெற்றது.
1919ல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
1923ல் தோல்வியில் முடிந்த புரட்சியை அடுத்து இட்லர் மியூனிக் நகரில் கைது செய்யப்பட்டார்.
1930ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1933ல் யாழ் பொது நூல் நிலையம் திறக்கப்பட்டது.
1940ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச கடற்படை முதல் தடவையாக போர்க் கப்பல்களுக்கிடையேயான தாக்குதலை மேற்கொண்டது.
1960ல் தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1965ல் ரொடீசியாவில் (இன்றைய சிம்பாப்வே), இயன் சிமித் தலைமையிலான வெள்ளையின சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது.
1966ல் நாசா ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
1967ல் வியட்நாம் போர்: கம்போடியாவில் மூன்று அமெரிக்கப் போர்க் கைதிகள் வியட் கொங் படைகளால் விடுவிக்கப்பட்டனர்.
1968ல் மாலைதீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
1975ல் ஆத்திரேலியாவில் ஆளுநர் சர் ஜோன் கெர் கஃப் விட்லமின் அரசைக் கலைத்து மால்கம் பிரேசரை இடைக்காலப் பிரதமராக அறிவித்தார்.
1975ல் அங்கோலா போர்த்துகலிடம் இருந்து விடுதலை பெற்றது.
1981ல் அன்டிகுவா பர்புடா ஐக்கிய நாடுகள் அவையின் இணைந்தது.
1992ல் இங்கிலாந்து திருச்சபை பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.
2000ல் ஆஸ்திரியாவில் இழுவை ஊர்தி ஒன்று தீப்பிடித்ததில் 155 பேர் உயிரிழந்தனர்.
2004ல் யாசிர் அரஃபாத் இனந்தெரியாத காரணங்களால் உயிரிழந்ததை பலத்தீன விடுதலை இயக்கம் உறுதி செய்தது. மகுமுது அப்பாசு தலைவரானார்.
2012ல் மியான்மரில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில், 26 பேர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 11-11 | November 11
1821ல் உருசிய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கி பிறந்த நாள். (இறப்பு-1881)
1847ல் பிரித்தானியக் கட்டிடக் கலைஞரான பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1900)
1875ல் அமெரிக்க வானியலாளரான வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் பிறந்த நாள். (இறப்பு-1969)
1885ல் இந்தியாவின் பெண்கள் தொழிலாளரும் இயக்கத்தின் முன்னோடியுமான அனுசுயா சாராபாய் பிறந்த நாள். (இறப்பு-1972)
1888ல் இந்திய அரசியல்வாதியான அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள். (இறப்பு-1958)
1888ல் இந்திய அரசியல்வாதியான ஆச்சார்ய கிருபளானி பிறந்த நாள். (இறப்பு-1982)
1899ல் தமிழறிஞரான கி. ஆ. பெ. விசுவநாதம் பிறந்த நாள். (இறப்பு-1994)
1908ல் இந்திய எழுத்தாளரும் பதிப்பாளருமான பி. எஸ். பாலிகா பிறந்த நாள். (இறப்பு-1958)
1909ல் இறைக்கதை சொற்பொழிவாளரான எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார் பிறந்த நாள். (இறப்பு-1991)
1911ல் தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகையும் முதல் பெண் இயக்குநருமான டி. பி. ராஜலட்சுமி பிறந்த நாள். (இறப்பு-1964)
1917ல் இந்திய அரசியல்வாதியான மரகதம் சந்திரசேகர் பிறந்த நாள். (இறப்பு-2001)
1921ல் தென்னிந்திய இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகரும் கருநாடக இசைக் கலைஞருமான எஸ். தட்சிணாமூர்த்தி பிறந்த நாள். (இறப்பு-2012)
1922ல் அமெரிக்க எழுத்தாளரான கர்ட் வானெகெட் பிறந்த நாள். (இறப்பு-2007)
1937ல் ஈழத்து எழுத்தாளரான ப. ஆப்டீன் பிறந்த நாள்.
1937ல் கனடிய அரசியல்வாதியான இசுரீபன் லூவிசு பிறந்த நாள்.
1943ல் இந்திய அணு அறிவியலாளரான அனில் காகோட்கர் பிறந்த நாள்.
1945ல் நிக்கராகுவா அரசுத்தலைவரான டானியல் ஒர்ட்டேகா பிறந்த நாள்.
1955ல் பூட்டான் மன்னரான ஜிக்மே சிங்கே வாங்சுக் பிறந்த நாள்.
1957ல் இலங்கை-ஆத்திரேலியப் புதின எழுத்தாளரான மிசேல் டி கிரெட்சர் பிறந்த நாள்.
1960ல் இலங்கை எழுத்தாளரும் நூலாசிரியரும் வெளியீட்டாளருமான பீ. எம். புன்னியாமீன் பிறந்த நாள். (இறப்பு-2016)
1963ல் தமிழக நடிகரான பொன்னம்பலம் பிறந்த நாள்.
1974ல் அமெரிக்க நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ பிறந்த நாள்.
1989ல் தமிழ்த் திரைப்பட நடிகரான அசோக் செல்வன் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 11-11 | November 11
683ல் 2-ஆம் கலீபாவான முதலாம் யசீத் இறப்பு நாள். (பிறப்பு-647)
1831ல் அமெரிக்கக் கிளர்ச்சித் தலைவரான நாட் டர்னர் இறப்பு நாள். (பிறப்பு-1800)
1880ல் அமெரிக்க செயற்பாட்டாளரான லுக்ரிடியா மோட் இறப்பு நாள். (பிறப்பு-1793)
1917ல் அவாய் அரசியான லில்லியுகலானி இறப்பு நாள். (பிறப்பு-1838)
1993ல் தமிழீழ விடுதலைப் புலிப் போராளியான கப்டன் மயூரன் இறப்பு நாள். (பிறப்பு-1970)
1995ல் தமிழக எழுத்தாளரும் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான சுந்தா இறப்பு நாள். (பிறப்பு-1913)
1999ல் தமிழக அரசியல்வாதியுமான சத்தியவாணி முத்து இறப்பு நாள். (பிறப்பு-1923)
2004ல் பாலத்தீனத் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான யாசிர் அரஃபாத் இறப்பு நாள். (பிறப்பு-1929)
2005ல் ஆத்திரிய-அமெரிக்க எழுத்தாளரான பீட்டர் டிரக்கர் இறப்பு நாள். (பிறப்பு-1909)
2016ல் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான கே. சுபாஷ் இறப்பு நாள்.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan