November 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 10

0

Today Special Historical Events In Tamil | 10-11 | November 10

November 10 Today Special | November 10 What Happened Today In History. November 10 Today Whose Birthday (born) | November-10th Important Famous Deaths In History On This Day 10/11 | Today Events In History November 10th | Today Important Incident In History | கார்த்திகை 10 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 10-11 | கார்த்திகை மாதம் 10ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 10.11 Varalatril Indru Nadanthathu Enna| November 10 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 10/11 | Famous People Born Today 10.11 | Famous People died Today 10-11.

Today Special in Tamil 10-11
Today Events in Tamil 10-11
Famous People Born Today 10-11
Famous People died Today 10-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 10-11 | November 10

வெற்றி வீரர் நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்தோனேசியா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 10-11 | November 10

1202ல் நான்காம் சிலுவைப் போர்: திருத்தந்தை மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை வீரர்கள் சாரா நகர் மீது (இன்றைய குரோவாசியாவில்) தாக்குதல் தொடுத்தனர்.
1293ல் ராடன் விஜயன் சாவகத்தின் மயாபாகித்து இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார்.
1444ல் அங்கேரி-போலந்து மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
1580ல் மூன்று நாள் முற்றுகையை அடுத்து, ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட 600 திருத்தந்தை நாடுகளின் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் அயர்லாந்தில் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தது.
1659ல் பிரதாப்கர் சமரில் மராத்தியப் பேரரசர் சிவாஜி பிஜப்பூர் சுல்தானகத்தின் தளபதி அப்சல் கானைக் கொன்றார்.
1674ல் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: நெதர்லாந்து கிழக்கு அமெரிக்காவில் நியூ நெதர்லாந்து குடியேற்றத்தை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.
1775ல் ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு பிலடெல்பியாவில் அமைக்கப்பட்டது.
1847ல் 110 பேருடன் சென்ற இசுடீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் உயிரிழந்தனர்.
1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தின் சிறைச்சாலை அதிகாரி என்றி விர்சு போர்க்குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டார்.
1871ல் காணாமல் போனதாகக் கருதப்பட்ட இசுக்காட்லாந்தின் நாடுகாண் பயணியும் மதப்பரப்புனருமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான என்றி மோர்ட்டன் இசுட்டான்லி அறிவித்தார்.
1918ல் யாழ்ப்பாண நகரில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல புடவைக் கடைகள் சூறையாடப்பட்டன. பலர் காயமடைந்தனர். அடுத்த இரு நாட்களில் இக்கலவரம் , சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களுக்கும் பரவியது.
1940ல் உருமேனியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 1,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1944ல் அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் மானுசுத் தீவில் வெடித்ததில் 432 பேர் உயிரிழந்தனர்.
1945ல் சுராபாயாவில் இந்தோனேசிய தேசியவாதிகளுக்கும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுத் திரும்பிய குடியேற்றவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்தது. இந்நாள் இங்கு வெற்றி வீரர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1970ல் வியட்நாம் போர்: முதல் தடவையாக ஐந்து ஆண்டுகளில் தென்கிழக்காசியாவில் அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகளற்ற வாரமாக இருந்தது.
1970ல் சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு “லூனாகோட்” எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
1971ல் கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் நோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று ஒன்பது விமானங்களை அழித்தனர்.
1972ல் அமெரிக்கா, பர்மிங்காமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு கியூபா, அவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
1975ல் 729-அடி-நீள எட்மண்ட் பிட்செரால்சு என்ற சரக்குக் கப்பல் புயலில் சிக்கி சுப்பீரியர் ஏரியில் மூழ்கியதில், அதிலிருந்த அனைத்து 29 மாலுமிகளும் இறந்தனர்.
1975ல் இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: சீயோனிசம் என்பதும் ஒரு வகை இனவாதம் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.
1979ல் வெடி மருந்துகளையும், நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற 106-பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்குத் தொடருந்து ஒன்று ஒண்டாரியோவில் மிசிசாவுகா என்ற இடத்தில் தடம்புரண்டு வெடித்தது. வட அமெரிக்காவில் மிகப் பெரும் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது.
1983ல் விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது.
1989ல் பல்கேரியாவின் நீண்ட-கால அரசுத்தலைவர் தோதர் சீவ்கொவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, பீட்டர் மிளாதேனொவ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
1989ல் செருமானியர் பெர்லின் சுவரை இடிக்க ஆரம்பித்தனர்.
1993ல் தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
1995ல் நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ விவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.
1999ல் பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
2006ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
2008ல் செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 10-11 | November 10

1483ல் கிறித்தவச் சீர்த்திருத்த இயக்கத் தலைவரான‌ செர்மானிய மதகுரு மார்ட்டின் லூதர் பிறந்த நாள். (இறப்பு-1546)
1697ல் ஆங்கிலேய ஓவியரான‌ வில்லியம் ஹோகார்த் பிறந்த நாள். (இறப்பு-1764)
1759ல் செருமானியக் கவிஞரான‌ பிரெடிரிக் சில்லர் பிறந்த நாள். (இறப்பு-1805)
1848ல் இந்திய அரசியல்வாதியும் கல்வியாளருமான‌ சுரேந்திரநாத் பானர்ஜி பிறந்த நாள். (இறப்பு-1925)
1905ல் பிரித்தானிய இயற்பிலாளரான‌ லூயி ஹெரால்டு கிரே பிறந்த நாள். (இறப்பு-1965)
1906ல் இந்தியக் கணிதவியலாளரான‌ வி. கணபதி அய்யர் பிறந்த நாள். (இறப்பு-1987)
1906ல் வங்காள எழுத்தாளரான‌ பாபானி பட்டாச்சாரியா பிறந்த நாள். (இறப்பு-1988)
1910ல் தமிழக எழுத்தாளரும் நடிகரும் கவிஞருமான‌ கொத்தமங்கலம் சுப்பு பிறந்த நாள். (இறப்பு-1974)
1910ல் தமிழக எழுத்தாளரான‌ சாண்டில்யன் பிறந்த நாள். (இறப்பு-1987)
1916ல் தமிழறிஞரும் இலக்கிய விமர்சகருமான‌ அ. ச. ஞானசம்பந்தன் பிறந்த நாள். (இறப்பு-2002)
1917ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ சோ. தம்பிராஜா பிறந்த நாள்.
1918ல் இந்திய அரசியல்வாதியான‌ சுந்தர் லால் குரானா பிறந்த நாள்.
1919ல் ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்த உருசியரான‌ மிக்கைல் கலாசுனிக்கோவ் பிறந்த நாள். (இறப்பு-2013)
1920ல் இந்துத்துவாதியும் தொழிற்சங்கத் தலைவருமான‌ தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி பிறந்த நாள். (இறப்பு-2004)
1934ல் இலங்கைக் கல்வியாளரும் பொறியியலாளருமான‌ அ. துரைராஜா பிறந்த நாள். (இறப்பு-1994)
1934ல் இந்திய அரசியல்வாதியான‌ கேசரிநாத் திரிபாதி பிறந்த நாள்.
1935ல் உருசிய வானியலாளரான‌ ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கொவ் பிறந்த நாள்.
1939ல் சீனக் கணிதவியலாளரான‌ யாங் லி பிறந்த நாள்.
1953ல் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதியான‌ எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா பிறந்த நாள். (இறப்பு-2014)
1957ல் இலங்கை அரசியல்வாதியும் துணை இராணுவக்குழுத் தலைவருமான‌ டக்ளஸ் தேவானந்தா பிறந்த நாள்.
1958ல் தமிழகத் திரைப்பட நடிகரான‌ ஆனந்த் ராஜ் பிறந்த நாள்.
1960ல் ஆங்கிலேய எழுத்தாளரான‌ நீல் கெய்மென் பிறந்த நாள்.
1989ல் ஆங்கிலேய நடிகரான‌ தரோன் எகேர்டன் பிறந்த நாள்.
1994ல் அமெரிக்க நடிகையான‌ சோயி டொச் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 10-11 | November 10

461ல் திருத்தந்தையான‌ முதலாம் லியோ இறப்பு நாள். (பிறப்பு-400)
1549ல் திருத்தந்தையான‌ மூன்றாம் பவுல் இறப்பு நாள். (பிறப்பு-1468)
1848ல் எகிப்தியத் தளபதியான‌ இப்றாகீம் பாசா இறப்பு நாள். (பிறப்பு-1789)
1891ல் பிரான்சியக் கவிஞரான‌ ஆர்தர் ராம்போ இறப்பு நாள். (பிறப்பு-1854)
1938ல் துருக்கியின் 1வது அரசுத்தலைவரான‌ முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் இறப்பு நாள். (பிறப்பு-1881)
1977ல் தமிழக எழுத்தாளரும் இதழாசிரியருமான‌ தமிழ்வாணன் இறப்பு நாள். (பிறப்பு-1926)
1982ல் சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவருமான‌ லியோனீது பிரெசுனேவ் இறப்பு நாள். (பிறப்பு-1906)
1995ல் நைஜீரிய எழுத்தாளரான‌ கென் சரோ விவா இறப்பு நாள். (பிறப்பு-1941)
2006ல் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான‌ நடராஜா ரவிராஜ் இறப்பு நாள். (பிறப்பு-1962)
2013ல் தமிழக எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான‌ புஷ்பா தங்கதுரை இறப்பு நாள். (பிறப்பு-1931)
2014ல் சமூக ஆய்வாளரும் பேராசிரியருமான‌ எம். எஸ். எஸ். பாண்டியன் இறப்பு நாள்.
2019ல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரான‌ டி. என். சேஷன் இறப்பு நாள். (பிறப்பு-1932)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 09
Next articleNovember 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 11