November 05 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 05

0

Today Special Historical Events In Tamil | 05-11 | November 05

November 05 Today Special | November 05 What Happened Today In History. November 05 Today Whose Birthday (born) | November-05th Important Famous Deaths In History On This Day 05/11 | Today Events In History November 05th | Today Important Incident In History | கார்த்திகை 05 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 05-11 | கார்த்திகை மாதம் 05ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 05.11 Varalatril Indru Nadanthathu Enna| November 05 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 05/11 | Famous People Born Today 05.11 | Famous People died Today 05-11.

Today Special in Tamil 05-11
Today Events in Tamil 05-11
Famous People Born Today 05-11
Famous People died Today 05-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 05-11 | November 05

கை பாக்சு இரவாக‌ கொண்டாடப்படுகிறது. (ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், கனடா)
உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 05-11 | November 05

1138ல் லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
1530ல் நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.
1556ல் இரண்டாம் பானிபட் போர்: முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது.
1605ல் வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. கை பாக்சு கைது செய்யப்பட்டான்.
1688ல் இடச்சுக் கடற்படைக் கப்பல்களுடன் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் பிரிசுகாம் நகரை வந்தடைந்தான்.
1757ல் ஏழாண்டுப் போர்: புருசியப் பேரரசர் பிரெடெரிக் பிரான்சு மற்றும் புனித உரோமைப் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொசுபாக் என்ற இடத்தில் தோற்கடித்தார்.
1795ல் இலங்கையின் வடமேற்கே கற்பிட்டி நகரை சேர் ஜோன் பௌசர் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1814ல் இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.
1831ல் ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
1862ல் அமெரிக்கா, மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 38 பேர் தூக்கிலிடப்பட்டனர்..
1872ல் அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமைக்காகப் போராடிய சூசன் பிரவுன் அந்தோனி முதல் தடவையாக வாக்களித்தார். இதனால் இவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.
1895ல் தானுந்துக்கான முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்.
1898ல் பிலிப்பீன்சு, நெக்ரோசு தீவில் எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு, நெக்ரோசு குடியரசை நிறுவினர்.
1911ல் செப்டம்பர் 29 இல் உதுமானியப் பேரரசுக்கு எதிராகப் போரை அறிவித்த இத்தாலி திரிப்பொலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1912ல் ஊட்ரோ வில்சன் அமெரிக்காவின் 28-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1914ல் முதலாம் உலகப் போர்: பிரான்சும் பிரித்தானியப் பேரரசும் உதுமானியப் பேரரசு ம் ஈது போர் தொடுத்தன.
1916ல் போலந்து இராச்சியம் செருமனி, மற்றும் ஆத்திரியா-அங்கேரி பேரரசர்களினால் அறிவிக்கப்பட்டது.
1916ல் வாசிங்டன், எவெரெட் என்ற இடத்தில் தொழிலாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றதில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1917ல் விளாதிமிர் லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
1917ல் அக்டோபர் புரட்சி: எசுத்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார். (பழைய நாட்காட்டியில் [அக்டோபர் 27]]).
1925ல் சிட்னி ரெய்லி என்ற இரகசிய உளவாளி சோவியத் ஒன்றியத்தில் இரகசியக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1940ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய சைராணுவ சரக்குக் கப்பல் யார்விசு பே செருமனியின் போர்க்கப்பலால் தாக்கப்பட்டு மூழகடிக்கப்பட்டது.
1940ல் பிராங்க்ளின் ரூசவெல்ட் மூன்றாவது தடவையாக அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை தேர்ந்டுக்கப்பட்ட ஒரேயொரு அரசுத்தலைவர் இவரேயாவார்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: வத்திக்கான் மீது தாக்குதல் தொடங்கியது.
1945ல் சுபாசு சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை தில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.
1965ல் ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
1970ல் வியட்நாம் போர்: வியட்நாமில் அமெரிக்கப் படையினரின் ஒரு வார உயிரிழப்புகள் (24) கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவானது என வியட்நாம் இராணுவ உதவிக் கட்டளையகம் அறிவித்தது.
1971ல் இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.
1995ல் கனடா பிரதமர் சான் சிரேட்டியன் மீது கொலை முயற்சி இடம்பெற்றது.
1996ல் பாக்கித்தான் சனாதிபதி பாரூக் லெகாரி பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.
1999ல் இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
2006ல் 148 சியா முசுலிம்களை 1982-இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அரசுத்தலைவர் சதாம் உசேனுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
2007ல் ஆண்ட்ராய்டு செல்பேசி இயங்குதளம் வெளியிடப்பட்டது.
2009ல் டெக்சசு மாநிலத்தில் அமெரிக்க இராணுவ மேஜர் நைடல் மாலிக் அசனின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், 32 காயமடைந்தனர்.
2013ல் இந்தியா செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தைத் தொடங்கியது.
2017ல் அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் கிறித்தவக் கோவில் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்க்சி சூட்டில் 26 கொல்லப்பட்டு, மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 05-11 | November 05

1790ல் செருமானிய கிறித்தவ மதப் பரப்புனரும் தமிழறிஞருமான‌ சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் பிறந்த நாள். (இறப்பு-1838)
1870ல் இந்திய அரசியல்வாதியான‌ சித்தரஞ்சன் தாஸ் பிறந்த நாள். (இறப்பு-1925)
1885ல் அமெரிக்க வரலாற்றாளரும் மெய்யியலாளருமான‌ வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட் பிறந்த நாள். (இறப்பு-1981)
1888ல் தமிழகத் தமிழறிஞரான‌ கா. சு. பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1945)
1892ல் ஆங்கிலேய-இந்திய உயிரியலாளரான‌ ஜே. பி. எஸ். ஹால்டேன் பிறந்த நாள். (இறப்பு-1964)
1906ல் அமெரிக்க வானியலாளரான‌ பிரெட் இலாரன்சு விப்பிள் பிறந்த நாள். (இறப்பு-2004)
1913ல் இந்திய-பிரித்தானிய நடிகையான‌ விவியன் லீ பிறந்த நாள். (இறப்பு-1967)
1916ல் ஈழத்து எழுத்தாளரும் தமிழறிஞருமான‌ கனக செந்திநாதன் பிறந்த நாள். (இறப்பு-1977)
1918ல் ஈழத்துத் தமிழறிஞரும் புலவருமான‌ க. வேந்தனார் பிறந்த நாள். (இறப்பு-1966)
1927ல் சப்பானிய புள்ளிவிபரவியலாளரான‌ கிர்ரோடுகு அகேய்கே பிறந்த நாள். (இறப்பு-2009)
1930ல் இந்திய அரசியல்வாதியான‌ அர்ஜுன் சிங் பிறந்த நாள். (இறப்பு-2011)
1930ல் இலங்கை வானொலி மற்றுன் பிபிசி தமிழோசை அறிவிப்பாளரான‌ சுந்தா சுந்தரலிங்கம் பிறந்த நாள். (இறப்பு-2001)
1930ல் இந்திய மகப்பேறு மருத்துவரான‌ பூ. பழனியப்பன் பிறந்த நாள்.
1948ல் அமெரிக்க அரசியல்வாதியான பாப் பார் பிறந்த நாள்.
1952ல் இந்திய மெய்யியலாளரும் எழுத்தாளருமான‌ வந்தனா சிவா பிறந்த நாள்.
1955ல் இந்திய ஊடகவியலாளருமான‌ கரண் தபார் பிறந்த நாள்.
1959ல் கனடியப் பாடகரும் நடிகருமான‌ பிரையன் ஆடம்ஸ் பிறந்த நாள்.
1965ல் டச்சு நடிகையான‌ பாம்கே ஜான்சென் பிறந்த நாள்.
1968ல் ஈழத்துக் கருநாடக இசைப் பாடகரும் மிருதங்கக் கலைஞருமான‌ வர்ண ராமேஸ்வரன் பிறந்த நாள். (இறப்பு-2021)
1987ல் கனடிய பாடகரும் நடிகருமான‌ கெவின் கோனாஸ் (ஜோனாஸ் சகோதரர்கள்) பிறந்த நாள்.
1988ல் இந்தியத் துடுப்பாளரான விராட் கோலி பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 05-11 | November 05

1526ல் இத்தாலியக் கணிதவியலாளரான‌ டெல் ஃபெர்ரோ இறப்பு நாள். (பிறப்பு-1465)
1860ல் இலங்கை தமிழறிஞரும் அகராதியியலாளருமான‌ அரசியல்வாதியுமான‌ சைமன் காசிச்செட்டி இறப்பு நாள். (பிறப்பு-1807)
1879ல் இசுக்கொட்டிய-ஆங்கிலேய இயற்பியலாளரான‌ ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் இறப்பு நாள். (பிறப்பு-1831)
1944ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவரான‌ அலெக்சிஸ் காரெல் இறப்பு நாள். (பிறப்பு-1873)
1992ல் அமெரிக்க இயற்பியலாளரும் சதுரங்க ஆட்ட வீரருமான அர்பத் எலோ இறப்பு நாள். (பிறப்பு-1903)
1992ல் இடச்சு வானியலாளரான‌ ஜான் ஊர்த் இறப்பு நாள். (பிறப்பு-1900)
2002ல் தமிழக எழுத்தாளரான‌ கு. ப. சேது அம்மாள் இறப்பு நாள். (பிறப்பு-1908)
2008ல் அமெரிக்க மருத்துவரான‌ மைக்கேல் கிரைட்டன் இறப்பு நாள். (பிறப்பு-1942)
2011ல் இந்தியப் பாடகரும் இயக்குநருமான‌ பூபேன் அசாரிகா இறப்பு நாள். (பிறப்பு-1926)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 04 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 04
Next articleNovember 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 06