Today Special Historical Events In Tamil | 27-03 | March 27
March 27 Today Special | March 27 What Happened Today In History. March 27 Today Whose Birthday (born) | March-27th Important Famous Deaths In History On This Day 27/03 | Today Events In History March 27th | Today Important Incident In History | பங்குனி 27 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 27-03 | பங்குனி மாதம் 27ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 27.03 Varalatril Indru Nadanthathu Enna| March 27 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 27/03 | Famous People Born Today 27.03 | Famous People died Today 27-03.
Today Special in Tamil 27-03
Today Events in Tamil 27-03
Famous People Born Today 27-03
Famous People died Today 27-03
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 27-03 | March 27
உலக நாடக அரங்க நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 27-03 | March 27
1309ல் திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு வெனிசு நகரத்தில் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கி தடை விதித்தார்.
1513ல் நாடுகாண் பயணி யுவான் பொன்ஸ் டி லெயோன் புளோரிடாவிற்கு செல்லும் வழியில் பகாமாசின் வடக்கு முனையைச் சென்றடைந்தார்.
1625ல் முதலாம் சார்லசு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லாந்து மன்னராக முடி சூடியதுடன், பிரான்சு மன்னனாகவும் தன்னை அறிவித்தார்.
1794ல் அமெரிக்க அரசு நிரந்தரமான கடற்படையை அமைத்தது.
1814ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: மத்திய அலபாமாவில், அமெரிக்கப் படைகள் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் கிரீக்குகளைத் தோற்கடித்தனர்.
1836ல் டெக்சாசில் மெக்சிக்கோ இராணுவத்தினர் 342 டெக்சாசு போர்க்கைதிகளைக் கொன்றனர்.
1866ல் அமெரிக்க அரசுத்தலைவர் ஆண்ட்ரூ ஜோன்சன் குடிசார் உரிமைகள் சட்டத்துக்கு தனது வீட்டோ உரிமை மூலம் தடை விதித்தார். ஆனாலும் அவரது வீட்டோவை அமெரிக்க சட்டமன்றம் நீக்கி சட்டமூலத்தை ஏப்ரல் 9 இல் நடைமுறைப்படுத்தியது.
1886ல் அப்பாச்சி பழங்குடிப் போர்வீரர் யெரொனீமோ அமெரிக்க இராணுவத்திடம் சரணடைந்தார். அப்பாச்சி போர்கள் முடிவுக்கு வந்தது.
1890ல் கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் உயிரிழந்தனர்.
1899ல் பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: எமிலியோ அகுயினால்டோ மரிலாவோ ஆற்றில் நடந்த சமரில் பிலிப்பீனியப் படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டார்.
1915ல் குடற்காய்ச்சல் நோய்க்கிருமிகள் தொற்றிய டைஃபாய்டு மேரி என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவில் அச்சு அணி ஆதரவு அரசாங்கம் யுகோசுலாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: அலூசியன் தீவுகளில் அமெரிக்கக் கடற்படைக்கும் சப்பானுக்கும் இடையே சமர் ஆரம்பமானது.
1958ல் நிக்கிட்டா குருசேவ் சோவியத் தலைமை அமைச்சரானார்.
1964ல் வட அமெரிக்காவின் வரலாற்றில் அதி ஆற்றல் வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் உயிரிழந்தனர். ஏங்கரெஜ் நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.
1968ல் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார்.
1969ல் நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1970ல் கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.
1977ல் அமெரிக்காவின் இரண்டு போயிங் 747 பயணிகள் விமானங்கள் கேனரி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் உயிரிழந்தனர். 61 பேர் மீட்கப்பட்டனர்.
1980ல் நோர்வேயின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் உயிரிழந்தனர்.
1981ல் போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 12 மில்லியன் தொழிலாளர்கள் 4 மணி நேர பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1986ல் ஆத்திரேலியா, மெல்பேர்ண் நகரில் காவல்துறை தலைமையகத்தின் முன்னால் வாகனக் குண்டு வெடித்ததில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டு, 21 பேர் காயமடைந்தனர்.
1990ல் அமெரிக்கா காஸ்ட்ரோவிற்கு எதிரான கியூபாவிற்கான வானொலி பிரசார சேவையை ஆரம்பித்தது.
1993ல் யான் சமீன் சீனாவின் அரசுத்தலைவரானார்.
1998ல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆண்களின் விறைக்க முடியாமைக்கான சிகிச்சைக்காக வயாகராவை அனுமதித்தது.
1999ல் அமெரிக்க லொக்கீட் எப்-117 நைட்கோக் விமானத்தை யுகோசுலாவியா சாம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது.
2002ல் இசுரேல், நத்தானியாவில் பாலத்தீனர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
2002ல் பிரான்சு, நான்டேர் நகரில் நடைபெற்ற நகரசபைக் கூட்டம் ஒன்றை நோக்கி துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில், எட்டு நகரசபை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர், 19 பேர் காயமடைந்தனர்.
2009ல் இந்தோனேசியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
2014ல் பிலிப்பீன்சு அரசு மோரோ இசுலாமிய விடுதலை முன்னணிப் போராளிகளுடன் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தியது.
2016ல் லாகூர், குல்சன்-இ-இக்பால் பூங்காவில் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டத்தின் போது, தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 27-03 | March 27
347ல் உரோமை ஆயரும் இறையியலாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஜெரோம் பிறந்த நாள். (இறப்பு-420)
1845ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள். (இறப்பு-1923)
1847ல் நோபல் பரிசு பெற்ற யூத-செருமானிய வேதியியலாளரான ஓட்டோ வாலெக் பிறந்த நாள். (இறப்பு-1931)
1886ல் செருமானிய-அமெரிகக் கட்டிடக் கலைஞரான லுட்விக் மீஸ் வான் டெர் ரோ பிறந்த நாள். (இறப்பு-1969)
1892ல் யாழ் நூல் எழுதிய ஈழத்து தமிழறிஞரும் கவிஞரும் இறையியலாளருமான சுவாமி விபுலாநந்தர் பிறந்த நாள். (இறப்பு-1947)
1899ல் அமெரிக்க நடிகையும் தயாரிப்பாளருமான குளோரியா சுவான்சன் பிறந்த நாள். (இறப்பு-1983)
1910ல் சீனக் கவிஞரும் எழுத்தாளருமான அய் ஜிங் பிறந்த நாள். (இறப்பு-1996)
1945ல் அமெரிக்க இயற்பியலாளரான ஜெரால்ட் ஜே. டோலன் பிறந்த நாள். (இறப்பு-2008)
1948ல் ஈழத்து எழுத்தாளரும் மருத்துவருமான எம். கே. முருகானந்தன் பிறந்த நாள்.
1955ல் எசுப்பானியாவின் பிரதமரான மாரியானோ ரஜோய் பிறந்த நாள்.
1955ல் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான முல்லையூரான் பிறந்த நாள். (இறப்பு-2006)
1963ல் அமெரிக்கத் திரைப்பட இயக்குநரான குவெண்டின் டேரண்டினோ பிறந்த நாள்.
1985ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான ராம் சரண் பிறந்த நாள்.
1988ல் இலங்கை-நோர்வே அரசியல்வாதியான கம்சாயினி குணரத்தினம் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 27-03 | March 27
1378ல் திருத்தந்தையான பதினொன்றாம் கிரகோரி இறப்பு நாள். (பிறப்பு-1336)
1625ல் ஐக்கிய இராச்சியத்தின் மன்னரான முதலாம் யேம்சு இறப்பு நாள். (பிறப்பு-1566)
1898ல் இந்தியக் கல்வியாளரும் அரசியல்வாதியும் இதழாளரும் இசுலாமிய சீர்திருத்தவாதியுமான சையது அகமது கான் இறப்பு நாள். (பிறப்பு-1817)
1952ல் சப்பானியத் தொழிலதிபரான கீச்சிரோ டொயோடா இறப்பு நாள். (பிறப்பு-1894)
1968ல் உருசிய விண்வெளி வீரரான யூரி ககாரின் இறப்பு நாள். (பிறப்பு-1934)
1982ல் வங்காளதேச-அமெரிக்க கட்டிடக் கலைஞரான பச்லுர் ரகுமான் கான் இறப்பு நாள். (பிறப்பு-1929)
1998ல் அமெரிக்க உளவியலாளரான டேவிட் மெக்லிலேண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1917)
2005ல் இந்திய இயற்பியலாளரான ரஞ்சன் ராய் டேனியல் இறப்பு நாள். (பிறப்பு-1923)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan