March 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 26

0

Today Special Historical Events In Tamil | 26-03 | March 26

March 26 Today Special | March 26 What Happened Today In History. March 26 Today Whose Birthday (born) | March-26th Important Famous Deaths In History On This Day 26/03 | Today Events In History March 26th | Today Important Incident In History | பங்குனி 26 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 26-03 | பங்குனி மாதம் 26ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 26.03 Varalatril Indru Nadanthathu Enna| March 26 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 26/03 | Famous People Born Today 26.03 | Famous People died Today 26-03.

Today Special in Tamil 26-03
Today Events in Tamil 26-03
Famous People Born Today 26-03
Famous People died Today 26-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 26-03 | March 26

விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பாக்கித்தானிடமிருந்து 1971)
மாவீரர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மாலி)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 26-03 | March 26

590ல் பேரரசர் மவுரிசு தனது மகன் தியோடோசியசை பைசாந்தியப் பேரரசின் இணைப் பேரரசராக அறிவித்தார்.
1027ல் இரண்டாம் கொன்ராட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1169ல் சலாகுத்தீன் எகிப்தின் தளபதியாக (அமீர்) நியமிக்கப்பட்டார்.
1431ல் பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.
1484ல் வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
1552ல் குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது குருவானார்.
1812ல் வெனிசுவேலாவின் கரகஸ் நகர் 7.7 அளவு நிலநடுக்கத்தில் அழிந்தது.
1871ல் இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.
1872ல் கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
1913ல் முதலாம் பால்கன் போர்: பல்கேரியப் படைகள் ஆட்ரியானாபோல் நகரைக் கைப்பற்றின.
1917ல் முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்றம் சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.
1934ல் ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.
1939ல் எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் தமது இறுதித் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1942ல் இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுசுவிட்சு வதை முகாமிற்கு முதற்தடவையாக பெண் சிறைக்கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.
1945ல் இரண்டாம் உலகப் போர்: யப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.
1954ல் மார்சல் தீவுகளில் உள்ள பிக்கினி திட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
1958ல் ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.
1971ல் கிழக்கு பாகிஸ்தான் பாக்கித்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காளதேச விடுதலைப் போர் ஆரம்பமானது.
1979ல் அன்வர் சாதாத், மெனசெம் பெகின், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் வாசிங்டனில் எகிப்திய-இசுரேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1991ல் அர்கெந்தீனா, பிரேசில், உருகுவை, பரகுவை ஆகிய நாடுகள் தெற்கத்திய பொதுச் சந்தையை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1997ல் சுவர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.
1998ல் அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
2000ல் விளாடிமீர் பூட்டின் உருசியாவின் அரசுத்தலைவராகத் தெரிவானார்.
2005ல் தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.
2005ல் சீனாவின் பிரிவினைக்கு எதிரான சட்டத்திற்கெதிராக 200,000 முதல் 300,000 வரையான தாய்வான் மக்கள் தாய்பெய் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2006ல் மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.
2006ல் முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
2007ல் கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
2010ல் தென் கொரியாவின் கடற்படைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. 46 மாலுமிகள் உயிரிழந்தனர்.
2015ல் சவூதி அரேபியா யெமன் மீதான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இந்நடவடிக்கையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 26-03 | March 26

1874ல் அமெரிக்கக் கவிஞரான‌ இராபர்ட் புரொஸ்ட் பிறந்த நாள். (இறப்பு-1963)
1907ல் இந்தியக் கவிஞரும் செயற்பாட்டாளருமான‌ மகாதேவி வர்மா பிறந்த நாள். (இறப்பு-1987)
1910ல் இலங்கை அரசியல்வாதியான‌ கே. டபிள்யூ. தேவநாயகம் பிறந்த நாள். (இறப்பு-2002)
1913ல் அங்கேரிய-போலந்து கணிதவியலாளரான‌ பால் ஏர்டோசு பிறந்த நாள். (இறப்பு-1996)
1926ல் இலங்கை அரசியல்வாதியான‌ தா. சிவசிதம்பரம் பிறந்த நாள். (இறப்பு-1992)
1933ல் இத்தாலிய இயக்குநரான‌ டின்டோ பிராஸ் பிறந்த நாள்.
1940ல் அமெரிக்க அரசியல்வாதியான‌ நான்சி பெலோசி பிறந்த நாள்.
1941ல் உருசியக் கோட்பாட்டு இயற்பியலாளரான‌ விளாதிமிர் அலெக்சயெவிச் பெலின்சுகி பிறந்த நாள்.
1941ல் கென்ய-ஆங்கிலேய உயிரியலாளரான‌ ரிச்சர்ட் டாக்கின்சு பிறந்த நாள்.
1953ல் மலையாள இசையமைப்பாளரான‌ ஜான்சன் பிறந்த நாள். (இறப்பு-2011)
1959ல் சிங்கப்பூர் அரசியல்வாதியான‌ கா. சண்முகம் பிறந்த நாள்.
1965ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநருமான‌ பிரகாஷ் ராஜ் பிறந்த நாள்.
1973ல் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கரான‌ லாரி பேஜ் பிறந்த நாள்.
1979ல் ஆங்கிலேயப் பாடகரும் தயாரிப்பாளருமான‌ ஜெய் சான் பிறந்த நாள்.
1985ல் ஆங்கிலேய நடிகையான‌ கீரா நைட்லி பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 26-03 | March 26

1326ல் இத்தாலிய உடலியலாளாரும் மனித உடற்கூற்றியலாளருமான‌ அலெசாந்திரா கிலியானி இறப்பு நாள். (பிறப்பு-1307)
1797ல் இசுக்கொட்டிய நிலவியலாளரும் மருத்துவருமான‌ ஜேம்ஸ் கூட்டன் இறப்பு நாள். (பிறப்பு-1726)
1827ல் செருமானிய செவ்விசையமைப்பாளரான‌ லுடுவிக் ஃவான் பேத்தோவன் இறப்பு நாள். (பிறப்பு-1770)
1892ல் அமெரிக்கக் கவிஞரும் ஊடகவியலாளருமான‌ வால்ட் விட்மன் இறப்பு நாள். (பிறப்பு-1819)
1902ல் ஆங்கிலேய-தென்னாப்பிரிக்க அரசியல்வாதியும் கேப் குடியேற்றத்தின் 6வது பிரதமருமான‌ செசில் ரோட்சு இறப்பு நாள். (பிறப்பு-1853)
1907ல் ஈழத்துத் தமிழறிஞரான‌ நா. கதிரைவேற்பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1871)
1923ல் பிரான்சிய நடிகையான‌ சாரா பேர்ண்ஹார்ட் இறப்பு நாள். (பிறப்பு-1844)
1960ல் அமெரிக்கக் கதிர் மருத்துவரான‌ எமில் குருப்பே இறப்பு நாள். (பிறப்பு-1875)
1972ல் இலங்கை மார்க்சிய இடதுசாரி அரசியல்வாதியான‌ பிலிப் குணவர்தன இறப்பு நாள். (பிறப்பு-1901)
1977ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான‌ டி. வி. தாமஸ் இறப்பு நாள். (பிறப்பு-1910)
1991ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான‌ ஆர். சுதர்சனம் இறப்பு நாள். (பிறப்பு-1914)
2006ல் மலையாளக் கவிஞரான‌ குஞ்சுண்ணி இறப்பு நாள். (பிறப்பு-1927)
2013ல் தென்னிந்திய திரைப்பட நடிகையான‌ சுகுமாரி இறப்பு நாள். (பிறப்பு-1940)
2015ல் நோபல் பரிசு பெற்ற சுவீடியக் கவிஞரான‌ தோமசு திரான்சிட்ரோமர் இறப்பு நாள். (பிறப்பு-1931)
2020ல் ஈழத்து எழுத்தாளரான‌ நீர்வை பொன்னையன் இறப்பு நாள். (பிறப்பு-1930)
2020ல் தமிழகத் திரைப்பட நடிகரும் மருத்துவருமான‌ வி. சேதுராமன் இறப்பு நாள். (பிறப்பு-1982)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 19.10.2022 Today Rasi Palan 19-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next articleMarch 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 27