March 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 24

0

Today Special Historical Events In Tamil | 24-03 | March 24

March 24 Today Special | March 24 What Happened Today In History. March 24 Today Whose Birthday (born) | March-24th Important Famous Deaths In History On This Day 24/03 | Today Events In History March 24th | Today Important Incident In History | பங்குனி 24 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 24-03 | பங்குனி மாதம் 24ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 24.03 Varalatril Indru Nadanthathu Enna| March 24 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 24/03 | Famous People Born Today 24.03 | Famous People died Today 24-03.

Today Special in Tamil 24-03
Today Events in Tamil 24-03
Famous People Born Today 24-03
Famous People died Today 24-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 24-03 | March 24

மர நாளாக கொண்டாடப்படுகிறது. (உகாண்டா)
உலக காச நோய் நாளாக கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 24-03 | March 24

1401ல் மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார்.
1550ல் பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
1603ல் முதலாம் எலிசபெத் இறந்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் நான்காம் யேம்சு becomes James I of இங்கிலாந்து, அயர்லாந்தின் மன்னராக முதலாம் யேம்சு என்ற பெயரில் முடிசூடினார்.
1663ல் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்த உதவி செய்தமைக்காக கரொலைனா மாகாணக் குடியேற்றம் எட்டு பிரபுக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
1720ல் முதலாம் பிரெடெரிக் சுவீடனின் மன்னராக முடிசூடினார்.
1765ல் பெரிய பிரித்தானியா 13 குடியேற்றங்களிலும் தமது படையினரை நிறுத்த சட்டமூலம் நிறைவேற்றியது.
1829ல் கத்தோலிக்கர் நாடாளுமன்றத்தில் பணியாற்ற அனுமதித்து பிரித்தானிய நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது.
1832ல் அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில், மோர்மொன் தலைவர் இரண்டாம் யோசப்பு இசுமித்து கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டார்.
1837ல் கனடாசில் ஆப்பிரிக்கக் கனடியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1854ல் வெனிசுவேலாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1878ல் பிரித்தானியக் கப்பல் யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
1882ல் காச நோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.
1896ல் வரலாற்றில் முதன் முதலாக வானொலி சமிக்கையை உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உருவாக்கினார்.
1921ல் முதலாவது பன்னாட்டு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி மான்டே கார்லோவில் இடம்பெற்றது.
1934ல் பிலிப்பீன்சு தன்னாட்சியுள்ள பொதுநலவாய நாடாக அனுமதிக்கும் சட்டமூலம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.
1944ல் நாட்சி செருமனியப் படைகள் உரோமை நகரில் 335 இத்தாலியப் பொதுமக்களைக் கொன்ரனர்,
1944ல் இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் செருமனிய சிறையில் இருந்து 76 நேசப் படையின் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர். இந்நிகழ்வு பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
1946ல் பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக்குழு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியை இந்தியத் தலைமையிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தது.
1947ல் மவுண்ட்பேட்டன் பிரபு பிரித்தானிய இந்தியாவின் ஆளுநரானார்.
1961ல் பிரெஞ்சு மொழிக்கான கியுபெக் வாரியம் அமைக்கப்பட்டது.
1965ல் இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1965ல் நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிக்கு அனுப்பியது.
1976ல் அர்கெந்தீனாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. இசபெல் பெரோனின் ஆட்சி பறிக்கப்பட்டது.
1977ல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினரல்லாத முதலாவது பிரதமராக மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980ல் எல் சால்வடோர் பேராயர் ஆஸ்கார் ரொமெரோ சான் சல்வதோரில் படுகொலை செய்யப்பட்டார்.
1993ல் சூமேக்கர்-லேவி வால்வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது.
1998ல் இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற சுழற்காற்றினால் 250 பேர் உயிரிழந்து, 3000க்கு மேல் காயமடைந்தனர்.
1999ல் கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொசுலாவியாவில் வான் தாக்குதலை நடத்தின.
1999ல் பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 38 பேர் உயிரிழந்தனர்.
2003ல் ஈராக்கில் இருந்து அமெரிக்க, பிரித்தானியப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு 21–1 என ஆதரவாக வாக்களித்தது.
2008ல் பூட்டான் அதிகாரபூர்வமாக மக்களாட்சிக்கு மாறியது. முதலாவது பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
2015ல் செருமன்விங்ஸ் விமானம் 9525 விமானம் பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணம் செய்த னைத்து 150 பேரும் உயிரிழந்தனர்.
2020ல் இந்தியாவில் கொரோனாவைரசு பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 24-03 | March 24

1494ல் செருமானிய கனிமவியலாளரான‌ அகிரிகோலா சார்சியஸ் பிறந்த நாள். (இறப்பு-1555)
1607ல் இடச்சுத் தளபதியான‌ மைக்கெல் டி ருய்ட்டர் பிறந்த நாள். (இறப்பு-1667)
1693ல் கடற் காலமானியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயரான‌ யோன் அரிசன் பிறந்த நாள். (இறப்பு-1776)
1733ல் ஆங்கிலேய வேதியியலாளரான‌ சோசப்பு பிரீசிட்லி பிறந்த நாள். (இறப்பு-1804)
1775ல் கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான‌ முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த நாள். (இறப்பு-1835)
1834ல் ஆங்கிலேய ஆடை வடிவமைப்பாளரும் கவிஞருமான‌ வில்லியம் மோரிஸ் பிறந்த நாள். (இறப்பு-1896)
1874ல் அங்கேரிய-அமெரிக்க வித்தைக்காரரும் நடிகருமான‌ ஆரி உடீனி பிறந்த நாள். (இறப்பு-1926)
1884ல் நோபல் பரிசு பெற்ற இடச்சு-அமெரிக்க இயற்பியலாளரும் வேதியியலாளருமான‌ பீட்டர் டெபாய் பிறந்த நாள். (இறப்பு-1966)
1893ல் செருமானிய வானியலாளரான‌ வால்டேர் பாடே பிறந்த நாள். (இறப்பு-1960)
1903ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளரான‌ அடால்ஃப் புடேனண்ட்ட் பிறந்த நாள். (இறப்பு-1995)
1903ல் ஆங்கிலேய ஊடகவியலாளரும் நூலாசிரியருமான‌ மால்கம் மக்கரிச் பிறந்த நாள். (இறப்பு-1990)
1905ல் தமிழக எழுத்தாளரான‌ பி. எஸ். இராமையா பிறந்த நாள். (இறப்பு-1983)
1922ல் தமிழகப் பின்னணிப் பாடகரான‌ டி. எம். சௌந்தரராஜன் பிறந்த நாள்.
1930ல் ஈழத்து எழுத்தாளரான‌ நீர்வை பொன்னையன் பிறந்த நாள். (இறப்பு-2020)
1932ல் தமிழக அரசியல்வாதியான‌ கே. ஏ. கிருஷ்ணசாமி பிறந்த நாள். (இறப்பு-2010)
1936ல் கனேடிய அறிவியலாளரான‌ டேவிட் சசூக்கி பிறந்த நாள்.
1943ல் இந்திய சிற்ப மற்றும் கட்டடக் கலைஞரான‌ ரகுநாத் மகபத்ர பிறந்த நாள்.
1947ல் ஆங்கிலேயத் தொழிலதிபரான‌ ஆலன் சுகர் பிறந்த நாள்.
1949ல் இலங்கையின் 13வது பிரதமரான‌ ரணில் விக்கிரமசிங்க பிறந்த நாள்.
1956ல் அமெரிக்கத் தொழிலதிபரான‌ இசுட்டீவ் பால்மர் பிறந்த நாள்.
1961ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ டீன் ஜோன்ஸ் பிறந்த நாள். (இறப்பு- 2020)
1965ல் அமெரிக்க மற்போர் வீரரும் நடிகருமான‌ தி அண்டர்டேக்கர் பிறந்த நாள்.
1973ல் அமெரிக்க நடிகரான‌ ஜிம் பார்சன்ஸ் பிறந்த நாள்.
1974ல் அமெரிக்க நடிகையான‌ அலிசன் ஹன்னிகன் பிறந்த நாள்.
1978ல் தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளரான‌ கிஷோர் பிறந்த நாள். (இறப்பு-2015)
1979ல் இந்திய நடிகரான‌ இம்ரான் ஹாஷ்மி பிறந்த நாள்.
1979ல் யூத-அமெரிக்க நடிகையும் இயக்குநருமான‌ லேக் பெல் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 24-03 | March 24

1603ல் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் இறப்பு நாள். (பிறப்பு-1533)
1776ல் கடற் காலமானியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயரான‌ யோன் அரிசன் இறப்பு நாள். (பிறப்பு-1693)
1849ல் செருமானிய வேதியியலாளரான‌ ஜோகன் தோபரீனர் இறப்பு நாள். (பிறப்பு-1780)
1882ல் அமெரிக்கக் கவிஞரான‌ ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ இறப்பு நாள். (பிறப்பு-1807)
1905ல் பிரான்சிய புதின எழுத்தாளரும் கவிஞருமான‌ ழூல் வேர்ண் இறப்பு நாள். (பிறப்பு-1828)
1915ல் ஆங்கிலேய-ஐரிய வானியலாளரான‌ மார்கரெட் இலிண்டுசே அகின்சு இறப்பு நாள். (பிறப்பு-1848)
1964ல் யாழ்ப்பாணச் சித்தரான‌ யோக சுவாமிகள் இறப்பு நாள். (பிறப்பு-1872)
1976ல் ஆங்கிலேய இராணுவ அதிகாரியான‌ பெர்னார்ட் மோண்ட்கோமரி இறப்பு நாள். (பிறப்பு-1887)
1980ல் சல்வதோர் பேராயரான‌ ஆஸ்கார் ரொமெரோ இறப்பு நாள். (பிறப்பு-1917)
1988ல் தமிழக கருநாடக மற்றும் திரையிசைப் பாடகரான‌ சீர்காழி எஸ். கோவிந்தராஜன் இறப்பு நாள். (பிறப்பு-1933)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 11
Next articleMarch 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 25