Today Special Historical Events In Tamil | 18-03 March 18
March 18 Today Special | March 18 What Happened Today In History. March 18 Today Whose Birthday (born) | March-18th Important Famous Deaths In History On This Day 18/03 | Today Events In History March-18th | Today Important Incident In History | பங்குனி 18 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 18-03 | பங்குனி மாதம் 18ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 18.03 Varalatril Indru Nadanthathu Enna.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 18-03
- சிரியா நாட்டில் ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது.
- துருக்கியில் கலிப்பொலி நினைவு நாள் கொண்டாடப்படுகிறது.
- மங்கோலியாவில் ஆண்கள் மற்றும் போர்வீரர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 18-03 March 18
- 37ல் உரோம மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து காலிகுலாவை பேரரசராக அறிவித்தது.
- 633ல் அராபியத் தீபகற்பம் காலிபா அபூபக்கரின் தலைமையில் ஒன்றுபட்டது.
- 1068ல் லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர்.
- 1229ல் 6-வது சிலுவைப் போர் நடைபெற்றதுடன் தன்னை எருசலேமின் மன்னராக புனித உரோமப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் அறிவித்தார்.
- 1241ல் மங்கோலியர்களினால் போலந்தின் கிராக்கோவ் நகரம் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது.
- 1314ல் தேவாலய புனித வீரர்களின் 23-வதும் கடைசியுமான வீரர் யாக் டி மோலே மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
- 1438ல் புனித உரோமைப் பேரரசராக ஆப்சுபர்கின் இரண்டாம் ஆல்பர்ட் முடிசூடினார்.
- 1608ல் எத்தியோப்பியாவின் பேரரசராக சுசேனியசு முடிசூடினார்.
- 1766ல் அமெரிக்கப் புரட்சி நடைபெற்றதுடன் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முத்திரை வரியை நீக்கியது.
- 1834ல் இங்கிலாந்தின் டோர்செட் நகரில் ஆறு பண்ணைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
- 1850ல் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1874ல் அவாய் குறிப்பிடத்தக்க வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.
- 1913ல் கிரேக்கத்தின் முதலாவது ஜோர்ஜ் மன்னர் படுகொலை செய்யப்பட்டார்.
- 1915ல் முதலாம் உலகப் போர் நடைபெற்றதுடன் கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.
- 1922ல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்று இரண்டு ஆண்டுகளில் விடுதலையடைந்தார்.
- 1925ல் அமெரிக்காவின் மிசூரி, இலினோய், இந்தியானா மாநிலங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 695 பேர் இறந்தனர்.
- 1937ல் எசுப்பானிய உள்நாட்டுப் போரில் எசுப்பானியக் குடியரசுப் படைகள் குவாடலசாரா சமரில் இத்தாலியப் படைகளை குவாடலசாரா சமரில் வென்றன.
- 1937ல் அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் நியூ லண்டன் நகரப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.
- 1940ல் இரண்டாம் உலகப் போரில் பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் எதிர்த்துப் போரிட இட்லரும் பெனிட்டோ முசோலினியும் கூட்டிணைந்தனர்.
- 1944ல் இத்தாலியில் விசுவியசு எரிமலை தீக்கக்கியதில் 26 பேர் இறந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
- 1945ல் இரண்டாம் உலகப் போரில் 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெர்லின் நகரைத் தாக்கின.
- 1948ல் சோவியத் ஆலோசகர்கள் யுகோசுலாவியாவில் இருந்து வெளியேறியமை டீட்டோ–இசுட்டாலின் பிளவுக்கான முன்னோடி எனக் கருதப்பட்டது.
- 1953ல் நிலநடுக்கம் காரணமாக மேற்கு துருக்கியில் 265 பேர் உயிரிழந்தனர்.
- 1962ல் 1954 இல் ஆரம்பமான அல்சீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
- 1965ல் சோவியத் விண்ணோடி அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
- 1970ல்ன் கம்போடியாவின் இளவரசர் நொரடோம் சீயனூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு லொன் நொல் கம்போடியாவின் பிரதமரானார்.
- 1971ல் பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் உயிரிழந்தனர்.
- 1980ல் உருசியாவில் வஸ்தோக்-2எம் ஏவூர்தி ஏவப்படுகையில் வெடித்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.
- 1989ல் எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1990ல் அமெரிக்காவில் பாஸ்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து $500 மில்லியன் பெறுமதியான 12 ஓவியங்கள் திருடப்பட்டன.
- 1990ல் கிழக்கு செருமனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக மக்களாட்சித் தேர்தல்கள் இடம்பெற்றன.
- 1994ல் பொசுனியாவின் பொசுனியாக்களும் குரொவாசியர்களும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.
- 1996ல் பிலிப்பீன்சு குவிசோன் நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 162 பேர் இறந்தனர்.
- 1997ல் துருக்கிக்கு சென்று கொண்டிருந்த உருசியாவின் அந்தோனொவ் ஏஎன்-24 விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 50 பேரும் உயிரிழந்தனர்.
- 2003ல் ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்திய வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் உசைனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.
- 2003ல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் ஜப்பான் ஆக்கோன் நகரில் ஆரம்பமாயின.
- 2014ல் உருசிய கிரிமியா நாடாளுமன்றங்கள் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டன.
- 2015ல் தூனிசியா பார்டோ தேசிய அருங்காட்சியகம் தாக்கப்பட்டதில் 23 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 18-03 March 18
- 1702ல் மைசூர் மன்னரான முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் பிறந்த நாள் (இறப்பு 1732)
- 1837ல் ஐக்கிய அமெரிக்காவின் 22வது அரசுத்தலைவரான குரோவர் கிளீவ்லாண்ட் பிறந்த நாள் (இறப்பு 1908)
- 1858ல் டீசல் பொறியைக் கண்டுபிடித்த செருமானியப் பொறியியலாளரான ருடோல்ப் டீசல் பிறந்த நாள் (இறப்பு 1913)
- 1862ல் இந்திய நிருவாகியும் அதிகாரியும் அரசியல்வாதியுமான பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி பிறந்த நாள் (இறப்பு 1927)
- 1863ல் ஆசுத்திரிய கண் மருத்துவரான எதுவார்து சீர்ம் பிறந்த நாள் (இறப்பு 1944)
- 1869ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான நெவில் சேம்பர்லேன் பிறந்த நாள் (இறப்பு 1940)
- 1893ல் ஆங்கிலேயக் கவிஞரான வில்ஃபிரட் ஓவன் பிறந்த நாள் (இறப்பு 1918)
- 1936ல் பிரித்தானிய அறிவியலாளரான அலெக்சாந்தர் போக்சென்பர்கு பிறந்த நாள்
- 1936ல் தென்னாப்பிரிக்காவின் 2வது அரசுத்தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் பிறந்த நாள்
- 1938ல் இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான சசி கபூர் பிறந்த நாள்
- 1947ல் ஆங்கிலேயத் துடுப்பாளரும் ஊடகவியலாளருமான டேவிட் லொயிட் பிறந்த நாள்
- 1958ல் இலங்கை ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ரிச்சர்ட் டி சொய்சா பிறந்த நாள் (இறப்பு 1990) பிறந்த நாள்
- 1959ல் பிரான்சியத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் திரைக்கதையாசிரியருமான லுக் பெசோன் பிறந்த நாள்
- 1980ல் ஆங்கிலேய நடிகையான சோபியா மைல்ஸ் பிறந்த நாள்
- 1981ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான ஜெய் ஆகாஷ் பிறந்த நாள்
- 1989ல் ஆங்கிலேய-அமெரிக்க நடிகையான லில்லி காலின்ஸ் பிறந்த நாள்
- 1997ல் அமெரிக்க நடிகையான சிகாரா பிரேவோ பிறந்த நாள்
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 18-03 March 18
- 1712ல் முகலாய அரச குடும்பத்தவரும் ஆளுநருமன ஆசிம்-உசு-சான் இறப்பு நாள் (பிறப்பு 1664)
- 1989ல் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளரும் புள்ளியியலாளருமான அரோல்டு ஜெப்ரீசு இறப்பு நாள் (பிறப்பு 1891)
- 2007ல் இந்திய-ஆங்கிலேயத் துடுப்பாளரும் பயிற்சியாளருமான பாப் வுல்மர் இறப்பு நாள் (பிறப்பு 1948)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: