Today Special Historical Events In Tamil | 17-03 March 17
March 17 Today Special | March 17 What Happened Today In History. March 17 Today Whose Birthday (born) | March-17th Important Famous Deaths In History On This Day 17/03 | Today Events In History March-17th | Today Important Incident In History | பங்குனி 17 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 17-03 | பங்குனி மாதம் 17ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 17.03 Varalatril Indru Nadanthathu Enna.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 17-03
- வங்காளதேசத்தில் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது.
- தாய்லாந்தில் தேசிய முவாய் போர் நாள் கொண்டாடப்படுகிறது.
- அயர்லாந்து, மற்றும் ஆங்கிலம் பேசும் நாடுகளில் புனித பேட்ரிக்கின் நாள் கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 17-03 March 17
- கிமு 45ல் யூலியசு சீசர் தனது கடைசி வெற்றியில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை முண்டா நகர சமரில் வென்றான்.
- 180ல் மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார்.
- 455ல் மேற்கு உரோமைப் பேரரசராக பெத்ரோனியசு மாக்சிமசு முடி சூடினார்.
- 1776ல் அமெரிக்கப் புரட்சி நடைபெற்றதுடன் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர முற்றுகையை முடித்து பிரித்தானியப் படைகள் வெளியேறினர்.
- 1805ல் நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனதுடன் நெப்போலியனே அதன் பேரரசன் ஆனான்.
- 1824ல் மலாய் தீவுக் கூட்டம் இலண்டனில் இடம்பெற்ற ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து இரண்டாகப் பிரிக்கப்பட்டதுடன் சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும் வந்தன.
- 1845ல் இரப்பர் பட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
- 1861ல் இத்தாலி இராச்சியம் உருவானது.
- 1891ல் பிரித்தானியாவின் யூட்டோப்பியா என்ற கப்பல் கிப்ரால்ட்டர் கரையில் ஆன்சன் என்ற ஆத்திரேலியக் கப்பலுடன் மூழ்கியதில் 562 பேர் உயிரிழந்தனர்.
- 1919ல் மகாத்மா காந்தி றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக சென்னை வந்தார்.
- 1939ல் இரண்டாம் சீன ஜப்பானியப் போர் நடைபெற்றதுடன் குவோமின்டாங், ஜப்பான் இரண்டுக்கும் இடையே நான்சாங் சமர் இடம்பெற்றது.
- 1941ல் அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.
- 1942ல் பெரும் இன அழிப்பு ஏற்பட்டதுடன் மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் நாட்சி செருமனியரினால் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1948ல் பிரசெல்சு உடன்பட்டில் பெல்ஜியம், பிரான்சு, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன.
- 1950ல் கலிபோர்னியம் என்ற 98-வது தனிமத்தைக் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
- 1957ல் பிலிப்பீன்சு, சேபு என்ற இடத்தில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பிலிப்பீன்சு அரசுத்தலைவர் ரமோன் மக்சேசே உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.
- 1958ல் வங்கார்ட் 1 செயற்கைக்கோளை ஐக்கிய அமெரிக்கா ஏவியது.
- 1959ல் 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
- 1960ல் அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கியூபாவுக்கு எதிரான மறைமுகத் தாக்குதலுக்கான தேசிய பாதுகாப்பு சபையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இது பன்றிகள் விரிகுடா படையெடுப்புக்கு வழிவகுத்தது.
- 1963ல் ஆகூங்கு எரிமலை பாலித் தீவில் வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
- 1966ல் காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை ஆல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மத்திய தரைக் கடல்பகுதியில் எசுப்பானியாவுக்கு அருகில் கண்டுபிடித்தது.
- 1968ல் நரம்பு வாயுவை சோதித்ததில் அமெரிக்காவின் ஊட்டா மாநிலத்தில் 6,000 இற்கும் அதிகமான ஆடுகள் இறந்தன.
- 1970ல் அமெரிக்க இராணுவம் மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக 14 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.
- 1988ல் வெனிசுவேலாவின் எல்லையில் உள்ள மலை ஒன்றில் கொலம்பியாவின் போயிங் விமானம் ஒன்று மோதியதில் 143 பேர் உயிரிழந்தனர்.
- 1988ல் எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் எதியோப்பிய இராணுவ நிலைகளை நோக்கி மும்முனைத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1992ல் ஆர்ஜெண்டீனாவில் இசுரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டு 242 பேர் படுகாயமடைந்தனர்.
- 1992ல் தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கலை முடிவுக்குக் கொண்டுவர நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 68.7% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
- 1996ல் ஆத்திரேலியாவைத் தோற்கடித்து இலங்கை அணி துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
- 2000ல் உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2004ல் கொசோவோவில் இடம்பெற்ற வன்முறைகளில் 22 பேர் உயிரிழந்துடன் 200 பேர் காயமடைந்ததுடன் செர்பியாவில் 35 தேவாலயங்களும் இரண்டு பள்ளிவாசல்களும் சேதமாக்கப்பட்டன.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 17-03 March 17
- 1834ல் செருமானிய பொறியியலாளரும் தொழிலதிபருமான காட்லீப் டைம்லர் பிறந்த நாள் (இறப்பு 1900)
- 1919ல் அமெரிக்கப் பாடகரான நாட் கிங் கோல் பிறந்த நாள் (இறப்பு 1965)
- 1920ல் வங்காள தேசத்தின் 1வது அரசுத்தலைவரான சேக் முஜிபுர் ரகுமான் பிறந்த நாள் (இறப்பு 1975)
- 1926ல் போலந்து-செருமனிய எழுத்தாளரான சீக்பிரீட் லென்சு பிறந்த நாள் (இறப்பு 2014)
- 1926ல் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைப்படத் தொகுப்பாளருமான கே. சங்கர் பிறந்த நாள் (இறப்பு 2006)
- 1939ல் இந்திய அரசியல்வாதியான பங்காரு லட்சுமண் பிறந்த நாள் (இறப்பு 2014)
- 1940ல் செருமானிய இயற்பியலாளரான காட்பிரீடு மூன்சென்பெர்கு பிறந்த நாள்
- 1940ல் இலங்கை ஊடகவியலாளரும் கவிஞரும் எழுத்தாளருமான எம். எச். எம். ஷம்ஸ் பிறந்த நாள் (இறப்பு 2002)
- 1955ல் அமெரிக்க அரசியல்வாதியான சிந்தியா மெக்கினி பிறந்த நாள்
- 1964ல் அமெரிக்க நடிகரான ராப் லோ பிறந்த நாள்
- 1975ல் இந்திய நடிகரும் பாடகருமான புனீத் ராச்குமார் பிறந்த நாள்
- 1990ல் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனையான சாய்னா நேவால் பிறந்த நாள்
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 17-03 March 17
- 1406ல் துனீசிய சமூகவியலாளரும் வரலாற்றாளருமான இப்னு கல்தூன் இறப்பு நாள் (பிறப்பு 1332)
- 1527ல் இந்திய ஆட்சியாளரான ராணா சங்கா இறப்பு நாள் (பிறப்பு 1482)
- 1764ல் ஆங்கிலேய வானியலாளரும் அரசியல்வாதியுமான ஜார்ச் பார்க்கர்ரா இறப்பு நாள் (பிறப்பு 1695)
- 1782ல் டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளரும் இயற்பியலாளருமான டேனியல் பெர்னூலி இறப்பு நாள் (பிறப்பு 1700)
- 1846ல் செருமானிய வானியலாளரும் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் இறப்பு நாள் (பிறப்பு 1784)
- 1849ல் இடச்சு மன்னரான இரண்டாம் வில்லியம் இறப்பு நாள் (பிறப்பு 1792)
- 1853ல் ஆத்திரிய இயற்பியலாளரும் கணிதவியலாளருமான கிறிஸ்டியன் டாப்ளர் இறப்பு நாள் (பிறப்பு 1803)
- 1956ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளரான ஐரீன் ஜோலியட் கியூரி இறப்பு நாள் (பிறப்பு 1897)
- 1957ல் பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவரான் ரமோன் மக்சேசே இறப்பு நாள் (பிறப்பு 1907)
- 1993ல் ஈழத்து சிறுகதை எழுத்தாளரான டானியல் அன்ரனி இறப்பு நாள் (பிறப்பு 1947)
- 2011ல் உருசிய வானியலாளரான கியார்கிய் ஏ.கிராசின்சுகி இறப்பு நாள் (பிறப்பு 1939)
- 2014ல் இலங்கை சிங்கள நடிகையும் பாடகியுமான மெர்சி எதிரிசிங்க இறப்பு நாள் (பிறப்பு 1945)
- 2017ல் நோபல் பரிசு பெற்ற செயின்ட் லூசியா எழுத்தாளரான டெரெக் வால்காட் இறப்பு நாள் (பிறப்பு 1930)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: