March 19 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 19

0

Today Special Historical Events In Tamil | 19-03 March 19

March 19 Today Special | March 19 What Happened Today In History. March 19 Today Whose Birthday (born) | March-19th Important Famous Deaths In History On This Day 19/03 | Today Events In History March-19th | Today Important Incident In History | பங்குனி 19 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 19-03 | பங்குனி மாதம் 19ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 19.03 Varalatril Indru Nadanthathu Enna.

March 19
March 19

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 19-03

  • கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஆங்கிலிக்க ஒன்றியத்தின் புனித யோசேப்பு நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 19-03 March 19

  • 1279ல் சீனாவில் சொங் அரசு யாமென் சமரில் மங்கோலியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.
  • 1649ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும் ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நிறைவேறியது.
  • 1853ல் தைப்பிங் மறுமலர்ச்சி இயக்கம் சீனாவைக் கைப்பற்றி நாஞ்சிங்கை அதன் தலைநகராக 1864 வரை வைத்திருந்தது.
  • 1863ல் அமெரிக்க உள்நாட்டுப் போரில் அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது கன்னிப் பயணத்திலேயே மூழ்கியது. இதன் எச்சங்கள் 1963 ஆம் ஆண்டில் இதே நாளில் கண்டுபிடிக்கப்பட்டன.
  • 1895ல் லூமியேர் சகோதரர்கள் தாம் புதிதாக உருவாக்கிய திரைப்படக் கருவியின் மூலம் முதற்தடவையாக திரைப்படத் துண்டைப் பதிவு செய்தனர்.
  • 1915ல் புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டாலும் அது கோளாக கருதப்படவில்லை.
  • 1918ல் அமெரிக்க காங்கிரஸ் நேர வலயங்களை நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.
  • 1920ல் இரண்டாவது தடவையாக அமெரிக்க மேலவை வெர்சாய் ஒப்பந்தத்ததை நிராகரித்தது.
  • 1931ல் சூதாட்டம் அமெரிக்காவின் நெவாடாவில் சட்டபூர்வமாக்கப்பட்டது.
  • 1932ல் சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
  • 1944ல் இரண்டாம் உலகப் போரில் நாட்சி செருமனியப் படைகள் அங்கேரியைக் கைப்பற்றின.
  • 1945ல் இரண்டாம் உலகப் போரில் ஜ‌ப்பானில் பிராங்கிளின் என்ற அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 724 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1946ல் பிரான்சின் வெளிநாட்டு மாவட்டங்களாக பிரெஞ்சு கயானா, குவாதலூப்பு, மர்தினிக்கு, ரீயூனியன் ஆகியன அறிவிக்கப்பட்டன.
  • 1958ல் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியதில் நியூயார்க்கில் 24 பேர் உயிரிழந்தனர்.
  • 1962ல் அல்சீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1964ல் பிரேசிலில் அரசுக்கு எதிராகவும் கம்யூனிசத்திற்கு எதிராகவும் 500,000 மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 1965ல் 1863 இல் இதே நாளில் கடலில் மூழ்கிய $50,000,000 பெறுமதியான ஜார்ஜியானா கப்பலின் எச்சங்கள் 102 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டன.
  • 1972ல் நட்புறவு ஒப்பந்தத்தில் இந்தியாவும் வங்காள தேசமும் கைச்சாத்திட்டன.
  • 1982ல் போக்லாந்து போர் நடைபெற்றதுடன் தெற்கு ஜோர்ஜியா தீவில் அர்கெந்தீனப் படையினர் தரையிறங்கினர்.
  • 1988ல் இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
  • 2002ல் ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
  • 2002ல் சிம்பாப்வே மனித உரிமை மீறல்கள் தேர்தல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பொதுநலவாயத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டது.
  • 2004ல் பால்ட்டிக் கடலில் 1952 இல் உருசிய மிக்-15 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சுவீடனின் டிசி-3 விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • 2004ல் சீன குடியரசின் அரசுத்தலைவரான சென் சூயி-பியான் சுடப்பட்டார்.
  • 2008ல் ஜிஆர்பி 080319பி என்ற அண்ட வெடிப்பு அவதானிக்கப்பட்டது.
  • 2011ல் லிபிய உள்நாட்டுப் போர் நடைபெற்றதுடன் கடாபியின் படைகள் பங்காசி நகரைக் கைப்பற்றத் தவறியதை அடுத்து லிபியா மீது பிரெஞ்சு வான் படை தாக்குதலை ஆரம்பித்தது.
  • 2013ல் ஈராக்க்கில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 98 பேர் கொல்லப்பட்டதுடன் 240 பேர் காயமடைந்தனர்.
  • 2016ல் பிளை துபாய் 981 விமானம் உருசியாவில் ரஸ்தோவ் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கும் போது மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 62 பேரும் உயிரிழந்தனர்.
  • 2018ல் சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 19-03 March 19

  • 1077ல் ஈராக்கிய சூபி அறிஞரான அப்துல் காதிர் அல்-ஜிலானி பிறந்த நாள் (இறப்பு 1165)
  • 1206ல் மங்கோலியப் பேரரசரும் 3வது கானான‌ குயுக் கான் பிறந்த நாள் (இறப்பு 1248)
  • 1844ல் பின்லாந்து ஊடகவியலாளரான மினா கேந்த் பிறந்த நாள் (இறப்பு 1897)
  • 1903ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான வி. ஏ. அழகக்கோன் பிறந்த நாள் (இறப்பு 1973)
  • 1906ல் செருமானிய சுத்ஸ்டாப்பெல் அதிகாரியான அடோல்வ் ஏச்மென் பிறந்த நாள் (இறப்பு 1962)
  • 1919ல் தமிழக கருநாடக இசைப் பாடகியான டி. கே. பட்டம்மாள் பிறந்த நாள் (இறப்பு 2009)
  • 1922ல் சப்பானிய இராணுவ அதிகாரியான ஹிரூ ஒனோடா பிறந்த நாள் (இறப்பு 2014)
  • 1928ல் தமிழகப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான‌ விக்கிரமன் பிறந்த நாள் (இறப்பு 2015)
  • 1928ல் ஈழத்துத் தமிழறிஞரும் எழுத்தாளரும் கல்வியாளருமான ஆ. கந்தையா பிறந்த நாள் (இறப்பு 2011)
  • 1933ல் தமிழக அரசியல்வாதியும் தமிழறிஞருமான‌ குமரி அனந்தன் பிறந்த நாள்
  • 1933ல் தமிழக நாதசுவரக் கலைஞரான எம். பி. என். பொன்னுசாமி பிறந்த நாள்
  • 1943ல் இத்தாலியப் பிரதமரான மார்யோ மோன்டி பிறந்த நாள்
  • 1952ல் தெலுங்கு நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ அரசியல்வாதி மோகன் பாபு பிறந்த நாள்
  • 1978ல் இலங்கைத் துடுப்பாட்ட வீரரான ரங்கன ஹேரத் பிறந்த நாள்
  • 1984ல் இந்திய நடிகையான தனுஸ்ரீ தத்தா பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 19-03 March 19

  • 1406ல் துனீசிய வரலாற்றாளரான இப்னு கல்தூன் இறப்பு நாள் (பிறப்பு 1332)
  • 1890ல் இந்திய சமூக சேவகரும் கல்வியாளரும் ஆரியசமாசத்தின் தலைவருமான‌ குருதத்த வித்யார்த்தி இறப்பு நாள் (பிறப்பு 1864)
  • 1927ல் தமிழகத் தவில் கலைஞரான அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளை இறப்பு நாள் (பிறப்பு 1876)
  • 1950ல் அமெரிக்கப் போர் வீரரும் எழுத்தாளருமான‌ எட்கர் ரைசு பர்ரோசு இறப்பு நாள் (பிறப்பு 1875]])
  • 1978ல் இந்திய அரசியல்வாதியும் மடபூஷிய அனந்தசயனம் இறப்பு நாள் (பிறப்பு 1891)
  • 1979ல் ஈழத்து எழுத்தாளரான அ. நாகலிங்கம் இறப்பு நாள் (பிறப்பு 1901)
  • 1982ல் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான‌ ஆச்சார்ய கிருபளானி இறப்பு நாள் (பிறப்பு 1888)
  • 1987ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளரான லூயி டே பிராலி இறப்பு நாள் (பிறப்பு 1892)
  • 1988ல் தமிழக கருநாடக வாய்ப்பாட்டு மற்றும் வீணைக் கலைஞரான எஸ். இராமநாதன் இறப்பு நாள் (பிறப்பு 1917)
  • 1998ல் தமிழக முஸ்லிம் பெண் எழுத்தாளரான சித்தி ஜுனைதா பேகம் இறப்பு நாள் (பிறப்பு 1917)
  • 1998ல் கேரளத்தின் 1வது முதலமைச்சரான ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு இறப்பு நாள் (பிறப்பு 1909)
  • 2008ல் பிரித்தானிய-இலங்கை அறிபுனை எழுத்தாளரான ஆர்தர் சி. கிளார்க் இறப்பு நாள் (பிறப்பு 1917)
  • 2008ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான ரகுவரன் இறப்பு நாள் (பிறப்பு 1948)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 18
Next articleMarch 20 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 20