March 03 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 03

0

Today Special Historical Events In Tamil | 03-03 | March 03

March 03 Today Special | March 03 What Happened Today In History. March 03 Today Whose Birthday (born) | March-3th Important Famous Deaths In History On This Day 03/03 | Today Events In History March 3th | Today Important Incident In History | பங்குனி 03 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 03-03 | பங்குனி மாதம் 03ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 03.03 Varalatril Indru Nadanthathu Enna| March 03 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 03/03 | Famous People Born Today 03.03 | Famous People died Today 03-03.

Today Special in Tamil 03-03
Today Events in Tamil 03-03
Famous People Born Today 03-03
Famous People died Today 03-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 03-03 | March 03

மாவீரர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மலாவி)
உலகக் காட்டுயிர் நாளாக கொண்டாடப்படுகிறது.
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (பல்கேரியா)
அன்னையர் நாளாக கொண்டாடப்படுகிறது. (ஜார்ஜியா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 03-03 | March 03

473ல் கிளிசேரியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.
724ல் யப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார்.
1284ல் வேல்சு இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது.
1575ல் இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.
1585ல் அந்திரேயா பலாடியோ வடிவமைத்த ஒலிம்பிக் நாடக அரங்கு விசென்சா நகரில் திறக்கப்பட்டது.
1833ல் அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
1845ல் புளோரிடா அமெரிக்காவின் 27வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1857ல் இரண்டாவது அபினிப் போர்: பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.
1859ல் ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிறைவடைந்தது.
1861ல் உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் பண்ணையடிமைகளை விடுவித்தார்.
1873ல் அஞ்சல் மூலம் “ஆபாசமான, அல்லது கவர்ச்சியான” நூல்களை அனுப்புவது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
1878ல் உதுமானியப் பேரரசிடம் இருந்து பல்கேரியா விடுதலை அடைந்தது. அடுத்த சில மாதங்களில் பெர்லினில் நடந்த ஆறு நாடுகளின் மாநாட்டில் இவ்வுரிமை மறுக்கப்பட்டு, பல்கேரியா உதுமானியப் பேரரசின் குத்தகை நாடு என அறிவிக்கப்பட்டது.
1904ல் எடிசனின் போனோகிராமைக் கொண்டு முதன் முதலாக அரசியல் ஆவணம் ஒன்றின் ஒலிப்பதிவை இரண்டாம் வில்லியம் உருவாக்கினார்.
1905ல் உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை ஏற்படுத்த இணங்கினார்.
1913ல் பெண்களுக்கான வாக்குரிமை கோரி அமெரிக்காவில், வாசிங்டன் நகரில் பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்ரது.
1918ல் முதலாம் உலகப் போரில் உருசியாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர செருமனி, ஆஸ்திரியா, உருசியா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.
1923ல் டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
1924ல் உதுமானியப் பேரரசின் கலிபா இரண்டாம் அப்துல்மெசித் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து 14-ஆம் நூற்றாண்டின் பழமை வாய்ந்த இசுலாமியக் கலீபகம் முடிவுக்கு வந்தது.
1931ல் ஐக்கிய அமெரிக்கா த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர் என்ற பாடலை தனது நாட்டுப்பண்ணாக ஏற்றுக் கொண்டது.
1938ல் சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1939ல் மும்பாயில் மகாத்மா காந்தி பிரித்தானியருக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1940ல் சுவீடனில் இடதுசாரி கம்யூனிஸ்டுக் கட்சியின் செய்திப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர்.
1942ல் இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் சப்பானின் பத்து போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
1945ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க, பிலிப்பீனியப் படையினர் மணிலாவை மீண்டும் கைப்பற்றினர்.
1945ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான்படையினர் நெதர்லாந்தின் டென் ஹாக் நகர் மீது தவறுதலாகக் குண்டுகளை வீசியதில் 511 பேர் உயிரிழந்தனர்.
1953ல் கனடிய பசிபிக் ஏர் லைன்சு விமானம் ஒன்று கராச்சியில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
1958ல் ஈராக்கின் பிரதமராக நூரி-அல்-சயீது எட்டாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1969ல் நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.
1974ல் பாரிசு அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் உயிரிழந்தனர்.
1985ல் சிலியில் வால்பரைசோ என்ற பகுதியில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 177 பேர் உயிரிழந்தனர்.
1986ல் ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து முழுமையான விடுதலை பெற்றதற்கான “ஆத்திரேலியா சட்டம் 1986” நடைமுறைக்கு வந்தது.
1991ல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.
2005ல் இசுட்டீவ் பொசெட் என்ற அமெரிக்கர் எரிபொருள் எதுவும் மீள நிரப்பாமல் தனியே விமானம் ஒன்றில் உலகைச் சுற்றி வலம் வந்து சாதனை படைத்தார்.
2013ல் கராச்சியில் சியா முசுலிம்கள் வாழும் பகுதியில் குண்டு வெடித்ததில் 45 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 03-03 | March 03

1790ல் ஆங்கிலேய சட்ட வல்லுநரும் அரசியல் சிந்தனையாளருமான‌ ஜான் ஆஸ்டின் பிறந்த நாள். (இறப்பு-1859)
1839ல் இந்தியத் தொழிலதிபரான‌ ஜம்சேத்ஜீ டாட்டா பிறந்த நாள். (இறப்பு-1904)
1845ல் உருசிய-செருமானியக் கணிதவியலாளரும் மெய்யியலாளருமான‌ கியார்கு கேன்ட்டர், (இ. 1918)
1847ல் தொலைபேசியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய-அமெரிக்கப் பொறியியலாளரான‌ அலெக்சாண்டர் கிரகாம் பெல் பிறந்த நாள். (இறப்பு-1922)
1860ல் உருசிய வேதியியலாளரான‌ அலெக்சி பேவர்ஸ்கி பிறந்த நாள். (இறப்பு-1945)
1882ல் இத்தாலியத் தொழிலதிபரான‌ சார்லசு பொன்சி பிறந்த நாள். (இறப்பு-1949)
1906ல் சோவியத்-உருசிய வானியலாளரும் புவியியலாளருமான‌ யெவ்கேனி கிரினோவ் பிறந்த நாள். (இறப்பு-1984)
1924ல் ஈழத்து இதழியலாளரும் எழுத்தாளருமான‌ சி. சிவஞானசுந்தரம் பிறந்த நாள். (இறப்பு-1996)
1931ல் இந்திய இசையமைப்பாளரான‌ குலாம் முஸ்தபா கான் பிறந்த நாள்.
1943ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்களான‌ சங்கர், கணேஷ் பிறந்த நாள்.
1944ல் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரான‌ ஜெயச்சந்திரன் பிறந்த நாள்.
1950ல் இலங்கை எழுத்தாளரான‌ திக்குவல்லை கமால் பிறந்த நாள்.
1955ல் தமிழ் இதழியலாளரான‌ கணபதி கணேசன் பிறந்த நாள். (இறப்பு-2002)
1955ல் இந்திய அரசியல்வாதியான‌ தோர்ச்யீ காண்டு பிறந்த நாள். (இறப்பு-2011)
1955ல் இந்தியத் திரைப்பட நடிகரான‌ ஜஸ்பால் பட்டி பிறந்த நாள். (இறப்பு-2012)
1958ல் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும் பின்னணிப் பாடகியுமான‌ லதா ரஜினிகாந்த் பிறந்த நாள்.
1970ல் பாக்கித்தான் துடுப்பாட்ட வீரரான‌ இன்சமாம் உல் ஹக் பிறந்த நாள்.
1982ல் அமெரிக்க நடிகையும் பாடகியான‌ ஜெசிக்கா பைல் பிறந்த நாள்.
1985ல் தமிழ்த் திரைப்பட நடிகையான‌ வரலட்சுமி சரத்குமார் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 03-03 | March 03

1644ல் ஆறாவது சீக்கிய குருவான‌ குரு அர்கோவிந்த் இறப்பு நாள். (பிறப்பு-1595)
1703ல் ஆங்கிலேய கட்டிடக் கலைஞரும் மெய்யியலாளருமான‌ ராபர்ட் ஹூக் இறப்பு நாள். (பிறப்பு-1635)
1707ல் முகலாயப் பேரரசரான‌ ஔரங்கசீப் இறப்பு நாள். (பிறப்பு-1618)
1900ல் பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான‌ பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1847)
1940ல் இந்திய வரலாற்றாய்வாளரான‌ கடம்பி மீனாட்சி இறப்பு நாள். (பிறப்பு-1905)
1944ல் சிங்களக் கவிஞரும் பத்திரிகையாளருமான‌ குமாரதுங்க முனிதாச இறப்பு நாள். (பிறப்பு-1887)
1985ல் சோவியத்-உக்கிரைனிய வானியலாளரான‌ யோசிப் சுக்லோசுகி இறப்பு நாள். (பிறப்பு-1916)
1996ல் ஈழத்து இதழியலாளரும் எழுத்தாளருமான‌ சி. சிவஞானசுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1924)
2010ல் சுயமரியாதை இயக்கத் தலைவரான‌ குருவிக்கரம்பை வேலு இறப்பு நாள். (பிறப்பு-1930)
2011ல் விண்வெளி அறிவியலாளரான‌ வெ. இராதாகிருட்டிணன் இறப்பு நாள். (பிறப்பு-1929)
2016ல் ஒந்துராசு சூழலியலாளரான‌ பெர்த்தா காசிரீஸ் இறப்பு நாள். (பிறப்பு-1973)
2016ல் நியூசிலாந்து துடுப்பாளரான‌ மார்ட்டின் குரோவ் இறப்பு நாள். (பிறப்பு-1962)
2018ல் ஆங்கிலேய தடகள வீரரான‌ ரோஜர் பேனிஸ்டர் இறப்பு நாள். (பிறப்பு-1929)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 02 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 02
Next articleMarch 04 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 04