March 02 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 02

0

Today Special Historical Events In Tamil | 02-03 | March 02

March 02 Today Special | March 02 What Happened Today In History. March 02 Today Whose Birthday (born) | March-2nd Important Famous Deaths In History On This Day 02/03 | Today Events In History March 2nd | Today Important Incident In History | பங்குனி 02 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 02-03 | பங்குனி மாதம் 02ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 02.03 Varalatril Indru Nadanthathu Enna| March 02 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 02/03 | Famous People Born Today 02.03 | Famous People died Today 02-03.

Today Special in Tamil 02-03
Today Events in Tamil 02-03
Famous People Born Today 02-03
Famous People died Today 02-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 02-03 | March 02

வான்படை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (இலங்கை)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 02-03 | March 02

986ல் பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார்.
1127ல் பிளாண்டர்சு ஆட்சியாளர் முதலாம் சார்லசு கொல்லப்பட்டார்.
1498ல் வாஸ்கோ ட காமா மொசாம்பிக் தீவை வந்தடைந்தார்.
1657ல் தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1797ல் இங்கிலாந்து வங்கி முதலாவது ஒரு-பவுண்டு, இரண்டு-பவுண்டு வங்கித்தாள்களை வெளியிட்டது.
1807ல் அமெரிக்க சட்டமன்றம் புதிய அடிமைகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடை விதித்தது.
1815ல் கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டதை அடுத்து இலங்கை முழுவதும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சிறை பிடிக்கப்பட்ட விக்கிரம ராசசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
1823ல் தமிழ் நாடு, திருப்பெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1825ல் கடைசிக் கரிபியன் கடல் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
1836ல் டெக்சாஸ் குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1855ல் இரண்டாம் அலெக்சாண்டர் உருசியாவின் பேரரசராக (சார்) முடி சூடினார்.
1859ல் இரண்டு நாள் அடிமை விற்பனை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பமானது.
1882ல் விக்டோரியா மகாராணி வின்ட்சர் நகரில் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
1896ல் எதியோப்பியா ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க நாடொன்றினால் குடியேற்ற நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
1903ல் பெண்களுக்கு மட்டுமான முதலாவது உணவு விடுதி, மார்த்தா வாசிங்டன் ஓட்டல், நியூயார்க் நகரில் திறக்கப்பட்டது.
1917ல் புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.
1919ல் முதலாவது பொதுவுடைமை அனைத்துலகம் மாஸ்கோவில் நடைபெற்றது.
1930ல் மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.
1935ல் சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மகிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.
1939ல் கர்தினால் இயூசினோ பசெலி பன்னிரண்டாம் பயசு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: முதலாவது செருமனியப் படைகள் பல்கேரியாவினுள் நுழைந்தன.
1943ல் இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் சமரின் போது அமெரிக்க மற்றும் ஆத்திரேலியப் படைகள் சப்பானியக் கப்பல்களை தாக்கி மூழ்கடித்தன.
1946ல் ஹோ சி மின் வட வியட்நாமின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1955ல் கம்போடியா மன்னர் நொரடோம் சீயனூக் பதவி விலகினார். அவரது தந்தை நொரடோம் சுராமரித் கம்போடிய மன்னராக முடி சூடினார்.
1956ல் மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1958ல் தி.மு.க. இந்திய மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
1962ல் பர்மாவில் இராணுவத் தளபதி நெ வின் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1969ல் பிரான்சின் துலூஸ் நகரில் ஆங்கிலேய-பிரெஞ்சு கான்கோர்டு விமானம் தனது முதலாவது சோதனைப் பறப்பில் ஈடுபட்டது.
1970ல் ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.
1972ல் நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
1978ல் செக் விண்வெளி வீரர் விளாதிமிர் ரெமேக் விண்வெளிக்குச் சென்ற முதலாவது உருசியர் அல்லது அமெரிக்கர் அல்லாத விண்வெளி வீரர் என்ற பெயரைப் பெற்றார்.
1989ல் அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் (CFC) தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை விதிக்க 12 ஐரோப்பிய சமூக நாஅடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.
1990ல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.
1991ல் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்க்கப்பட்ட தானுந்துக் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
1992ல் திரான்சுனிஸ்திரியா போர் ஆரம்பமானது.
1992ல் ஆர்மீனியா, அசர்பைஜான், கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, சான் மரீனோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1995ல் யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.
1998ல் வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.
2002ல் ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர்.
2017ல் மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 02-03 | March 02

480ல் இத்தாலியக் கிறித்தவப் புனிதரான‌ நூர்சியாவின் பெனடிக்ட் பிறந்த நாள். (இறப்பு-543)
1810ல் திருத்தந்தையான‌ பதின்மூன்றாம் லியோ பிறந்த நாள். (இறப்பு-1903)
1824ல் செக் நாட்டு இசையமைப்பாளரும் இசைக்கலைஞருமான‌ பெட்ரிக் சிமேத்தானா பிறந்த நாள். (இறப்பு-1884)
1876ல் திருத்தந்தையான‌ பன்னிரண்டாம் பயஸ் பிறந்த நாள். (இறப்பு-1958)
1896ல் தமிழறிஞரான‌ ரா. பி. சேதுப்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1961)
1917ல் இந்தியக் கட்டடக் கலைஞரான‌ லாரி பேக்கர் பிறந்த நாள். (இறப்பு-2007)
1918ல் தமிழகத் திரைப்பட நடிகரான‌ ரஞ்சன் பிறந்த நாள். (இறப்பு-1983)
1920ல் இலங்கை மலையக எழுத்தாளரான‌ கே. கணேஷ் பிறந்த நாள். (இறப்பு-2004)
1923ல் தமிழக நகைச்சுவை நடிகையான‌ சுந்தரிபாய் பிறந்த நாள்.
1926ல் அமெரிக்கப் பொருளியலாளரும் வரலாற்றாளருமான‌ முரே ரோத்பார்ட் பிறந்த நாள். (இறப்பு-1995)
1931ல் சோவியத் ஒன்றியத்தின் 8-ஆவது அரசுத்தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான‌ மிக்கைல் கொர்பச்சோவ் பிறந்த நாள். (இறப்பு-2022)
1931ல் தமிழக எழுத்தாளரான‌ அழகிரி விசுவநாதன் பிறந்த நாள்.
1935ல் வயலின் இசைக்கலைஞரான‌ குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த நாள். (இறப்பு-2008)
1940ல் பாக்கித்தானின் 12வது அரசுத்தலைவரான‌ மம்நூன் ஹுசைன் பிறந்த நாள்.
1948ல் உருசிய-அமெரிக்க இயற்பியலாளரான‌ ஆந்திரேய் இலிந்தே பிறந்த நாள்.
1949ல் இலங்கை அரசியல்வாதியான‌ தினேஷ் குணவர்தன பிறந்த நாள்.
1963ல் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான‌ வித்தியாசாகர் பிறந்த நாள்.
1968ல் அமெரிக்க நடிகரான‌ டேனியல் கிரெய்க் பிறந்த நாள்.
1972ல் இலங்கை-இங்கிலாந்து தொழிலதிபரான‌ சுபாஸ்கரன் அல்லிராஜா பிறந்த நாள்.
1980ல் ஆத்திரேலிய நடிகையான‌ ரிபெல் வில்சன் பிறந்த நாள்.
1981ல் இலங்கைத் திரைப்பட மற்றும் நாடக நடிகரான‌ தர்சன் தர்மராஜ் பிறந்த நாள். (இறப்பு-2022)
1983ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான‌ ரவி கிருஷ்ணா பிறந்த நாள்.
1989ல் ஆங்கிலேய நடிகையான‌ நத்தலி இமானுவேல் பிறந்த நாள்.
1990ல் இந்தியத் திரைப்பட நடிகரான‌ டைகர் ஷெராப் பிறந்த நாள். .

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 02-03 | March 02

274ல் பாரசீக இறைவாக்கினரான‌ மானி இறப்பு நாள். (பிறப்பு-216)
1835ல் புனித உரோமைப் பேரரசரான‌ இரண்டாம் பிரான்சிசு இறப்பு நாள். (பிறப்பு-1768)
1840ல் செருமானிய மருத்துவரும் வானியலாளருமான‌ ஹென்ரிச் ஒல்பெர்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1758)
1920ல் தமிழக எழுத்தாளரான‌ தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1854)
1930ல் ஆங்கிலேய புதின எழுத்தாளரும் கவிஞருமான‌ டி. எச். லாரன்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1885)
1939ல் ஆங்கிலேய தொல்லியலாளரும் வரலாற்றாளருமான‌ ஹாவர்ட் கார்ட்டர் இறப்பு நாள். (பிறப்பு-1874)
1949ல் இந்தியாவின் முதல் பெண் ஆளுநரும் இந்தியக் கவிஞரும் செயற்பாட்டாளருமான‌ சரோஜினி நாயுடு இறப்பு நாள். (பிறப்பு-1879)
1991ல் இலங்கை அரசியல்வாதியான‌ ரஞ்சன் விஜேரத்ன இறப்பு நாள். (பிறப்பு-1931)
2006ல் மலையாளக் கவிஞரான‌ குஞ்சுண்ணி இறப்பு நாள். (பிறப்பு-1927)
2009ல் கினி-பிசாவு அரசுத்தலைவரான‌ ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா இறப்பு நாள். (பிறப்பு-1939)
2016ல் தமிழறிஞரும் பேச்சாளரும் எழுத்தாளருமான‌ இரா. செல்வக்கணபதி இறப்பு நாள். (பிறப்பு-1940)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 01
Next articleMarch 03 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 03