என் செல்ல மகள் கவிதைகள் Amma Chella Magal (Tamilpiththan kavithai-36) Tamil Kavithai Lyrics

0

பூக்களில் மது அருந்திய பட்டாம் பூச்சிகள்
போதை தலைக்கேறியதால்
போக வழி தெரியாது திண்டாடின..!

தென்றல் காற்றின் முத்தத்தில்
நனைந்த மலர்கள்
வெட்கத்தில் தலையசைத்தன..!

பனியில் நனைந்த கதிர்கள்
சூரிய ஒளி பட்டு தேகம்
சிலிர்த்து மினு மினுத்தன..!

நிலவின் ஒளியில் இரவு முழுதும்
காதலில் திளைத்த சிட்டுக்கள்
கானம் பாடின..!

தாய்ப்பசுவிடம் பால் குடித்து
வாயோரம் வழிந்த பாலுடன்
துள்ளிக் குதித்தது கன்றுக்குட்டி..!

நீண்ட நேரம் தூங்கி எழுந்த சூரியன்
உட்சாகத்தில் தன் ஒழியை
பூமித்தாயில் மேனியில் பதித்தான்..!

காதலுடன் கரையை அணைக்க‌
கானம் பாடி ஓயாது ஓடி வரும்
கடல் அலைகள்..!

இவை அனைத்தின் அழகையும்
தோற்கடித்து நின்றது
காலையில் சோம்பல் முறித்து எழுந்த‌
என் செல்ல மகளின் அந்த சிறு புன்னகை..!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 30.07.2022 Today Rasi Palan 30-07-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleநீர் வீழ்ச்சி (அருவி) Neer Veelchi (Aruvi) Waterfall (Tamilpiththan kavithai-37) Tamil Kavithai Lyrics