கண்களை மூடினேன்
அயர்ந்து போனேன்
கம்பிக் கதவுகளுக்கிடையே
எட்டிப் பார்த்தாள்
நீதி தேவதை..!
ஏய் மானிடா
ஏன் என் கண்களை
கட்டிவிட்டாய்?
என் கண்ணீர் துளிகளை
பார்க்க கூடாதென்றா?
உன் இதயத்தின் கதவுகளையும்
மூடி விட்டாய்..!
இறுதியில் வழி தெரியாது
நின்ற என்னை
கயவர்கள் பிடித்துக் கொண்டனர்
அடைத்து விட்டனர்
ஆயுள் கைதியாய்
கம்பிக் கதவுகளுக்கிடையில்..!
திடுக்கிட்டு கண் விழித்தேன்
காணவில்லை நீதி தேவதையை
மீண்டும் கண்களை மூடுகிறேன்
அந்த அழகு மங்கையை
கனவிலாவது விடுவித்துவிட
வேண்டும் என்ற ஆசையில்..!
அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: