June 22 Today Special | June 22 What Happened Today In History. June 22 Today Whose Birthday (born) | June-22th Important Famous Deaths In History On This Day 22/06 | Today Events In History June-22th | Today Important Incident In History | ஜூன் 22 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 22-06 | ஆனி மாதம் 22ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 22.06 Varalatril Indru Nadanthathu Enna.
Today Special Historical Events In Tamil | 22-06
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 22-06
- குயெர்ன்சி, மாண் தீவு, யேர்சி ஆகிய தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
- எல் சால்வடோரில் ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 22-06 June 22
- கிமு 168ல் மக்கெதோனிய மன்னர் பெர்சியசை பித்னா போரில் உரோமர்கள் வென்றனர்.மூன்றாம் மக்கெதோனியப் போர் பெர்சியசு சரணடைந்ததை அடுத்து முடிவுக்கு வந்தது.
- 813ல் பைசாந்திய இராணுவத்தை வெர்சினிக்கியாப் போரில் பல்காரியர்கள் வென்றனர். ஆர்மீனியாவின் ஐந்தாம் லியோவுக்கு பேரரசர் முதலாம் மைக்கேல் தனது பதவியைக் கையளித்தார்.
- 1622ல் மக்காவு போரில் டச்சு ஊடுருவலை போர்த்துக்கீசப் படையினர் முறியடித்தனர்.
- 1633ல் உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் கலிலியோ கலிலி அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
- 1658ல் ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து மூன்றரை மாத கால முற்றுகையின் பின்னர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.
- 1774ல் பிரித்தானியர் வட அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்ற நாடான கியூபெக்கின் அரசமைப்பை நிர்ணயித்து கியூபெக் சட்டத்தைக் கொண்டுவந்தனர்.
- 1783ல் ஐசுலாந்தின் லாக்கி எரிமலை வெடிப்பினால் உருவான நச்சு வாயு பிரான்சின் லே ஆவரை எட்டியது.
- 1825ல் நில மானிய முறைமையை பிரித்தானிய நாடாளுமன்றம் இல்லாதொழித்தது.
- 1893ல் பிரித்தானியாவின் விக்டோரியா கப்பலுடன் அரச கடற்படைக் கப்பல் காம்பர்டௌன் மோதியதில் 358 பேருடன் அக்கப்பல் கடலில் மூழ்கியது.
- 1897ல் இந்தியாவின் புனே நகரில் பிரித்தானியக் குடியேற்ற அதிகாரிகள் சார்லசு ராண்ட், சார்லசு ஏயர்ஸ்டு ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1898ல் எசுப்பானிய அமெரிக்கப் போர் நடைபெற்றதுடன் ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு கியூபாவில் தரையிறங்கியது.
- 1911ல் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மற்றும் மேரி ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் அரசராகவும், அரசியாகவும் முடி சூடினர்.
- 1918ல் அமெரிக்காவின் இந்தியானாவில் தொடருந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் உயிரிழந்ததுடன் 127 பேர் வரை காயமடைந்தனர்.
- 1921ல் எசுப்பானிய இராணுவம் எசுப்பானிய மொரோக்கோவின் ரிப் மலைத்தொடர் பகுதியில் நடந்த போரில் பேர்பர்களிடம் பெரும் தோல்வி கண்டது.
- 1930ல் ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது.
- 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது பிரான்சு செருமனியுடன் போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தியது.
- 1941ல் இரண்டாம் உலகப் போரில் பர்பரோசா நடவடிக்கையால் செருமனி சோவியத் ஒன்றியத்தை ஊடுருவியது.
- 1941ல் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.
- 1942ல் இரண்டாம் உலகப் போரில் துப்ருக் கைப்பற்றப்பட்டதை அடுத்து இர்வின் ரோமெல் படைத்துறை உயர்தர தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
- 1945ல் இரண்டாம் உலகப் போரில் ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.
- 1948ல் மேற்கிந்தியக் குடியேறிகள் 802பேர் இலண்டன் வந்து சேர்ந்தனர்.
- 1957ல் முதற்தடவையாக ஆர்-12 ரக ஏவுகணையை சோவியத் ஒன்றியம் வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
- 1978ல் புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1992ல் வாச்சாத்தி வன்முறையில் தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் நடத்திய வன்முறைகளில் 34 பேர் உயிரிழந்ததுடன் 18 பெண்கள் வன்புணரப்பட்டதுடன் 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.
- 2002ல் ஈரானின் வடமேற்கே 6.5 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 261 பேர் உயிரிழந்தனர்.
- 2009ல் இரண்டு தொடருந்துகள் வாசிங்டனில் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் காயமடைந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 22-06 June 22
- 1805ல் இத்தாலிய ஊடகவியலாளரும் அரசியல்வாதியுமான ஜிசொப்பி மாசினி பிறந்த நாள் (இறப்பு 1872)
- 1856ல் ஆங்கிலேய புதின எழுத்தாளரான எச். ரைடர் அக்கார்டு பிறந்த நாள் (இறப்பு 1925)
- 1864ல் செருமானியக் கணிதவியலாளரான ஹெர்மான் மின்கோவ்ஸ்கி பிறந்த நாள் (இறப்பு 1909)
- 1892ல் ஈழத்துப் பத்திரிகையாளரும் பதிப்பாளரும் சமூக சேவையாளருமான நா. பொன்னையா பிறந்த நாள் (இறப்பு 1951)
- 1912ல் தமிழகக் கடம் கலைஞரான ஆலங்குடி இராமச்சந்திரன் பிறந்த நாள் (இறப்பு 1975)
- 1927ல் சிங்களத் திரைப்பட நடிகரான ஜோ அபேவிக்கிரம பிறந்த நாள் (இறப்பு 2011)
- 1932ல் இந்திய நடிகரான அம்ரீஷ் பூரி பிறந்த நாள் (இறப்பு 2005)
- 1940ல் ஈரானியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான அப்பாஸ் கியரோஸ்தமி பிறந்த நாள்
- 1944ல் தமிழக எழுத்தாளரான எ. சிட்னி சுதந்திரன் பிறந்த நாள்
- 1949ல் அமெரிக்க நடிகையும் பாடகியுமான மெரில் ஸ்ட்ரீப் பிறந்த நாள்
- 1949ல் அமெரிக்க அரசியல்வாதியான எலிசபத் வொரன் பிறந்த நாள்
- 1964ல் அமெரிக்க எழுத்தாளரான டான் பிரவுன் பிறந்த நாள்
- 1974ல் பிரித்தானிய அரசியல்வாதியான எலன் ஜோ காக்சு பிறந்த நாள் (இறப்பு 2016)
- 1974ல் இந்திய நடிகரான விஜய் பிறந்த நாள்
- 1974ல் இந்தியத் திரைப்பட நடிகையான தேவயானி பிறந்த நாள்
- 1984ல் செர்பிய டென்னிசு விளையாட்டு வீரரான யான்கோ டிப்சாரெவிச் பிறந்த நாள்
- 1984ல் யமெய்க்காத் துடுப்பாளரான ஜெரோம் டெய்லர்
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 22-06 June 22
- 1874ல் ஆங்கிலேய சதுரங்க வீரரான ஹோவார்ட் இசுட்டான்டன் இறப்பு நாள் (பிறப்பு 1810)
- 1940ல் உருசிய-செருமானிய அறிவியலாளரும் காலநிலை ஆய்வாளருமான விளாதிமிர் கோப்பென் இறப்பு நாள் (பிறப்பு 1846)
- 1969ல் அமெரிக்க நடிகையும் பாடகியுமான ஜூடி கார்லேண்ட் இறப்பு நாள் (பிறப்பு 1922)
- 1987ல் அமெரிக்க நடிகரும் பாடகருமான பிரெட் அஸ்ரயர் இறப்பு நாள் (பிறப்பு 1899)
- 2007ல் ஈழத்து எழுத்தாளரான சு. வேலுப்பிள்ளை இறப்பு நாள் (பிறப்பு 1921)
- 2014ல் இந்திய இயக்குநரான ராம நாராயணன் இறப்பு நாள் (பிறப்பு. 1949)
- 2016ல் இலங்கை ஆவண அறிஞரும் தமிழார்வலரும் எழுத்தாளருமான குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் இறப்பு நாள் (பிறப்பு 1934)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: