June 21 Today Special | June 21 What Happened Today In History. June 21 Today Whose Birthday (born) | June-21th Important Famous Deaths In History On This Day 21/06 | Today Events In History June-21th | Today Important Incident In History | ஜூன் 21 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 21-06 | ஆனி மாதம் 21ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 21.06 Varalatril Indru Nadanthathu Enna.
Today Special Historical Events In Tamil | 21-06
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 21-06
- எகிப்து, லெபனான், ஜோர்தான், சிரியா, உகாண்டா, பாக்கித்தான், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா போன்ற நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
- பன்னாட்டு யோகா நாளாக கொள்ளப்படுகிறது.
- உலக இசை நாள் கொண்டாடப்படுகிறது.
- உலக மனிதநேய நாள் கொண்டாடப்படுகிறது.
- உலக நீராய்வியல் நாள் கொண்டாடப்படுகிறது.
- தேசிய பழங்குடிகள் நாளாக கொள்ளப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 21-06 June 21
- 1307ல் மங்கோலியர்களின் ககான் (பேரரசர்) ஆகவும் யுவான்களின் அரசராகவும் குலுக் கான் முடி சூடினார்.
- 1529ல் வடக்கு இத்தாலியில் இருந்து பிரெஞ்சுப் படையினர் எசுப்பானியர்களால் வெளியேற்றப்பட்டனர்.
- 1621ல் முப்பதாண்டுப் போர் நடைபெற்றதுடன் பிராகா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1734ல் மரீ-யோசப் அஞ்செலீக் என்ற அடிமைப் பெண் மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தூக்கிலிடப்பட்டார்.
- 1736ல் ஒல்லாந்தர் உள்ளூர் மொழிகளில் நூல்கள் அச்சிட இலங்கையில் அச்சியந்திரசாலையை நிறுவினர்.
- 1749ல் ஹாலிஃபாக்ஸ் அமைக்கப்பட்டது.
- 1788ல் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக நியூ ஹாம்சயர் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1791ல் பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றதுடன் பிரான்சின் பதினாறாம் லூயியும் அவரது குடும்பத்தினரும் பாரிசை விட்டு வெளியேறினர்.
- 1898ல் எசுப்பானியாவிடம் இருந்து அமெரிக்கா குவாமைக் கைப்பற்றியது.
- 1900ல் சீனா பேரரசி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, சப்பான் ஆகியவை மீது டோவாகர் சிக்சியின் ஆணைப்படி ஆகியவை மீது போரை அறிவித்தது.
- 1919ல் காவல்துறையினர் கனடா, வினிப்பெக் நகரில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர்.
- 1919ல் இசுக்கொட்லாந்து, ஓர்க்னியில் செருமானியக் கப்பல் ஒன்றை அதன் கப்டன் லூர்விக் வொன் ரியூட்டர் வேண்டுமென்றே மூழ்கடித்ததில் ஒன்பது மாலுமிகள் உயிரிழந்தனர் இதுவே முதலாம் உலகப் போரின் கடைசி உயிரிழப்புகளாகும்.
- 1929ல் கிறிஸ்தேரோ போர் மெக்சிக்கோவில் முடிவுக்கு வந்தது.
- 1930ல் ஓராண்டுக்கு இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு பிரான்சில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
- 1940ல் வடமேற்குப் பெருவழி ஊடான மேற்கிலிருந்து கிழக்குக்கான முதலாவது வெற்றிகரமான கடற்பயணம் பிரிட்டிசு கொலம்பியா, வான்கூவரில் இருந்து ஆரம்பமாகியது.
- 1940ல் இரண்டாம் உலகப் போரில் பிரான்சு மீது இத்தாலி நடத்திய முற்றுகை தோல்வியடைந்தது.
- 1942ல் இரண்டாம் உலகப் போரில் சப்பானிய நீர்மூழ்கி ஒன்று கொலம்பியா ஆற்றில் இருந்து அமெரிக்கா, ஓரிகன் மாநிலத்தில் கொலம்பியா ஆற்றில் இருந்து குண்டுகளை ஏவியது.
- 1942ல் இரண்டாம் உலகப் போரில் துப்ருக் இத்தாலிய செருமனியப் படையினரிடம் வீழ்ந்தது.
- 1945ல் இரண்டாம் உலகப் போரில் ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.
- 1963ல் ஆறாம் பவுல் என்ற பெயரில் கருதினால் கியோவன்னி பத்தீசுத்தா மொண்டினி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1964ல் குடிசார் இயக்க உரிமைத் தொழிலாளர்கள் மூவர் கு கிளக்சு கிளான் இயக்க உறுப்பினர்களால் அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1990ல் விடுதலைப் புலிகளால் மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்டது.
- 2000ல் ஐக்கிய இராச்சியத்தில் நிறைவேற்றப்பட்ட தற்பால்சேர்க்கையை ‘ஊக்குவிப்பது’ சட்டவிரோதமானது என்ற சட்டமூலம் இசுக்கொட்லாந்தில் 99:17 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
- 2002ல் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
- 2004ல் மனித விண்வெளிப் பறப்பை முதலாவது தனியார் விண்ணூர்தி ஸ்பேஸ்சிப்வன் மேற்கொண்டது.
- 2006ல் புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு துணைக்கோள்களுக்கு நிக்ஸ், ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.
- 2009ல் கிறீன்லாந்து தன்னாட்சி பெற்றது.
- 2012ல் 200 ஆப்கானிய ஏதிலிகளைக் கொண்ட படகு இந்தியப் பெருங்கடலில் சாவகத்திற்கும் கிறிஸ்துமசு தீவுக்கும் இடையில் மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்ததுடன் 70 பேர் காணாமல் போயினர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 21-06 June 21
- 598ல் திருத்தந்தை முதலாம் மார்ட்டின் பிறந்த நாள் (இறப்பு 656)
- 1863ல் செருமானிய வானியலாளரான மேக்சு வுல்ஃப் பிறந்த நாள் (இறப்பு 1932)
- 1870ல் போலந்து-செருமானிய வேதியியலாளரான கிளாரா இம்மெர்வார் பிறந்த நாள் (இறப்பு 1915)
- 1880ல் அமெரிக்க மருத்துவரும் உளவியலாளருமான ஆர்னல்டு கெசெல் பிறந்த நாள் (இறப்பு 1961)
- 1905ல் பிரான்சிய மெய்யியலாளரும் நூலாசிரியருமான இழான் பவுல் சார்த்ர பிறந்த நாள் (இறப்பு 1980)
- 1916ல் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளருமான எர்பெர்ட் ஃபிரீடுமேன் பிறந்த நாள் (இறப்பு 2000)
- 1925ல் பகுத்தறிவாளரான வே. ஆனைமுத்து பிறந்த நாள்
- 1926ல் பிரான்சிய-அமெரிக்க ஒளிப்பதிவாளரான கான்ராடு ஹால் பிறந்த நாள் (இறப்பு 2003)
- 1927ல் இந்திய இதழியலாளரும் எழுத்தாளருமான பீ. ஜீ. வர்கீஸ் பிறந்த நாள் (இறப்பு 2014)
- 1947ல் நோபல் பரிசு பெற்ற ஈரானிய நீதிபதியும் செயற்பாட்டாளருமான சீரீன் இபாதி பிறந்த நாள்
- 1953ல் பாக்கித்தானின் 11வது பிரதமரான பெனசீர் பூட்டோ பிறந்த நாள் (இறப்பு 2007)
- 1955ல் பிரான்சிய துடுப்பாட்ட வீரரான மிச்செல் பிளாட்டினி பிறந்த நாள்
- 1961ல் இந்தோனேசியாவின் 7வது அரசுத்தலைவரான ஜோக்கோ விடோடோ பிறந்த நாள்
- 1965ல் சீன விண்வெளிவீரரான யங் லிவே பிறந்த நாள்
- 1965ல் அமெரிக்க இயக்குநரும் தயாரிப்பாளரான லானா வச்சோவ்சுக்கி பிறந்த நாள்
- 1967ல் தாய்லாந்தின் 28வது பிரதமரான யிங்லக் சினாவத்ரா பிறந்த நாள்
- 1979ல் அமெரிக்க நடிகரான கிறிஸ் பிராட் பிறந்த நாள்
- 1982ல் கேம்பிரிட்ச் கோமகனான இளவரசர் வில்லியம் பிறந்த நாள்
- 1982ல் தமிழக கருநாடக இசைப் பாடகரான சிக்கில் குருசரண் பிறந்த நாள்
- 1983ல் அமெரிக்க செயற்பாட்டாளரான எட்வேர்ட் சுனோவ்டன் பிறந்த நாள்
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 21-06 June 21
- 1377ல் இங்கிலாந்தின் மன்னரான மூன்றாம் எட்வர்டு இறப்பு நாள் (பிறப்பு 1312)
- 1527ல் இத்தாலிய வரலாற்றாளரான நிக்கோலோ மாக்கியவெல்லி இறப்பு நாள் (பிறப்பு 1469)
- 1591ல் இத்தாலியப் புனிதரான அலோசியுஸ் கொன்சாகா இறப்பு நாள் (பிறப்பு 1568)
- 1631ல் ஆங்கிலேயத் தேடலறிஞரான யோன் சிமித் இறப்பு நாள் (பிறப்பு 1580)
- 1857ல் பிரான்சிய வேதியியலாளரான லூயி ஜாக் தெனார் இறப்பு நாள் (பிறப்பு 1777)
- 1874ல் சுவீடன் இயற்பியலாளரும் வானியலாளருமான ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம் இறப்பு நாள் (பிறப்பு 1814)
- 1940ல் இந்துத்துவவாதியான கேசவ பலிராம் ஹெட்கேவர் இறப்பு நாள் (பிறப்பு 1889)
- 1954ல் பல்லிணைவுப் பட்டிகையை உருவாக்கிய சுவீடன்-அமெரிக்கப் பொறியியலாளரான கிடியொன் சண்டுபெக்கு இறப்பு நாள் (பிறப்பு 1880)
- 1957ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான ஜொகன்னஸ் ஸ்டார்க் இறப்பு நாள் (பிறப்பு 1874)
- 1970ல் இந்தோனேசியாவின் 1வது அரசுத்தலைவரான சுகர்ணோ இறப்பு நாள் (பிறப்பு 1901)
- 1994ல் அமெரிக்க வானியலாளரும் வானியற்பியலாளருமான வில்லியம் வில்சன் மார்கன் இறப்பு நாள் (பிறப்பு 1906)
- 2001ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான கே. வி. மகாதேவன் இறப்பு நாள் (பிறப்பு 1918)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: