June 20 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 20

0

Today Special Historical Events In Tamil | 20-06 June 20

June 20 Today Special | June 20 What Happened Today In History. June 20 Today Whose Birthday (born) | June-20th Important Famous Deaths In History On This Day 20/06 | Today Events In History June-20th | Today Important Incident In History | ஜூன் 20 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 20-06 | ஆனி மாதம் 20ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 20.06 Varalatril Indru Nadanthathu Enna.

June 20
June 20

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 20-06

  • 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக உலக அகதிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • எரித்திரியாவில் மாவீரர் நாளாக கொண்டாடப்படுகிறது.
  • தந்தையர்களை கெளரவிப்பதற்காக உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் தந்தையர் தினம் கொண்டாப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 20-06 June 20

  • 1248ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகமானது அரச அங்கீகாரத்தைப் பெற்ற கொண்டது.
  • 1631ல் அல்சீரியாவின் கடற்கொள்ளையாளர்களால் அயர்லாந்தில் பால்ட்டிமோர் நகரம் சூறையாடப்பட்டது.
  • 1685ல் மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார்.
  • 1756ல் நவாபுகளினால் கல்கத்தாவின் வில்லியம் கோட்டைக்கு அருகில் பிரித்தானியப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
  • 1819ல் அத்திலாந்திக்கைக் கடந்த முதலாவது நீராவிக் கப்பலான‌ அமெரிக்காவின் சவன்னா என்ற கப்பல் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை அடைந்தது.
  • 1837ல் விக்டோரியா பிரித்தானியாவின் பேரரசி ஆனார்.
  • 1840ல் தந்திக்கான காப்புரிமத்தை சாமுவெல் மோர்சு பெற்றார்.
  • 1858ல் 1857 குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
  • 1862ல் உருமேனியாவின் பிரதமரான‌ பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.
  • 1863ல் 35வது அமெரிக்க மாநிலமாக மேற்கு வர்ஜீனியா இணைந்ததுடன் அமெரிக்க உள்நாட்டுப் போர் நடைபெற்றது. .
  • 1877ல் உலகின் முதலாவது வர்த்தக முறைத் தொலைபேசி சேவையை அலெக்சாண்டர் கிரகாம் பெல் கனடா மற்றும் ஆமில்ட்டனில் ஆரம்பித்தார்.
  • 1887ல் மும்பையில் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.
  • 1900ல் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இருந்து வடமுனைக்கான ஆய்வுப் பயணத்தை எதுவார்த் தோல் என்பவர் தலைமையிலான 20-பேர் கொண்ட குழு ஆரம்பித்தது ஆயினும் இக்குழு திரும்பி வரவேயில்லை.
  • 1921ல் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் நான்கு-மாதப் பணி நிறுத்தத்தை சென்னையில் ஆரம்பித்தனர்.
  • 1940ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது இத்தாலி பிரான்சை ஊடுருவியது ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.
  • 1942ல் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர், கசிமியெர்சு பைச்சோவ்ஸ்கி மற்றும் மூவர் சுத்ஸ்டாப்பெல் காவலர்களாக உடையணிந்து அவுசுவித்சு வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றனர்.
  • 1943ல் இனக் கலவரம் அமெரிக்காவில் டிட்ராயிட் மாநிலத்தில் ஆரம்பித்து மூன்று நாட்கள் நீடித்தது இதன்போது 34 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1944ல் முதலாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்ற சாதனை படைத்த சோதனை எம்.டபிள்யூ 18014 வி-2 ஏவுகணை 176 கிமீ உயரத்தை அடைந்தது.
  • 1948ல் இடாய்ச்சு மார்க் நாணயம் கூட்டுப்படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு செருமனியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1956ல் அசுபரி பார்க் அருகே வெனிசுவேலாவைச் சேர்ந்த லீனியா 253 விமானம் நியூ செர்சி அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில் 74 பேர் உயிரிழந்தனர்.
  • 1959ல் கனடாவில் சென் லாரன்சு குடாவை அரிதான சூன் மாத வெப்ப மண்டலச் சூறாவளி தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர்.
  • 1960ல் மாலி கூட்டமைப்பு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றதுடன் மாலி, செனிகல் என இரண்டாகப் பிரிவடைந்தது.
  • 1973ல் அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் இடதுசாரிகள் மீது குறிசுடுநர்கள் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
  • 1990ல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1990ல் சிறுகோளான‌ 5261 யுரேக்கா கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1990ல் ஈரானின் வடக்கே 7.4 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 35,000–50,000 வரையானோர் உயிரிழந்தனர்.
  • 1991ல் செருமன் நாடாளுமன்றம் செருமனியின் தலைநகரை பான் நகரில் இருந்து பெர்லினுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தது.
  • 1994ல் ஈரானில் இமாம் ரேசா மதத்தலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்ததுடன் 300 பேர் வரை காயமடைந்தனர்.
  • 2003ல் புளோரிடாவின் சென். பீட்டர்சுபர்க் நகரில் விக்கிமீடியா நிறுவனம் ஆரம்பமானது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 20-06 June 20

  • 1760ல் பிரித்தானிய அரசியல்வாதியும் குடியேற்றத் திட்ட நிர்வாகியுமான‌ ரிச்சர்டு வெல்லசுலி பிறந்த நாள் (இறப்பு 1842)
  • 1861ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரிவேதியியலாளரான‌ பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு பிறந்த நாள் (இறப்பு 1947)
  • 1884ல் அமெரிக்க வானியலாளரான‌ மேரி ஆர். கால்வெர்ட் பிறந்த நாள் (இறப்பு 1974)
  • 1927ல் கேரள அரசியல்வாதியான‌ கே. கே. பாலகிருஷ்ணன் பிறந்த நாள் (இறப்பு 2000)
  • 1939ல் இந்தியத் துடுப்பாளரான‌ ரமாகாந்த் தேசாய் பிறந்த நாள் (இறப்பு 1998)
  • 1941ல் இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகரான‌ சிலோன் சின்னையா பிறந்த நாள் (இறப்பு 2011)
  • 1949ல் இலங்கையின் 8வது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பிறந்த நாள்
  • 1952ல் இந்திய எழுத்தாளரும் கவிஞருமான‌ விக்ரம் சேத் பிறந்த நாள்
  • 1954ல் இந்தியத் தானுந்து விளையாட்டு வீரரான‌ சுந்தரம் கரிவரதன் பிறந்த நாள் (இறப்பு 1995)
  • 1967ல் அமெரிக்க-ஆத்திரேலிய நடிகையான‌ நிக்கோல் கிட்மேன் பிறந்த நாள்
  • 1970ல் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகரான‌ கானா பாலா பிறந்த நாள்
  • 1971ல் அமெரிக்க நடிகரான‌ ஜோஷ் லுகாஸ் பிறந்த நாள்
  • 1974ல் இலங்கை-கனடிய இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ லெனின் எம். சிவம் பிறந்த நாள்
  • 1978ல் ஆங்கிலேயக் கால்பந்து வீரரான‌ பிராங்கு லம்பார்டு பிறந்த நாள்
  • 1984ல் இந்திய நடிகையான‌ நீத்து சந்திரா இந்திய நடிகை பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 20-06 June 20

  • 656ல் அரேபிய கலிபாவான‌ உதுமான் இறப்பு நாள் (பிறப்பு 577)
  • 1617ல் மைசூர் மன்னரான‌ முதலாம் இராச உடையார் இறப்பு நாள் (பிறப்பு 1552)
  • 1837ல் ஐக்கிய இராச்சியத்தின் மன்னரான‌ நான்காம் வில்லியம் இறப்பு நாள் (பிறப்பு 1765)
  • 1966ல் பெல்ஜிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் மதகுருவுமான‌ ஜார்ஜஸ் இலமேத்ர இறப்பு நாள் (பிறப்பு 1894)
  • 1971ல் ஈழத்துக் கவிஞரான‌ மகாகவி உருத்திரமூர்த்தி இறப்பு நாள் (பிறப்பு 1927)
  • 2005ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரும் பொறியியலாளருமான‌ ஜாக் கில்பி இறப்பு நாள் (பிறப்பு 1923)
  • 2006ல் தமிழகக் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் எழுத்தாளருமான‌ சுரதா இறப்பு நாள் (பிறப்பு 1921)
  • 2015ல் தமிழக வீணை இசைக்கலைஞரும் ஆர். பிச்சுமணி ஐயர் இறப்பு நாள் (பிறப்பு 1920)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 08.03.2021 Today Rasi Palan 08-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleJune 21 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 21